ஞாயிறு, 4 மே, 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் 
7–வது ஐ.பி.எல். போட்டித் தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நேற்று முதல் தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு பின்தங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்தது.
 
சென்னை, பஞ்சாப் அணிகள் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப்பைவிட முன்னிலையில் இருப்பதால் சென்னை அணி முதல் இடத்தை பிடித்தது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் 7–வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை நாளை (திங்கட்கிழமை) சந்திக்கிறது. இதில் வென்றால் சென்னை அணி தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும்.
 
ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3–வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ், ஆகிய 4 அணிகள் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன.
 
மும்பை இந்தியன்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளி பெற்று கடைசி இடமான 8–வது இடத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக