திங்கள், 28 பிப்ரவரி, 2011


சனி, 12 பிப்ரவரி, 2011

மடத்துவெளி சன சமூக நிலையத்தின் பாசறையில் வளர்ந்து பரிணாமம் பெற்ற தோழர்கள் வேறு அமைப்புகளில் சேவை செய்த விபரம்
__________________________________________________________________________________ க.ஐயாத்துரை --வல்லன் சன சமூக நிலையம் .வல்லன் கிராம முன்னேற்றச் சங்கம் ,நாகதம்பிரான் ஆலயம் ,தமிழர் விடுதலைக் கூட்டணி ,புங்குடுதீவு பாநோக்கு கூட்டுறவு சங்கம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ச.சொக்கலிங்கம் --பெற்றோர் ஆசிரியர் சங்கம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இ.குலசேகரம்பிள்ளை --பெற்றோர் ஆசிரியர் சங்கம் .பாலசுப்பிரமணியர் கோவில்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
க.தியாகராசா --பெற்றோர் ஆசிரியர் சங்கம் .பாலசுப்பிரமணியர் கோவில்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
அ.இராசரத்தினம் --பழைய மாணவர் சங்கம் .புங்குடுதீவு கிராமசபை
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இ.இராசமாணிக்கம் ---வரசித்தி விநாயகர் ஆலயம் .யாழ் மாவட்ட இசைக்குழுக்கள் .திருச்சி சத்யா சாயி பஜன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அ.சண்முகநாதன் --பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை,கமலாம்பிகை பெற்றோர் ஆசிரியர் சங்கம் ,புங்குடுதீவு மது ஒழிப்புக் கழகம் ,இளைஞர் பேரவை ,தமிழர் விடுதலைகூட்டணி ,வல்லன் கிராம முன்னேற்ற சங்கம் ,பாலசுப்பிரமணியர் கோவில் .பருத்தித்துறை காட்லி கல்லூரி மாணவ தலைவர் ,வட மாகாண தனியார் பேரூந்து சங்கம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந.தர்மபாலன் --கமலாம்பிகை பெற்றோர் ஆசிரியர் சங்கம் ,புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் ,பாலசுப்பிரமணியர் கோவில்,வரசித்தி விநாயகர் கோவில் ,யாழ் பல்கலை கழக கொக்கி அணி ,புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவ முதல்வர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
எஸ்.எம்.தனபாலன் ---பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை ,வல்லன் கிராம முன்னேற்ற சங்கம் ,கூட்டுறவுப் பரிசோதகர் ,தமிழ் இளைஞர் பேரவை ,தமிழர் விடுதலைக்கூட்டணி ,வட மாகாண தனியார் பேரூந்து சங்க செயலாளர் ,கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர் ,மனித கலாசார பேரவை
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பொ.அமிர்தலிங்கம் ---தமிழ் இளைஞர் பேரவை ,தமிழர் விடுதலை கூட்டணி ,வரசித்தி விநாயகர் ஆலயம் ,
---------------------------------------------------------------------------------------------------------------------------------
துரை.ரவீந்திரன் ---பாலசுப்பிரமணியர் கோவில்,வரசித்தி விநாயகர் ஆலயம் ,யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச செயலாளர் ,கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் ,வல்லன் கிராம முன்னேற்ற சங்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
சிவ-சந்திரபாலன் ---தமிழ் இளைஞர் பேரவை .தமிழர் விடுதலைகூட்டணி ,வேலணை மத்திய கல்லூரி மாணவ முதல்வர் .விடுதி மாணவ தலைவர்,யாழ் மாவட்ட மாணவர் மன்ற ஒன்றியச் செயலாளர் .புலமை பரிசில் வெற்றியாளர்,யாழ் -வானொலி நேயர் மன்ற உபசெயலாளர் ,சிவலைபிட்டி சனசமூக நிலைய செயலாளர் ,சுவிட்சலாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய தலைவர் ,மத்திய குழு உறப்பினர் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------
வே.பாலசுப்பிரமணியம் --ஜெர்மனி திருநாவுக்கரசு அறக்கட்டளை நிர்வாகம்


மா.மோகனபாலன் -புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவ முதல்வர் .கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்


த.திருச்செல்வம் --புங்குடுதீவு மக வித்தியாலயம் மாணவ தலைவர்


தி.கருணாகரன் --புங்குடுதீவு மக வித்தியாலய மாணவ தலைவர் ,கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம்


து.சுவேந்திரன் ---புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவ தலைவர்


மா.குணபாலன் ---தமிழ் இளைஞர் பேரவை ,பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்


பொ.கிருஷ்ணபிள்ளை --பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்


க.பாலகுமார்---சுவிட்சர்லாந்து பாஸல் நீல நட்சத்திர விளையாட்டு கழகம்


சே.சிவலிங்கம் ---சுவிட்சர்லாந்து ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலயம்


க.சந்திரசேகரம் --பெற்றோர் ஆசிரியர் சங்கம் .தமிழ் இளைஞர் பேரவை ஜெர்மனி திருநாவுக்கரசு அறக்கட்டளை
------------------------------------------------------------------------------------------------
சி.தனபாலசுந்தரம் --பழைய மாணவர் சங்கம் .100,200 மீட்டர் ஓட்ட யாழ் மாவட்ட சம்பியன் (1966)-அகில இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளில்100 200 m 2அம இடம் அனுராதபுரம்(1966)

புதன், 2 பிப்ரவரி, 2011

´´மலர்விழி நாடக கலா மன்றம்
_______________________________
புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் உப அமைப்பான இம்மன்றம் கலைகலாசார வளர்ச்சிக்கென நிலையத்தினால் உருவாக்கப்பட்ட து .புங்குடுதீவில் நாடகம் பற்றி ஆய்வு செய்யப்படும் எந்த ஒரு வேளையிலும் இந்த மன்றத்தின் நாடகங்கள் முன்னே வந்து மக்கள் மனதை உறுத்தும் . புங்குடுதீவு பற்றிய ஏராளமான நூல்களில் மடத்துவெளி நாடகங்கள் என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பல்ல நாடகங்களை தயாரித்து மேடையேற்றிய பெருமையைப் பெற்றது மலர்விழி நாடக  கலா மன்றம்.
மடத்துவெளியில் ஆரம்ப காலத்தில் மலைப்பாம்பு (மகேஸ்வரன் ),அ.இராசரத்தினம்,வ.இராமசந்திரன் (நல்லையா ),இ.இராசமாணிக்கம் இந்த நாடகத்துறையில் சில சாதனைகளை படைத்திருந்தனர்.தொடர்ந்த எழுபதுகளில் இம்மன்றம் இந்த துறையில் பாரிய பங்களிப்பை ஆற்றியதை யாரும் மறக்க மாட்டார்கள்.
எழுபத்து நான்கில் அ.சண்முகநாதனின் மற்றுமொரு சிந்தனையின் வெளிப்பாடே இம்மன்றத்தின் தோற்றமாகும் .அந்த வருட சிவராத்திரி விழாவுக்கென இரண்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.ஸ்ரீதன் என்னும் புனை பெயரை கொண்ட எஸ் எம் தனபாலனின் நெறியாள்கையி ல் ´´அந்தஸ்து ´´என்னும் சமூக நாடகம் ,அ.சண்முகநாதனின் இயக்கத்தில் ´´செத்தவன் சாக இருப்பவனைச் சாகடிப்பதா ´´என்ற சமூக சீர்திருத்த இலட்சிய நாடகமும் தான் அவை. அந்தஸ்து நாடகத்தில் எஸ் எம் தனபாலன் கதாநாயகனாகவும் ,த.சிவபாலன் கதாநாயகியாகவும் ந.தர்மபாலன் தந்தை வேடத்திலும் சிவ-சந்திரபாலன் அம்புஜம் என்ற கிழவி வேடத்திலும் பொன்.அமிர்தலிங்கம் க.சந்திரசேகரம் போன்றோர் பெண்கள் வேடத்திலும் இ.இராசமாணிக்கம் கல்யாண புரோக்கர் வேடத்திலும் நடித்து அசத்த்சி இருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நாடகத்தில் புரோக்கராக சிறப்பாக நடித்த இ.இராசமாணிக்கம் அவரது வாழ்நாள் பூராவும் புரோக்கர் என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார் .
மற்றைய நாடகமான செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா என்ற நாடகம் வரியா மக்களின் இல்லங்களில் நடைபெறும் மரணசடங்குகள் போலி கவுரவத்துக்காக ஆடம்பரமாக நடைபெறுவதால் அந்த குடும்பங்கள் பாரிய வறுமைக்குள் தளப் படுவதை சித்தரிக்கும் கொடுமை நீக்கும் இலட்சிய நோக்கோடு உருவாக்கப்பட்டது .இந்த நாடகத்தில் த.பரமானந்தன் .(ரவி) அ.பாலசுந்தரம்அ.தாமோதரம்பிள்ளை  (கொறனர் -மரணவிசாரணை அதிகாரி)சண்முகநாதன் இராசமாணிக்கம் பொன் அமிர்தலிங்கம் மு மருதலிங்கம் மு வேலுப்பிள்ளை மு முத்துக்குமார் து ரவீந்திரன் த திருச்செல்வம் தி கருணாகரன் த.சிவகுமார் கு சிவராசா போன்றோர் நடித்து சிறப்பித்திருந்தனர் 


அடுத்த சிவராத்திரி விழாவில் என் தர்மபாலனின் இயக்கதி ல் ´´நதியில்லாத ஓடம் ´´ என்ற சமூக சீர்திருத்த நாடகம் இடம்பெற்றது .இந்த நாடகத்தில் எஸ் எம் தனபாலன்(கதாநாயகன் )ந.தர்மபான்(கதாநாயகன்)த.சிவபாலன் (கதாநாயகி)இராசமாணிக்கம் (தந்தை )சிவ-சந்திரபாலன் (தாய்)மு மருதலிங்கம் (பெண்)பொன் அமிர்தலிங்கம் (பெண்)
க சந்திரசேகரம் (பெண்) இ.சச்சிதானந்தன் (வர்த்தகர் ) மா வைரவநாதன் (வர்த்தகர் )த சிவகுமார் (வேலைக்காரன்)ஆகியோர் நடித்து மற்றுமோர் சதைனையை பதிவாக்கினர் 


தொடர்ந்து எஸ் கே மகேந்திரன் அவர்கள் சட்டத்தரணி ஆனதையொட்டி நடைபற்ற வரவேற்ற்பு விழாவில் இரண்டு நாடகங்கள் மேடைய்ற்றப்பட்டன . அவை 1எஸ் எம் தனபானின் இயக்கத்தில் மெழுகுவர்த்தி அணைகின்றது ´´சமூக நாடகம் ,2சிவ-சந்திரபாலனின் இயக்கத்தி ல் ´´கிராமத்து அத்தியாயம் ´´தாள லய நாடகம் .
மெழுகுவர்த்தி அணைகின்றது நாடகத்தில் எஸ் எம் தனபாலன் (கதாநாயகன் ) த.சிவபாலன் (கதாநாயகி )இரா.கந்தசாமி (கதாநாயகி)ந.தர்மபாலன் (தந்தை)சிவ-சந்திரபாலன் (தாய் )இ இராசமாணிக்கம் (தந்தை)ஆகியோர் வெகு சிறப்பாக நடித்து பாராட்டை  பெற்றனர் .இந்த நாடகம் இரண்டாவது தடவையாக வீராமலை நயம்மர் கோவில் திருவிழாவில் மேடையேறியது குறிப்பிடத்தக்கது.இந்நாடகத்தில் இடம்பெற்ற பாடல்கள் -பாலூட்டி வளர்த்த கிளி ,சொன்னது நீதானா ,ஆயிரம் தாமரை மொட்டுகளே 
ஊரெங்கும் தேடினேன் .  
மற்றைய நாடகமான கிராமத்து அத்தியாயம் வானொலி எழுத்தளாரான சிவ -சந்திரபாலனால் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் ஒளிபரப்பான வெளிநாட்டு மாப்பிளை என்ற நாடகம் ஆகும் .இந்த தாளலய நாடகம் எமது ஒரே ஒரு சிறந்த பல்துறை இசைக்கருவி விற்பன்னரான இராச மாணிக்கத்தின் அற்புதமான இசைபின்னனியில்  சிவ சந்திரபாலனின் கவிநயம் மிக்க இசை மெட்டு வசனத்துடன் நடாத்தப்பட்ட முறை பெரும் பாராட்டை பெற்றது.இந்த நாடகத்திலும் இராசமாணிக்கம்( தந்தை )சிவ சந்திரபாலன் (தாய்) எஸ் எம் தனபாலன்( கதாநாயகன்) சே சிவலிங்கம் (கதாநாயகி )அ திகிலஅழகன்(கதாநாயகி) தர்மபாலன் (தந்தை)வேடங்கள் ஏற்று மெருகூட்டி இருந்தார்கள் 
மற்றைய சிவராத்திரி விழாவில் எம் முத்துகுமாரின் நாடகம்ந தர்மபாலனின்  காகித ஓடம்  ஆகியன அரங்கேறியது இதில் சே:சிவலிங்கம் தி கருணாகரன் திருச்செல்வம் பிரபா கு விஜயன் கோணேஸ் முத்துக்குமார் போன்றோர் நடித்து சிறப்பித்தனர் .
இன்னும் சாதிகள்  இல்லையடி பாப்பா என்ற இலட்சிய நாடகமும் இம்மன்றத மேடையேற்றப்பட்டது .இம்மன்றத்தின் நாடகங்கள் சண்முகநாதன் எஸ் எம் தனபாலன் சிவ சந்திரபாலன் ந தர்மபான் போன்றோரின் இயக்கம் கதை வசனத்திலும் கதாநாயகனாக எஸ் எம் தனபாலன் கதாநாயகியாக த சிவபாலன் தந்தை வேடங்களில் இராச மாணிக்கம் தர்மபாலன் தாயாக சிவ-சந்திரபாலன் போன்றோரின் நடிப்பிலும் முழுப் பரிணாமம் பெற்று மிளிர்ந்தன என்றா மிகையாகாது 
இந்த மன்றத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட  சிற்பிகள் கனடா சுவிட்சர்லாந்து பிரான்ஸ் நாடுகளை புலம் பெயர்ந்த பின்னரும் அந்த நாட்டு மேடைகளை அலங்கரிப்பதும் குறிப்பிடத்தக்கது 1977
இல் நாடக அரங்கக் கல்லுரியி ல் நடைபெற்ற நாடகப் பயிற்ச்சி பட்டறையில் துறை.ரவீந்திரன் தி கருணாகரன் த திரு செல்வம் சிவ சந்திரபாலன் போன்றோர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது  கனடா சென்ற மன்ற உறுப்பினர்கள் இதே பெயரிலேயே நாடகங்களை அரங்கேற்றினர் .ஜீவராகம் (எஸ் எம் தனபாலன் ) கரைதேடும் அலைகள் (எஸ் எம் தனபாலன்.பின்னர் திரைப்படமாக  )முரண்படும் முகங்கள் (துரை ரவி)தாளங்கள் மாறினால் (கருணாகரன்)உதிரிப்பூக்கள் (எஸ் எம் தனபாலன்)யாத்திரை(துரை ரவி)பிரம்ப உபதேசம் (எஸ் எம் தனபாலன்-குறுந்திரை )மறுபக்கம்(எஸ் எம் தனபாலன் -குறுந்திரை)வலிபதேசங்கள்(எஸ் எம் தனபாலன் -குறுந்திரை)உநர்வுக௮எஸ் எம் தனபாலன்-குறுந்திரை)இடைவெளி (துரைரவி)தமிழச்சி துரோகி தேசத்தின் கானங்கள் (இவை--.இந்திரஜித்).பாரிசி ல் ந.கோணேஸ்.ந.செல்வகுமார் போன்றோர் நாடகங்கள் தொலைக்காட்சி நடகங்கள என்பவற்றில் சிறந்து விளங்குகின்றனர் (புலத்துச் சங்கதி )சுவிசில்  சிவ-சந்திரபானும் நாடகங்களில் நடித்து வருகிறார் (அந்த ஆலமரத்தடியில் )அத்தோடு வானொலிதொலைக்காட்சி  (ஐ பீ சீ .டி ஆர் டி தமிழ் ஒலி )பத்திரிக்கை (தமிழன் ஈழமுரசு ஈழநாடு செய்தி ஆசிரியர்)ஊடக கலைத்துறை எழுத்தாளராகவும் செய்தி விளையாட்டுத்துறை ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார்