திங்கள், 19 டிசம்பர், 2011







சுவிட்சர்லாந்தில் மடத்துவெளி இளைஞன் சாதனை 

புங்குடுதீவு மடத்துவெளி ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் ஓல்டேன் மாநகரில் வசித்து வரும் லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழக வீரரான சிவலிங்கம் நிமல்ராஜ் சுவிசில் நடைபற்ற சுவிஸ் தமிழர்  உதைபந்தாட்டச் சம்மேளன  கிண்ண சுற்று போட்டியில் அதிசிறந்த வீரர் விருதினை பெற்று எமது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் .நிமல்ராஜ் செல்லத்துரை  சிவலிங்கம்-உதயா தம்பதியின் மூத்த புதல்வனாவார் .இவரது தந்தை சிவலிங்கமும்  தாயகத்தில் மடத்துவெளி சன சமூக நிலையத்தின் உதைபந்தாட்ட அணியின் சிறந்த முன்னணி வீரராக  திகழ்ந்தவர் என்பதை இவரது லீஸ் இள நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் ஒரு அணியின்  பயிற்சியாளரான சிவ-சந்திரபாலன்   தெரிவித்தார் 

சனி, 17 டிசம்பர், 2011



செல்வி சயிப்பிரியா ரவீந்திரனின் வயலின் இசையில்  புங்குடுதீவு 


சுவிசில் வாழ்ந்து வரும் செல்வி சாயிபிரியா
 ரவீந்திரன்   வயலின் இசையை பல ஆண்டுகளாகக் கற்று வருகிறார் அவரது வயலின்  இசையில் அன்னக்கிளி பாடலுக்கு பின்னணியில்   புங்குடுதீவு படங்கள் வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளது.செல்வி சாயிபிரியா மடத்துவெளி சனசமூகநிலையத்தை சேர்ந்த இராசமாணிக்கம் -பராசக்தியின் பேத்தியாவார்.இவர் சுவிசில் ஏராளமான நிகழ்வுகளை  தனது வயலின் இசையால் மெருகேற்றி உள்ளார்.புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் கடந்த ஆண்டு நடத்திய  வேரும் விழுதும் விழாவையும் இவர்தனது வயலின் இசையால்  சிறப்பித்துள்ளார்