நிகழும் மங்களகரமான துர்முகிவருடம் பங்குனி மாதம் 05ம் நாள் (18.03.2017) சனிக்கிழமை முற்பகல் 11மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தீர்த்தக்கேணிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்
ஆலய தீர்த்தக்கேணி (சரவணைப்பொய்கை) அமைக்கும் பணியை பொறுப்பேற்ற தீர்த்தத்திருவிழா உபயகாரர்களான திரு.சபாபதிப்பிள்ளை இராசதுரை குடும்பத்தினரால் தீர்த்தக்கேணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.04.216 திகதி பகல் தீர்த்த திருவிழா தினத்தன்று இடம் பெற்றது. தீர்த்தக்கேணியை விரைவாக கட்டிமுடிக்கும் நோக்கில் கட்டுமான வேலைகள் ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அதற்கான கட்டுமான நிதியின் ஒரு பகுதியும் ஒப்பந்தக்காரரிடம் கையளிக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இப்பாரிய பணியைப் பொறுப்பேற்ற திருவிழா உபயகாரர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகுக.
புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2016
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான மன்மதவருடம் பங்குனி மாதம் 15ம் நாள் (28.03.2016) திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் தொடர்ந்து நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.
ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய நிரந்தர வைப்பு நிதியம்
எமது ஆலயத்திற்கு நிரந்தர வைப்பு நிதியம் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது. நிரந்தர வைப்பு நிதியத்திலிருந்து பெறப்படும் வட்டி பணம் ஆலயத்தின் மாதாந்த நித்திய பூசை தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிரந்தர வைப்பு நிதியத்திற்கு முதல் கட்ட நிதியாக மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா (ரூபா 350,000.00) ஆலய நிர்வாகத்தினருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர வைப்பு நிதியம் திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் முன்முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகும். நிரந்தர வைப்பு நிதியத்திற்கான முதல் கட்ட நிதியை சுவிற்சலாந்திலுள்ள மடத்துவெளி முருகன் அடியார்களான பின்வருவோர் வழங்கியுதவியுள்ளனர்.
5ம்திருவிழா - திரு.கு.கதிர்காமு, திரு.க.சின்னையா குழுவினர்
6ம்திருவிழா – திருமதி.கி.சவுந்தரநாயகி குடும்பத்தினர்
7ம்திருவிழா – திரு.மு.தம்பிப்பிள்ளை குடும்பத்தினர்
8ம்திருவிழா – திரு.அ.வே.இளையதம்பி குடும்பத்தினர்
9ம்திருவிழா – திரு.வ.வே.இளையதம்பி குடும்பத்தினர்
10ம்திருவிழா – திரு.வே.சபாபதிப்பிள்ளை குடும்பத்தினர்
11ம்திருவிழா – திரு.நா.பரராசசிங்கம் குடும்பத்தினர்
வைரவர் மடை – திரு.ச.கடாட்சம் குடும்பத்தினர்
புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2015
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான ஜயவருடம் பங்குனி மாதம் 25ஆம் நாள் (08.04.2015) புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் தொடர்ந்து நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மகோற்சவகால விபரம்
07.04.2015 செவ்வாய்சாந்தி வழிபாடுகள்
08.04.2015 புதன்1ம் திருவிழா (கொடியேற்றம்)
09.04.2015 வியாழன் 2ம் திருவிழா
10.04.2015 வெள்ளி3ம் திருவிழா
11.04.2015 சனி 4ம் திருவிழா
12.04.2015 ஞாயிறு 5ம் திருவிழா
13.04.2015 திங்கள்6ம் திருவிழா
14.04.2015 செவ்வாய்7ம் திருவிழா
15.04.2015 புதன்8ம் திருவிழா
16.04.2015 வியாழன்09 திருவிழா (தேர் திருவிழா)
17.04.2015 வெள்ளி10ம் திருவிழா (தீர்த்தத்திருவிழா)
18.04.2015 சனி 11ம் திருவிழா
19.04.2015 ஞாயிறுவைரவர் மடை
எங்கள் ஆலயத்தின் மாதிரி அமைப்பு
ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடும், மதிப்புடனான கௌரவிப்பும் அன்பர்களே!
ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடு – 2013
இடம் – பாபா திருமண மண்டபம், ரொறன்ரோ, கனடா
காலம் – 10.08.2014 ஞாயிறு காலை 10 மணி
கும்பாபிசேக மலர் வெளியீடு, வரவு செலவு அறிக்கை, கும்பாபிசேக இறுவெட்டு வெளியீடு, கலந்துரையாடல் என்பன இடம் பெறவுள்ளன. எனவே அனைத்து ஊரதீவு, மடத்துவெளி மக்களையும், ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பவர் – தாயகம் சென்று திரும்பிய அ.சண்முகநாதன்
(தலைவர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய பரிபாலன சபை)
தொடர்புகளுக்கு – 647-300-9548
புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2014
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான விஜயவருடம் பங்குனி மாதம் 8ம் நாள் (22.03.2014) சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மகோற்சவ பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மகோற்சவகால விபரம்
21.03.2014 வெள்ளிக்கிழமை சாந்தி வழிபாடுகள்
22.03.2014 சனிக்கிழமை 1ம் திருவிழா (கொடியேற்றம்)
23.03.2014 ஞாயிற்றுக்கிழமை 2ம் திருவிழா
24.03.2014 திங்கட்கிழமை 3ம் திருவிழா
25.03.2014 செவ்வாய்க்கிழமை 4ம் திருவிழா
26.03.2014 புதன்கிழமை 5ம் திருவிழா
27.03.2014 வியாழக்கிழமை 6ம் திருவிழா
28.03.2014 வெள்ளிக்கிழமை 7ம் திருவிழா
29.03.2014 சனிக்கிழமை 8ம் திருவிழா
30.03.2014 ஞாயிற்றுக்கிழமை 09 திருவிழா (தேர் திருவிழா)
31.03.2014 திங்கட்கிழமை 10ம் திருவிழா (தீர்த்தத்திருவிழா)
01.04.2014 செவ்வாய்க்கிழமை 11ம் திருவிழா
02.04.2014 புதன்கிழமை வைரவர் மடை
ஆலய பரிபாலன சபையின்அவசர வேண்டுகோள்
எதிர்வரும் பங்குனி மாதம் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஆலயத்தில் எஞ்சியுள்ள புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்யவேண்டியுள்ளது. எனவே தயவுசெய்து இதுவரை நிதியுதவி செய்யச் சந்தர்ப்பம் கிடைக்காத புலம் பெயர்ந்து வாழும் அன்புக்குரிய மடத்துவெளி, ஊரதீவு முருகன் அடியார்களிடம் இருந்தும் ஆலய பரிபாலன சபையினர் நிதியுதவியை வேண்டி நிற்கின்றனர்.
ஆலய பரிபாலன சபையின் முக்கிய அறிவித்தல்
மடத்துவெளிஸ்ரீபாலசுப்பிரமணியஆலயத்தின்திருவிழா, மாதப்பூசை, விசேடபூசைகளில்பங்கேற்றுதங்கள்பங்களிப்பைசெய்துவந்தஆலய உபயகாரர்கள் தொடர்ந்தும்செய்யவிரும்புமிடத்துஆலயத்தொலைபேசியுடன்தங்களின்தொடர்பினைஏற்படுத்தி நிச்சயபடுத்திக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றனர். தவறும்பட்சத்தில்அவ்விடங்களுக்கு புதியவர்கள்நியமிக்கப்படுவார்கள்என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றனர். எனவே தயவுசெய்து தொடர்பினை ஏற்படுத்திநிச்சயபடுத்திக் கொள்ளுங்கள்.
புலம்பெயர்வாழ்மக்களுக்குஆலய பரிபாலன சபை தலைவரின் அன்பானவேண்டுகோள்
தங்களின்உதவியுடன்இவ்வாலயதிருப்பணிவேலைகள் 85சதவீதம்செய்துமுடித்துகும்பாபிஷேகம்28.06.2013இல் நிறைவடைந்துள்ளது.ஆனால் ஆலயதிருப்பணிவேலைகளைமுழுமையாகபூரணப்படுத்த மேலும்நிதிதேவையாகவுள்ளது.நிதியுதவிசெய்யவிரும்புபவர்கள்ஆலயஇலங்கைவங்கி கணக்கு இலக்கம் 74602768 இற்குஅனுப்பிவைத்துஆலயதொலைபேசியில்தெரியப்படுத்துமாறுஅன்புடன்கேட்டுக்கொள்ளுகின்றேன்.