வெள்ளி, 25 மே, 2012


சுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான "புங்குடுதீவு மான்மியம்" நூல் வெளியீடு. இன்னும் நிகழ்வுகள் தொடர்கின்றன .ஞாயிறன்று கனடா மொன்றியலில் .

 ""புங்குடுதீவு மான்மியம் "" நூல் வெளியீட்டு விழா ஐரோப்பிய  நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து தமது சிறப்புமிகு பயணத்தை முடித்துக்கொண்டு கனேடிய பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள் மூவரும் கனடா திரும்பியுள்ளனர் . இங்கிலாந்து தலைநகர் லண்டனில்  புங்குடுதீவு நலன்புரி சங்கம் இந்த வெளியீட்டை சிறப்பாக நடத்தி வைத்தது .பாரிசில் உயர்திரு .இலங்கையர் கனகசபை அரியரத்தினத்தின் முயற்சியில் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது . சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள ரூபிகேன் என்னும் இடத்தில் இந்த வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .இந்த விழாவில் திரு.செல்வம் அடைக்கலநாதன் (பா.உ. த.தே.கூ.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய விழா இனிதே நடைபெற்றது . சுவிசில் விழா நடைபெற்ற அதே நாளில் வேறு பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருத போதும் நூறு பேர் வரையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . தவிர்க்க முடியாத காரனகளால் சமூகமளிக்க முடியாமல் போன மக்கள்  கனடா பிரதிநிதிகளை சந்தித்து நூலை பெற்றுக் dகொண்மை வெற்றிகரமாக நடந்தேறியது .அத்தோடு தங்கள் இல்லங்களுக்கு வரவழைத்து வரவேற்பு வழங்கி நூலை வந்கியமையும் aமறக்க முடியாததாக அமைந்தது .சுவிசில் மட்டும் சுமார் ஏழாயிரம் பிரான்குகளுக்கும் சற்று அதிகமாக நூலுக்கான வரவு நிதியாக கிடைத்தமை ஒரு வரலாற்றுப் பதிவாகும் எல்லோருக்கும் ஏற்பாட்டாளர்கள்  தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் 

சுவிஸ் வெளியீட்டு விழாவையொட்டி சகல வழிகளிலும் எமக்கு உறுதுணையாய் இருந்து ஒத்துழைத்த பின்வருவோருக்கு விசேசமாக நன்றி தெரிவித்துக்  கொள்கிறோம் 

இராசமாணிக்கம் ரவீந்திரன் 
அரியபுத்திரன்  நிமலன் 
சிவசம்பு சந்திரபாலன் 
செல்லத்தம்பி சிவகுமார் 
சுப்பிரமணியம் சண்முகநாதன் 
அருணாசலம்  திகிலழகன் 
வில்வரத்தினம் பகீரதன் 
தம்பையா பிரேமானந்தன் 
துரைராசா சுரேந்திரராசா 
கந்தையா கணேசராசா 
கந்தையா தவசெல்வம் 
சின்னதுரை நாகரத்தினம் 
ராஜேந்திரம் இந்திரசீலன் 
ராசையா  சண்முகராசா 
வேலாயுதபிள்ளை கனகராசா 
கந்தையா மணியழகன் 
சோமசுந்தரம் கைலைவாசன் 
தியாகராசா  செல்வேந்திரராசா 

வியாழன், 10 மே, 2012சுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு  நடைபெறவுள்ளது கனடா புங்குடுதீவு பழைய  மாணவர் சங்கத்தினால் நூலுருவாக்கப் பட்ட "புங்uகுடுதீவு  -மான்மியம் " என்னும் மாபெரும் நூல் ஒன்று எதிர்வரும் 13 . 05 .  2012.     ஞாயிற்றுக்கிழமை   பி.ப. 3 .00 மணியளவில் பெர்னில்   Schulanlage ,Worbstr 13 ,3113 Rubigen என்னும் aமுகவரியில் சிறப்பான முறையில் வெளியிட ஏற்பாடாகி lஉளது .
விழாவைச் சிறப்பிக்க தாயகத்தில் hஇருந்து வன்னி நாடாளூமன்ற த.தே .கூட்டமைப்பு உறுப்பினர்  திரு செல்வம் அடைக்கலநாதன் சுவிசுக்கு  வருகை தந்துள்ளார்.     நூலை வெளியிட்டு வைக்க கனடாவிலிருந்து .திரு ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர் புங்குடுதீவு மகா வித்தியாலயம்).திரு .தி .கருணாகரன் (தலைவர் ,புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -கனடா ).திரு .குணா செல்லையா (முன்னாள் தலைவர் .புங்.பழைய மாணவர் சங்கம் .கனடா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .நூல் ஆய்வுரை யை  திரு சண்.தவராசா (ஊடகவியலாளர்.சுவிட்சர்லாந்த் ) அவர்கள் நிகழ்த்தவுள்ளார் 

புங்குடுதீவு மண்ணுக்காக பல வருடங்களாக சேவை செய்து வரும் கனேடிய புங்குடுதீவு  பழைய மாணவர் சங்கம் எமது ஊரின் பெருமை மிகு வரலாறு ,மற்றும் ஆலயங்கள் ,கிராமங்கள் .பெரியோர்கள் ,துறை சார் விற்பன்னர்கள் ,சமூக சேவை அமைப்புகள் .புலம்பெயர் மக்கள் இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கி சுமார் எழுநூறு பக்கங்களுடன் பாரிய ஆவணத்  தொகுப்பாக வெளிவரும் இந்த நூலின் மகிமை காண உங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம் . நாம்  பிறந்த மண்ணை நேசிக்கும் ஊரின் உறவுகளே .எமது ஊருக்கென்று ஒரு பெருமை உண்டு.எமக்கென்று ஒரு வரலாற்றுப் பதிவு உண்டு .எமத்ழு வரும் காலச் சந்ததிகளுக்கு நாம் எழுதி வைப்போம் .என்றென்றும் அழியாத சொத்தாக இந்த நூலினை பாதுகாப்போம் . இந்த பாரிய கடமையை  நிறைவேற்ற ஒன்று கூடுவோம் உறவுகளே .பலத்த சிரமங்களின் மத்தியில் இந்த iநூலினவெளிக்  கொண்டு வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் மேம்பட்ட செயலை வரவேற்போம் ,வாழ்த்துவோம் .வருக வருக என் அன்போடு அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள் .

பதினோராம்  திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் .சுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா ^காலம் .   13 . 05 .  2012.     ஞாயிற்றுக்கிழமை   பி.ப. 3 .00 மணி 

இடம்   Schulanlage ,Worbstr 13 ,3113 Rubigen  

சிறப்பு விருந்தினர்  .திரு ,செல்வம்  அடைக்கலநாதன்  (வன்னி மாவட்ட பா.உ.தமிழ் தேசியக் கூட்டமைப்பு )

              

  
 நூலை வெளியிட்டு வைக்க கனடாவிலிருந்து 
பின்வருவோர் பங்கு கொள்கிறார்கள் .


 1.திரு ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர் புங்குடுதீவு மகா வித்தியாலயம்)
   2.திரு .தி .கருணாகரன் (தலைவர் ,புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -கனடா )
    3.திரு .குணா செல்லையா (முன்னாள் தலைவர் .புங்.பழைய மாணவர் சங்கம் .கனடா)

நூல் ஆய்வுரை -திரு சண்.தவராசா (ஊடகவியலாளர்.சுவிட்சர்லாந்த் ) 

புங்குடுதீவு மண்ணுக்காக பல வருடங்களாக சேவை செய்து வரும் கனேடிய புங்குடுதீவு  பழைய மாணவர் சங்கம் எமது ஊரின் பெருமை மிகு வரலாறு ,மற்றும் ஆலயங்கள் ,கிராமங்கள் .பெரியோர்கள் ,துறை சார் விற்பன்னர்கள் ,சமூக சேவை அமைப்புகள் .புலம்பெயர் மக்கள் இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கி சுமார் எழுநூறு பக்கங்களுடன் பாரிய ஆவணத்  தொகுப்பாக வெளிவரும் இந்த நூலின் மகிமை காண உங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம் . நாம்  பிறந்த மண்ணை நேசிக்கும் ஊரின் உறவுகளே .எமது ஊருக்கென்று ஒரு பெருமை உண்டு.எமக்கென்று ஒரு வரலாற்றுப் பதிவு உண்டு .எமத்ழு வரும் காலச் சந்ததிகளுக்கு நாம் எழுதி வைப்போம் .என்றென்றும் அழியாத சொத்தாக இந்த நூலினை பாதுகாப்போம் . இந்த பாரிய கடமையை  நிறைவேற்ற ஒன்று கூடுவோம் உறவுகளே .பலத்த சிரமங்களின் மத்தியில் இந்த iநூலினவெளிக்  கொண்டு வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் மேம்பட்ட செயலை வரவேற்போம் ,வாழ்த்துவோம் .வருக வருக 

பதினோராம்  திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் .

மண்டபத்துக்கு  வரும் வழி . Autobahn Thun /.Ausfahrt Munsingen        இல் வெளியேறி Rubigen  இடம் நோக்கி வந்ததும் வருகின்றRound of board இல் Worb    எடுக்க  வரும் வீதியாகும் .

079 920 78 41 , 078 818 30 72--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கனடாவில்  இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா புகைப்படம் 

பன்னிரண்டு வட்டாரப் பிரதிநிதிகளுடன் நூலாசிரியர் துரை  ரவி (முதலாவது ) தலைவர் தி கருணாகரன் (கடைசி )

வெள்ளி, 4 மே, 2012

ச.சொக்கலிங்கம் அதிபர்


ச.சொக்கலிங்கம் அதிபர் 
----------------------------------

புங்குடுதீவு வடக்கு பகுதியின் 7ஆம் ,8 ஆம் 9 ஆம் வட்டார மக்களின் அறிவுக்கண்ணை திறந்த அற்புதமான ஒரு ஆசான் உயர்திரு ச.சொக்கலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது .மடத்துவெளி  பாலசுப்பிரமணியரின் திருவாசல் முன்னே குடியிருந்த இந்த ஆசிரியர் பெருங்காடு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் இறுதி காலங்களில் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்து கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் .1912 இல் புங்குடுதீவில் பிறந்து அன்றைய காலத்தில் ஆங்கிலேயரால்  நேரடியாக செயல்படுத்தப்பட்ட ஆங்கிலத்தோடு ஒட்டிய தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை கற்று தேறினார் பழைய முறையிலான எஸ் எஸ் சி பரீட்சையை அப்போதைய திட்டப்படி ஆங்கிலம் தமிழ் கலந்த இருமொழி தெரிவில் எழுதி சித்தி எய்தியவர் .தமிழ் கட்டுரைகளை ஆங்கிலத்துக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழுக்கும் மொழிபெயர்க்கும் விதிமுறைகள் கொண்டதான அந்த கல்வி முறையில் தேர்ச்சி பெற்றவர் .கணிதம் தமிழ் சமயம் ஆங்கிலம் என்பவற்றை முறைப்படி கற்பிக்கும் ஆற்றலும் கொண்டவர்.கிராம மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்கள் தவிர மாலை நேரத்திலும் மேலதிகமாக  வகுப்புக்களை நடத்தி விசேசமான  பரீட்சைகளில் தேர்வு பெற காரணமாக இருந்தவர் . புலமைப் பரிசல் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப் படுத்துவதில் வல்லவாராக திகழ்ந்தார் இதற்கெனவும் மாலை நேர வகுப்புகளை திறம்பட  நடத்தினார் .இவரது விடாமுயற்சிக்கு பலனாக இவரது மாணவனான சிவ-சந்திரபாலன் 7 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது .இவர் அதிபராக இருந்த காலத்தில் தான் கமலாம்பிகை வித்தியாலயத்தின் மத்தியில் உள்ள கட்டிடம்  தெற்கே உள்ள கட்டிடம்  .விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன முற்று முழுதாக  அமைக்கப் பட்டு மகா வித்தியாலயம் என்ற  தரத்துக்கு இப்பாடசாலை தரமுயர்த்த கூடியதாக இருந்தது .பாடசாலை கிணற்றினையும் மலசலகூடத்தினையும் புதிதாக அமைத்தார் . பாடசாலை  சுற்றி வரவுள்ள பாதுகாப்பு வேலிகளை முழுவதுமாக அடைத்து வந்தார் .பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பழைய மாணவர் சங்கம் மடத்துவெளி சன சமூக நிலையம் என்பவற்றோடு கூடி திட்டங்களை வகுத்து பல  அரிய பணிகளை செவ்வனே  நிறைவேற்றி வந்தார்  பாடசாலை விளையாட்டு போட்டியினை வருடாவருடம்  நடத்த ஆரம்பித்து வைத்து வித்திடவரும் இவரே .பாடசாலைக்கு வழங்கபட்ட காலை ஆகாரமான பால் விநியோகத்தையும் தனது இல்லத்திலேயே  நடத்த ஒத்துழைத்து இடம் வழங்கி வந்தார் 1971 இல் கமலாம்பிகையில் அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றார் .
இவர் சமூக சேவையிலும் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார் .சமூகத்துக்கே ஒரு வழிகாடியாக வாழ்ந்து வந்தார் .புங்குடுதீவில் புகழ் பெற்று விளங்கு முயர் தரத்திலான மடத்துவெளி சனசமூக நிலையத்தினை திரு ஐயாத்துரை ஆசிரியரோடு இணைந்து 1959 இல்  ஸ்தாபித்து வைத்த பெருமைக்குரியவர்  ஆரம்பத்தில் கமலாம்பிகை வளவிலும் பின்னர் இந்த பாடசாலை கட்டிடத்திலும் அமைத்து சேவையாற்றியவர் .
ஒய்வு பெற்ற போது ஓய்ந்திடாது கிராமத்து பஞ்சாயத்து தலைவராக இருந்து  ஏராளமான பிணக்குகளை இலகுவாக நீதியாக தீர்த்து வைத்து மக்களின் அபிமானத்தை பெற்றார்
தனியே கல்வி அறிவு மட்டும் அன்றி சாஸ்திர கலை காணி  அளவிடும் அறிவு என்பவற்றையும் கற்று மக்களுக்கு சேவை புரிந்து வந்தார் .தனது 83 ஆவது  வயதில் இவர் பூதவுடலை நீத்தார் .இவரது சேவையும் புகழும் என்றும் எம்மக்கள் மனதில் நின்று நிலைக்கும்