சனி, 3 மே, 2014




"ஹ
லோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும்  யாருக்கு எவ்வளவு சீட்டு கிடைக்கும்ங்கிற கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும் மட்டும் குறையவே குறையாது.''



""கரெக்ட்த்தாம்ப்பா.. ஓட்டு போட்ட மக்களும் சரி, ஓட்டு வாங்குன வேட்பாளர்களும் சரி, ரிசல்ட் எப்படி இருக்கும்ங்கிற எதிர்பார்ப் போடு இருக்காங்க.''

""மாநில உளவுத்துறை ஐ.ஜி. அம்ரேஷ் பூஜாரி, ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகி யிருக்கிற வாக்குகளின் அடிப்படை யிலும், தேர்தல் களம் தொடர்பான தன்னோட அனுபவத்தின் அடிப்படையிலும் ஒரு ரிப்போர்ட்டை, கொடநாட்டுக்கு ஜெ. கிளம்புறதுக்கு முன்னாடி கொடுத்திருக்காரு. அந்த ரிப்போர்ட்டில், அதாவது அ.தி.மு.க.வுக்கு 28 சீட்டுகளுக்குக் குறையாதுன்னும் குறிப்பிடப்பட்டி ருக்கு.'' 

""நால்வர் அணி மந்திரிகளும் 35 சீட் நிச்சயம்னு மேலிடத்துக்கிட்டே  சொல்லியிருக்காங்களாமே...''

""மத்த மந்திரிகளோ பயத்தில் இருக்காங்கன்னு போன முறை நாம பேசினோமே... அதேபோல் தான் உளவுத்துறையை முன்பு பார்த்த சீனியர் அதிகாரி ஒருவர் ரிப்போர்ட் கொடுத்திருக்காராம். அதில் 20 டூ 22 சீட்கள் என்று இருக்கிறது. இரண்டு ரிப்போர்ட்டை வச்சிக்கிட்டு, கொடநாட்டில் ஜெ. அலசி ஆராய்கிறாராம்.''

""அ.தி.மு.க.வின் பண விநியோகம் பற்றி தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கூடி விவாதிக்கும்னு கலைஞரை சந்திச்சிட்டுத் திரும்பிய புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்லியிருக்காரே?''

""கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தி.மு.க வேட்பாளர்களும், கட்சியோட தேர்தல் பொறுப்பாளர்களும் தொடர்ந்து கலைஞரை சந்திச்சபடியே இருக்காங்க.  எல்லோருமே, அ.தி.மு.கவோட பண விநியோகம் பற்றியும் அதைத் தேர்தல் கமிஷன் கண்டுக்கவே யில்லைன்னும் சொல்லியிருக் காங்க. அதனாலதான் இந்த விவகாரம் சம்பந்தமா சட்டரீதியா நடவடிக்கை எடுக்க தி.மு.க தரப்பு வேகமாகியுள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க என்னதான் ஓட்டுக்கு 200, 500ன்னு பணம் கொடுத்திருந்தாலும், தி.மு.க.வோட வெற்றிவாய்ப்பைப் பறிக்க முடியாதுன்னும் வேட்பாளர்களும் பொறுப் பாளர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர் களும் கலைஞர்கிட்டே சொல்லியிருக்காங்க. ஹாங்காங் புறப்படுவதற்கு முன்னாடி கூட்டணிக் கட்சியினர்கிட்டேயும் தி.மு.க நிர்வாகிகள்கிட்டேயும் பேசிய மு.க.ஸ்டாலின் 30 சீட்டுக்குக் குறையாமல் தி.மு.க கூட்டணி ஜெயிக்கும்னு நம்பிக்கை தெரிவிச்சிட்டுப் போயிருக்காராம்.''

""எல்லாத் தரப்புக்கும் வெற்றி மேலே அதிக நம்பிக்கை  இருக்குதுன்னு சொல்லு.''…

""தேர்தல் களத்தை நல்லாத் தெரிஞ்ச அரசியல் நோக்கர்கள், அதிகாரிகள், காவல் துறையினரெல்லாம் இந்த முறை ரிசல்ட் எப்படியிருக்கும்னு சரியா கணிக்க முடிய லைன்னு சொல்றாங்க. ஏன்னா, 2009 எம்.பி தேர்தலுக்கும், 2014 எம்.பி. தேர்தலுக்கும் தமிழகத்தில் வாக்குப்பதிவில் பெருசா வித்தியாசம் ஏதுமில்லை. பணத்தை வாங்குனதுக்காக ஓட்டுப் போட்டிருந்தா, பர்சன்டேஜ் எக்கச்சக்கமா கூடியிருக்கணும். அப்படி எது வும் நடக்கலை. அதே நேரத்தில், 1 கோடிக்கும் அதிகமான புது வாக்காளர்கள் இந்த முறை ஓட்டுப் போட்டிருக்காங்க. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் அடிப்படையில் கணக்குப் பார்த்தால், ஒரு தொகுதிக்கு சரா சரியா 3 லட்சம் புது வாக்காளர்கள் ஓட்டுப் போட்டிருக்காங்க. இவங்க ஆதரவு யாருக்கு? மோடி அலையா? தேசியக் கட்சிகளுக்கான ஆதரவா? ஆம் ஆத்மி மேலே நம்பிக்கையா? மாநிலக் கட்சிகளை விரும்புறாங்களா? நோட்டாவுக்கு ஓட்டா? இப்படி நிறைய கேள்விகள் இருக்குது. இதுபற்றித் தெரியாத நிலையில், தேர்தல் ரிசல்ட் சம்பந்தமா எந்த முடிவுக்கும் வரமுடியாதுன்னும், புது வாக்காளர்கள்தான் இந்த முறை தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக இருப்பாங்கன்னும் சொல்றாங்க.''

""இந்தியா முழுவதுமுள்ள புதுவாக்காளர்கள் மேலேதானே  பா.ஜ.க கவனம் செலுத்திக் கிட்டிருக்குது. தமிழக நிலவரம் பற்றி அவங்க என்ன சொல்றாங்க?''

""பா.ஜ.க.வோட பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடிக்காக ஒரு தனி டீம் செயல்பட்டுக் கிட்டிருக்குது. அந்த டீமில் உள்ள மெம்பர்கள் கிட்ட பேசுனேங்க தலைவரே.. தமிழ்நாட்டில் ஜெ.வுக்கு மட்டும் அதிக சீட் கிடைச்சிடக் கூடாதுன்னும், அவர் கையில் அதிக எம்.பிக்கள் இருந்து, அந்த ஆதரவை நாங்க பெறவேண்டிய சூழ்நிலை அமைந்தால், ஒரு நாள்கூட மோடியால் நிம்மதியா ஆட்சி பண்ணமுடியாது. காங்கிரசை விட மோசமான இமேஜ் பி.ஜே.பி.க்கு உருவாயிடும்னும் சொல்லும் இவங்க, இன்னொரு முக்கியமான தகவலையும் சொன்னாங்க. அதாவது, மோடிக்கு காங்கிரசிலேயும் கம்யூனிஸ்ட்டிலேயும் மற்ற கட்சிகளிலேயிருந்தும் வெளிப்படும் எதிர்ப்பைவிட, சொந்தக் கட்சிக்குள்ளேதான் அதிக எதிர்ப்புன்னும், பா.ஜ.க.விலேயே நடக்கும் இந்த சதிகளைத்தான் இப்ப நாங்க முறியடிச்சிக்கிட்டிருக்கோம்னும், மோடிக்கு எதிரான டீமுக்கு 160 கிளப்னு பேரே இருக்குன்னும் சொன்னாங்க.''

""அது என்ன 160 கிளப்?''

""பா.ஜ.க.வுக்கு அதிக சீட் கிடைச்சாதானே மோடியால பிரதமராக முடியும்? அதனால 160 சீட்டுக்கு மேலே பா.ஜ.க.வுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு செயல்படுற டீம்ங்கிறதாலதான் அதற்கு 160 கிளப்னு பேராம். அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அனந்தகுமார், வெங்கையாநாயுடு, நிதின் கட்காரி இவங்களும் இவங்களோட ஆதரவாளர்களும்  பா.ஜ.க. அதிக இடங்களில் ஜெயிச்சிடக் கூடாதுன்னு ஒர்க் பண்ணுவதாக சொல்லுவதோடு, நமக்குப் புரியுற மாதிரி தமிழ்நாட்டிலிருந்தே உதாரணம் சொன்னாங்க.''

""தமிழ்நாட்டிலிருந்தா?''

""ஆமாங்க தலைவரே.. .. பா.ஜ.க கூட்டணிக்கு தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் வந்தால், தங்களுக்கு 5 சீட் போதும்னு சொல்லி செட்டிலான கட்சிதான் ம.தி.மு.க. கூட்டணி பலமடைஞ்சா, கிடைக்கிற சீட்டுகளெல்லாம் வெற்றி சீட்டுகள்தான்ங்கிற அடிப்படையில் 5-க்கு வைகோ ஓ.கே சொல்லியிருக்காரு. எதிர்பார்த்தபடி கூட்டணி அமைஞ்சபிறகும், ம.தி.மு.க.வுக்கு 7 சீட்டு களைத் தாராளமா கொடுத்திருக்குது பா.ஜ.க. இதன் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வோட வெற்றிவாய்ப்பு எண்ணிக்கையை குறைக்கணும்ங்கிறதுதான் 160 கிளப் பின் கணக்குன்னு சொல்லும் மோடியின் டீம், நீலகிரி யில் பா.ஜ.க வேட்பாளரின் மனு தள்ளுபடியானதும் இதே கணக்கில்தான்னு சொல்லுது. ஆந்திராவிலும் இப்படித்தானாம். தெலுங்குதேசம் கட்சியோடு தொகுதிப்பங்கீடு நடந்தப்ப, வெங்கையா நாயுடுவால திட்டமிட்டு சிக்கல் உருவாக்கப்பட்டது. அப்புறம், மோடி தலையிட்டுத் தீர்த்தாருன்னு சொல் றாங்க. கர்நாடகாவிலும் எடியூரப்பா வை மறுபடியும் பா.ஜ.க.வில் சேர்ப்ப தற்கு சுஷ்மா தரப்பிலிருந்து பிரச் சினையைக் கிளப்பியதாகவும் சொன்னதோடு தமிழ்நாட்டில் 40, கர்நாடகாவில் 28, ஆந்திராவில் 42-ன்னு தென்னிந்தியாவில் உள்ள இந்த 100 சீட்டுகளிலேயே இத்தனை பிரச்சினைன்னா, வடஇந்தியாவில் என்னென்ன சிக்கல்களை இந்த 160 கிளப் செஞ்சிருக்கும்னு புரிஞ்சுக் குங்கன்னு மோடி டீம் சொல் லுது. மகாராஷ்ட்ராவில் சிவ சேனாவோடு நீண்டகாலமா பா.ஜ.க கூட்டணி அமைச்சிருக்கிற நிலையில், சிவசேனாவுக்கு போட்டியா பால்தாக்கரே மருமகன் நடத்துற நவநிர்மாண் சேனாவோட ஆதரவை வாங்கி கூட்டணிக்குள் குழப்பம் உண்டாக்கியவர் நிதின் கட்காரிதான்னும் மோடி டீம் சொல்லுது.'' 

""கட்சிக்குள் நடக்கும் சதிவேலைகளை கண்டறிந்து சரி செய்வது தான் இந்த டீமோட வேலையா?''

""அது ஒரு பகுதி. கட்சிக்கு அப்பாற்பட்ட ஆட்களின் ஆதரவை யும், எதிர்முகாமின் ஆதரவையும் திரட்டுவது இன்னொரு பகுதி. கோவையில் பா.ஜ.க தரப்பு வேலையே செய்யலையாம். சிவகங்கையில் ஹெச்.ராஜாவுக்கு மோடி ஆதர வாளர்கள் மட்டும்தான் தேர்தல் வேலை பார்த்திருக்காங்க. மற்றவங்க ளெல்லாம் கன்னியாகுமரிக்குப் போய் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வேலை பார்த்தாங்களாம். இப்படி யெல்லாம் மூவ் நடப்பது தெரிந்து தான், மோடியின் தமிழக விசிட்டில் சினிமா ஸ்டார்களுடனான சந்திப்புகளை மோடி டீம் உருவாக்கியதாம். ரஜினி வீட்டுக்கு மோடி போனதும், வெளிமாநில ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை கோவை விசிட்டின்போது வரவழைச்சி சந்திச்சதும் மோடி டீமின் தனிப்பட்ட ஏற்பாடுகள் தானாம்.'' 

""ரஜினி வீட்டுக்கு மோடி வருகை பற்றி கடைசி நேரத்தில்தான் தனக்குத் தகவல் தெரியும்னு விஜயகாந்த்கிட்டே பொன்.ராதா கிருஷ்ணன் சொன்னதை நம்ம நக்கீரன்தான் அப்பவே சொன்னதே.. இந்தளவுக்கு மோடிக்காக தமிழக நிலவரங்களை யார் கவனிக்கிறாங் களாம்?''

""மோடி அரசோட முன்னாள் முதன்மைச் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதனுக்கு சொந்த ஊர் கும்பகோணம். மோடியின் ரூம் கதவைத் தட்டாம உள்ளே போகக் கூடிய அளவுக்கு இவருக்கு செல் வாக்கு உண்டு. அவர்தான் தென் னிந்தியா சம்பந்தப்பட்ட விவகாரங் களைக் கவனிச்சிக்கிறாரு. தமிழ்நாட் டைச் சேர்ந்த அதிகாரிகள் மேலே மோடிக்கு நிறைய நம்பிக்கை உண் டாம். எதிர்முகாமில் இருப்பவர் களிடம்கூட  இவங்களால பேச முடியும்னு மோடி நம்புறார்னு சொல்லும் அவரோட டீம், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைக்கூட, மோடி ஒரு நான்-பிராமின்னு சொல்லி அப் ரோச் பண்ண  முயற்சி நடந்ததா சொல்லுது.  இதுபோல முலாயம் சிங், லாலு போன்ற பா.ஜ.க எதிர்ப்பாளர்களையும் அப்ரோச் பண்ணுறாங்களாம். எல்லா இடத் திலும் அப்ரோச் பண்றோம். காங்கிரசுக்காக கடைசி நேரத்தில் பிரியங்கா பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சதும் எங்க ஃபைட் கடுமையாகியிருக்குன்னும் மோடி டீம் தரப்பில் சொல்லப்படுது.'' 

""மோடி டீம் ஆயிரம் சொன் னாலும் நம்ம ஊர் வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம் அர சியல் தலைவர்களிடம் டென்ஷ னை ஏற்படுத்தியுள்ளது உனக்குத் தெரியுமா?' 

""தெரியும்ங்க தலைவரே.. உங்களுக்கு இதிலெல்லாம் நம் பிக்கையில்லைன்னு எனக்குத் தெரியும். ஆனா, தலைவர்கள் பற்றியும் அரசியல் எதிர்காலம் பற்றியும் சொல்லப்படுற தகவல் களாச்சே, அதனால நாடி சோதி டம் என்ன சொல்லுதுங்கிற தையும் சொல்றேன். நம்ம சித்தர்கள் அகத்தியர், போகர், வசிஷ்டர் போன்றவர்கள் எதிர்காலம், கடந்த காலம், நிகழ்காலத்தை யெல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி வச்சிருக்காங்களாம். அதன் படி, இப்ப அமையப்போகிற ஆட்சி பற்றிய பாடலில், நாடாளும் மாமன்னன் மங்கை திவ்யமானவள் என்ற பாடல் வரிகள் வருகின்றனவாம்.''

""அப்படின்னா, இந்த முறை நாட்டை ஆளப்போகிறவர் ஆண் இல்லை, பெண்தான்னு சொல்லு...''

""ஆமாம்... ஆமாம்... 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, இதேமாதிரி இன்னொரு பாடலுக்கு விளக்கம் சொன் னாங்க. அதாவது, இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் தனித்து வாழும் பெண்மணியைப் போற்றி அந்தப் பாடல் எழுதப்பட்டிருந்ததால, ஜெ.தான் முதல்வராவார்னு சொன்னாங்க. அதுபோல அவரும் ஆனார்.''

""அப்படின்னா, இப்ப ஜெயலலிதா பிரதமரா?''

""அப்படியில்லை, மாமன்னன் மங்கை திவ்யமானவள்னு வருதே, அதாவது இல்லற வாழ்வில் ஈடுபாட்டுடன், கணவன்-குடும்பம் ஆகியோரை பராமரித்து, அரசியல் பரிபாலனமும் செய்யக்கூடியவர்னு அர்த்தமாம். ஜெயலலிதா தனித்து வாழும் பெண்மணி. மாமன்னன் மங்கை திவ்ய மானவள்ங்கிற பாட்டுக்குப் பொருத்தமா இப்ப இந்திய அரசியலில் இருக்கும், வட இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜோ, பிரியங்காவோ இருக்கலாம்னு அரசியல் தலைவர்களிடத்தில் நாடி சோதிடப் பேச்சு பெரிசா இருக்கு.  பிரியங்காவுக்கு வாய்ப்பு இல்லாததால் சுஷ்மா பக்கம் மகிழ்ச்சி வெள்ளம் ஓடுது. மோடி டீமின் நம்பிக்கைதான் என்னவோ?''
""அந்த விவரத்தை நான் சொல்றேன். மோடிக்கு விசா தராமல் இழுத்தடிச்ச அமெரிக்க அரசும்கூட, இப்ப மோடியை இந்தியாவோட வருங்கால பிரதமரா பார்க்கு தாம். இந்தியாவில் மோடி போன்ற மதவாதிகள் ஆட்சிக்கு வரமுடியாதுங்கிற எண்ணத்திலே இருந்தவர்தான் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரா இருந்த நான்சி பவல்.  மோடிக்கு விசா கிடைக்காமல் இருந்ததற்கு இவரும் ஒரு காரணம்னு சொல்லும் மோடி டீம், அந்த  நான்சிபவலே மோடியை சந்திச்சார்னா என்ன காரணம், அமெரிக்காவோட உளவுத்துறை அவங்க நாட்டுக்கு கொடுத்திருக்கிற ரிப்போர்ட்டில், 290 சீட்டுகளை பா.ஜ.க கூட்டணி ஜெயிக்கும்னு சொல்லியிருக்குது.  அதனாலதான் அமெரிக்கா வோட நிலைப்பாடு நிறைய மாறியிருக்குது. மோடியுட னான உறவை பேட்ச்-அப் பண்ணுவதற்காக அமெரிக்க தூதரகத்தில் 7 குஜராத் தியர்களுக்கு  போஸ்டிங் போட்டிருக்காங்களாம்.'' 

""நம்ம ஊர் சித்தர் வாக்கா, அமெரிக்கா உளவு ரிப்போர்ட்டான்னு பார்த்துரு வோம்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக