உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்படும் அறிவித்தல்
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் முதலாவது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சென்ற வருடம் சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இரண்டாவது சுற்றுப்போட்டி 19 / 20.04.2014 ஆகிய இரு தினங்கள் 12 பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டன
19/ 20.04.2014 அன்று காலை 09.00 மணிக்கு நியூலிசுமான் உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நோர்வே, இத்துடன் அவுஸ்ரேலிய நாட்டு வீரர்களும் வந்திருந்தார்கள் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. மங்கல விளக்கினை திரு. குழந்தைவேலு தங்கத்துரை அவர்கள் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து சுவிஸ்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்த சர்வதேச நடுவரான திரு. றோமன் பெஹ்குஸ் அவர்களும்,. உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஸ்தாபகர் திரு. கந்தையா சிங்கம் அவர்களும் ஏற்றி வைத்தார்கள்.
பின்னர் அகவணக்கத்துடன்; சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிறப்பு மலரினை பிரான்ஸ் நாட்டு „தமிழர் உள்ளரங்க விளையாட்டு அமைப்பு“ பூப்பந்தாட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு. கந்தையா ராஜ்குமார் அவர்களும், ஒருங்கிணைப்பாளரான திரு.த.சிவஸ்ரீ (பாலா) அவர்களும் வெளியீட்டு வைக்க திரு.றோமன் பெஹ்குஸ் அவர்களும், திரு.ரமேஸ் செல்லையா அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
இதன் பின்னர் பூப்பந்தாட்ட விளையாட்டுக்கள் திட்டமிட்டபடி ஆரம்பமாகின. சுவிஸ்லாந்தில் நடாத்தப்பட்ட போட்டியுடன் ஒப்பிடுகையில் வியக்கத்தக்க வகையில் வீரர்களின் விளையாட்டுத்திறன் மேம்பட்டு இருந்ததை எல்லோராலும் அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக ஜேர்மனி நாட்டிலிருந்து வருகை தந்திருந்த சகோதரிகளான ஜெயராஜா தீபிகா, ஜெயராஜா திரேசா இவர்களின் ஆட்ட நுணுக்கங்களையும், ஆட்டத்திறனையும் அவதானித்த சர்வதேச நடுவர் திரு றோமன் பெஹ்குஸ் அவர்கள் தமிழர்களிடையே சர்வதேச அளவில் விளையாடுவதற்கு வீராங்கனைகள் உருவாகிவிட்டார்கள் என்பதனை எல்லோருக்கும்
கூறியதை கேட்கும் பொழுது எம்மினத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு விடையமாக கருத முடிந்தது.
இவ்வாறு ஆண் போட்டியாளர்களிடமும் பல போட்டியாளர்கள் இனங்காணப்பட்டார்கள்.
இரண்டாம் கட்டப் போட்டிகள் யாவும் யார் வெல்லுவார்கள் என்பதனை தீர்மானிக்கமடியாத அளவில் விறுவிறுப்பாகவும் நெருங்கமாகவும் இருந்தது..
போட்டியாளர்களுக்கு அந்ததந்த நாட்டிலிருந்து வருகைதந்திருந்த பார்வையாளர்களின் கரகோசம், நாங்களும் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இருக்கிறோம் என்பதனை உணர்வு ரீதியாக வெளிக் கொண்டுவந்ததை யாரும் மறக்க முடியாது.
கால் இறுதிக்குப் பின்னரான போட்டிகள் யாவும் சர்வதேச தரத்திலானதாக இருந்தது அனைவரையும் மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. எமது இனத்தில் இவ்வளவு காலமும் எங்கிருந்தார்கள் என்ற கேள்வியே அனைவரிடமும் இருந்தது. முதன் முதலாக ஒரு விளையாட்டினை சர்வதேச ரீதியில் ஒருங்கிணைத்து நடந்து வரும் நிகழ்வு இதுதான் என்பதனை அனைவரும் பேசிக் கொண்டார்கள். அனைவரும் உலகத் தமிழர் பூபப்பந்தாட்டச் சம்மேளனத்துக்கு தமது வாழ்துக்களைச் தெரிவித்தனர்
இந்தப்போட்டிக்கு வடக்குக்கிழக்கு மாகாணங்களிலிருந்து நான்கு போட்டியாளர்கள் வருவதாக தீர்மானிக்கப்பட்டு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் போதிய கால அவகாசம் இன்மையினால் அவர்களுக்கான விசா ரத்துச் செய்யப்பட்டது வேதனைக்குரிய விடையமாகும்.
அத்துடன் இந்த வருட போட்டிகளின் அடிபடையில் தமிழர்களிடத்தே தர வரிசை பட்டியல் ஒன்றை உருவாக்க இருப்பதாக, அதன் ஒருங்கிணைப்பாளரான திரு.த.சிவஸ்ரீ (பாலா) அவர்கள் தெரிவித்தார்
பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மிகவும் அழகான பெறுமதியான வெற்றிக் கேடையங்களை வீரர்கள் தங்களது நாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
என்ற முனைப்பில் மிகவும் ஆர்வத்தோடு விளையாடினார்கள் என்பதனை விட போராடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.
பாரிஸ் நகர விளையாட்டுத் துறையை சார்ந்த, திரு GLEIZES JEROME (Conseillers de Paris) திரு GEILLOME MARTINAGE ( Conseillers Paris 20) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார்கள். வெற்றிக் கேடயங்களும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. போட்டிகள் யாவும் இரவு 8.00 மணியளவில் நிறைவு பெற்றது
பணப் பரிசில்களை யும் ஆதரவினையும் பின்வருவோர் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது
DAS FOUNDATION (CANADA), LILLY SPORTS (UK), UNITED INTERNATIONAL
CORPORATION (USA), Dr SRISALA SRIRANJAN (CANADA)
PARIS TAMIL.COM (FRANCE), TAMILCNN .COM (CANADA),
I@D (FRANCE), GOBAL & CO (FRANCE) BLUE ROSE V D O (FRANCE)
12 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன . அவைகள் பின்வருவன வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் விபரம்
Under 15 Boys
Ravikumar Akas France
Jeyarajaratnam Jehyanth France
Suthagar Agaran Switzerland
Under 15 Girls
Mary Pavanitha Antony Rajah France
Asmethaa Asokkumar United Kingdom
Laxsha Shan Germany
Under 20 Men
Pirathepan Uruthirasingham France
Jenushanth Sriramanan France
Archanan Hariraman United Kingdom
Men Singles Open
Shanmugarasa Thanjeevan France
Kristmen Niraj Canada
Balasubramaniyam Muralitharan Denamark
Men Doubles Open
Shanmugarasa Thanjeevan / Pratheepan Uruthirasingam France
Antony Jesuthasan Jeyakanth / Kristmen Niraj Canada
Gowridas Kodeswaran / Benedict Niraj United Kingdom
Girls Open
Theepika Jeyarajah Germany
Thiresha Jeyarajah Germany
Arshana Shanmugarajah France
Girls Doubles Open
Theepika Jeyarajah / Thiresha Jeyarajah Germany
Arshana Shanmugarajah / Nalayini Shanmugarajah France
Urmila Asokkumar / Kajeena Sooriyakumar United Kingdom/ France
Mixed Open
Thiresha Jeyarajah / Anuraj Lingeswaran Germany
Urmila Asokkumar / Nixan Kanthasamy United Kingdom / France
Bastien Mariyas / Diana Ladilaus Norway
Men Over 40
Wijay Mahendran United Kingdom
Antony Jesuthasan Jeyakanth Canada
Paransothy Shan Germany
Men Over 40 Doubles
Wijay Mahendran / Kandiah Lingeswararajah United Kingdom
Nirmalan Benedict / Kodeswaran Gowridas United Kingdom
Asokkumar Nagamuththu / Niranjan Yegeswaran United Kingdom
Men Over 50
Subash Hurunghee France
Kandiah Rajkumar France
Ambalavanar Sathiyanathan United Kingdom
Men Over 50 Doubles
Kandiah Rajkumar / Camillus Villvarajah France
Gunam sellan / Subash Hirunghee Germeny / France
Ambalavarar Sathiyanathan / Thayaparan Suntharalingam United Kingdom
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக