சனி, 3 ஜூன், 2017

சுவிஸ் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய பழைய மாணவா் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இராமநாதன் விளையாட்டரங்க வேலைகள் முன்னேற்றமடைந்துள்ளது.28.04.2017
100 வயதில் காலடி
பதிக்கும் என் தாய்க்கு நீன்ட ஆயுளைத் தந்த வயலுார். முருகனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...அத்துடன் வயலூா் முருகன் ஆலயத்தில்
02.06.2017 வெள்ளிக்கிழமை விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெறும்
உபயம்: அருணாசலம் குடும்பம்
7ம் வட்டாரம்,வரதீவு,
புங்குடுதீவு.

விரைவில் தொடங்கவுள்ள மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய புனரமைப்புப் பணிகள்


புங்குடுதீவு மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் பல வருடங்களாக எவ்வித புனரமைப்பு வேலைகளும் செய்யப்படாத நிலையில்  பொலிவிழந்து அழிவடையும் நிலையில் காணப்படுகின்றது. ஆலயத்தின் கூரை மரங்கள் பழுதுடைந்து

திங்கள், 20 மார்ச், 2017

19.03.2017 .2 ஆம் திருவிழா

 

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2017

அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் பங்குனி மாதம் 05ம் நாள் (18.03.2017) சனிக்கிழமை முற்பகல் 11மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலைமாலை உற்சவங்கள் நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தீர்த்தக்கேணிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்


ஆலய தீர்த்தக்கேணி (சரவணைப்பொய்கை) அமைக்கும் பணியை பொறுப்பேற்ற தீர்த்தத்திருவிழா உபயகாரர்களான திரு.சபாபதிப்பிள்ளை இராசதுரை குடும்பத்தினரால் தீர்த்தக்கேணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.04.216 திகதி பகல் தீர்த்த திருவிழா தினத்தன்று இடம் பெற்றது. தீர்த்தக்கேணியை விரைவாக கட்டிமுடிக்கும் நோக்கில் கட்டுமான வேலைகள் ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அதற்கான கட்டுமான நிதியின் ஒரு பகுதியும் ஒப்பந்தக்காரரிடம் கையளிக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இப்பாரிய பணியைப் பொறுப்பேற்ற திருவிழா உபயகாரர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகுக.
                               
புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2016

அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான மன்மதவருடம் பங்குனி மாதம் 15ம் நாள் (28.03.2016) திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் தொடர்ந்து நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்
27.03.2016 ஞாயிறு - சாந்தி வழிபாடுகள்
28.03.2016 திங்கள் - 1ம் திருவிழா (கொடியேற்றம்)
29.03.2016 செவ்வாய் - 2ம் திருவிழா
30.03.2016 புதன் - 3ம் திருவிழா
31.03.2016 வியாழன் - 4ம் திருவிழா
01.04.2016 வெள்ளி - 5ம் திருவிழா
02.04.2016 சனி - 6ம் திருவிழா
03.04.2016 ஞாயிறு - 7ம் திருவிழா
04.04.2016 திங்கள் - 8ம் திருவிழா
05.04.2016 செவ்வாய் - 9 திருவிழா (தேர் திருவிழா)
06.04.2016 புதன் - 10ம் திருவிழா
07.04.2016 வியாழன் - 11ம் திருவிழா
08.04.2016 வெள்ளி - வைரவர் மடை


மாதப்பூசை செய்பவர்களின் பெயர் விபரங்கள் - 2016 

தை          – திரு.திருநாவுக்கரசு கருணாகரன் (கனடா)

மாசி        – திரு.புலேந்திரன் வசிகரன் (சுவிஸ்) 

பங்குனி  - திரு,இராசமாணிக்கம் ரவிந்திரன் (சுவிஸ்) 

சித்திரை - திரு,நவரட்ணம் சிவானந்தன் (சுவிஸ்) 

வைகாசி - திருமதி.குணரெத்தினம் இராசேஸ்வரி குடும்பம்(கனடா)

ஆனி        -  திரு,இ.குலசேகரம்பிள்ளை குடும்பம் (கனடா)

ஆடி          - திரு.வைத்திலிங்கம் விக்கினேஸ்வரன் (சுவிஸ்)

ஆவணி   -  திரு,துரைராசா சுவேந்திரராசா (சுவிஸ்)

புரட்டாதி-  திரு.அம்பலவாணர் தியாகலிங்கம் (கனடா)

ஐப்பசி      - திரு.அருணாசலம் கைலாசநாதன் (சுவிஸ்)

கார்த்திகை- திரு.நடராஜா யோகேஸ்வரன் (சுவிஸ்)

மார்கழி  - திரு,சுப்பிரமணியம் பிள்ளை (சுவிஸ்)


ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய நிரந்தர வைப்பு நிதியம் 
எமது ஆலயத்திற்கு நிரந்தர வைப்பு நிதியம் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது. நிரந்தர வைப்பு நிதியத்திலிருந்து பெறப்படும் வட்டி பணம் ஆலயத்தின் மாதாந்த நித்திய பூசை தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிரந்தர வைப்பு நிதியத்திற்கு முதல் கட்ட நிதியாக மூன்று இலட்சத்து  ம்பதினாயிரம் ரூபா (ரூபா 350,000.00) ஆலய நிர்வாகத்தினருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர வைப்பு நிதியம் திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் முன்முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகும். நிரந்தர வைப்பு நிதியத்திற்கான முதல் கட்ட நிதியை சுவிற்சலாந்திலுள்ள மடத்துவெளி முருகன் அடியார்களான பின்வருவோர் வழங்கியுதவியுள்ளனர். 
1.திரு.நாகராசா ஜெயராசன் (வேணு)   ரூபா 150,000.00
2.திரு.தம்பிராசா கமலநாதன்                 ரூபா 100,000.00
3.திரு.விசுவலிங்கம் அரிச்சந்திரராசதேவன்   ரூபா 100,000.00

தீர்த்தத்திருவிழா 17.04.2015 


தேர்த்திருவிழா 16.04.2015 (பகுதி-1)


தேர்த்திருவிழா 16.04.2015 (பகுதி-2)


தேர்த்திருவிழா 16.04.2015 (பகுதி-3)


தேர்த்திருவிழா 16.04.2015 (பகுதி-4)


தேர்த்திருவிழா 16.04.2015 (பகுதி-5)

திருவிழா உபயகாரர்கள்

1ம் திருவிழா – திரு.வி.இராமநாதன் குடும்பத்தினர்
2ம் திருவிழா – திரு.வி.சுப்பிரமணியம் குடும்பத்தினர்
3ம் திருவிழா – திரு.நா.தனபாலசிங்கம் குடும்பத்தினர்
4ம் திருவிழா – திரு.நா.பேரம்பலம்  குடும்பத்தினர்
5ம் திருவிழா - திரு.கு.கதிர்காமு, திரு.க.சின்னையா குழுவினர்
6ம் திருவிழா – திருமதி.கி.சவுந்தரநாயகி குடும்பத்தினர்
7ம் திருவிழா – திரு.மு.தம்பிப்பிள்ளை குடும்பத்தினர்
8ம் திருவிழா – திரு.அ.வே.இளையதம்பி குடும்பத்தினர்
9ம் திருவிழா  – திரு.வ.வே.இளையதம்பி குடும்பத்தினர்
10ம் திருவிழா – திரு.வே.சபாபதிப்பிள்ளை குடும்பத்தினர்
11ம் திருவிழா – திரு.நா.பரராசசிங்கம் குடும்பத்தினர்
வைரவர் மடை – திரு.ச.கடாட்சம் குடும்பத்தினர்

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2015

அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான ஜயவருடம் பங்குனி மாதம் 25ஆம் நாள் (08.04.2015) புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் தொடர்ந்து நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்
07.04.2015 செவ்வாய்      சாந்தி வழிபாடுகள்
08.04.2015 புதன்                 1ம் திருவிழா (கொடியேற்றம்)
09.04.2015 வியாழன்      2ம் திருவிழா
10.04.2015 வெள்ளி        3ம் திருவிழா
11.04.2015 சனி                  4ம் திருவிழா
12.04.2015 ஞாயிறு       5ம் திருவிழா
13.04.2015 திங்கள்           6ம் திருவிழா
14.04.2015 செவ்வாய்    7ம் திருவிழா
15.04.2015 புதன்             8ம் திருவிழா
16.04.2015 வியாழன்       09 திருவிழா (தேர் திருவிழா)
17.04.2015 வெள்ளி           10ம் திருவிழா (தீர்த்தத்திருவிழா)
18.04.2015 சனி                  11ம் திருவிழா
19.04.2015 ஞாயிறு           வைரவர் மடை
எங்கள் ஆலயத்தின் மாதிரி அமைப்பு


ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடும், மதிப்புடனான கௌரவிப்பும் 
அன்பர்களே!

எம் கிராமத்தின் முருகன் கோவில் அழகு பொலிவுற்றுகோபுரத்துடன் காட்சி தருவது யாவரும் அறிந்ததேநம் கோவில் திருப்பணிகளை சிரமேற்கொண்டு அழகுற முடித்த தலைவர் திரு.சண்முகநாதன் அவர்கள் 
சுவிசிற்கு வருகை தந்துள்ளார்அவரை கௌரவிக்கும் முகமாக ஓர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம்இங்கு மகா கும்பாபிஷேக மலர் வெளியிடப்படும் என்பதையும்கோவில் திருப்பணி நிதி அறிக்கையும் 
தாக்கல் செய்யப்படும் என்பதையும் அறியத்தருகிறோம்
திருசண்முகநாதன் அவர்கள் சில நாட்களே இங்கு நிற்பார் என்பதைக் 
கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் என்பதால்
அனைவரும் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு மனிதனுக்கான கௌரவம் என்பது

அம்மனிதனின் சேவைக்கான கௌரவம்

நாம் எல்லோரும் கலந்து கொண்டு அவரிற்கான கௌரவத்தை 

வழங்குவோம். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: Kirchgemeindehaus Rüfenacht
Sperlisacher - 02
3075 Rüfenacht
காலம் : 24.08.2014 பி.பகல் 15.00 மணிக்கு 


தொடர்புகள்:
.கைலாசநாதன்(குழந்தை) 031-9513381 079-9373289
சு.சண்முகநாதன் 079-5383920
சு.இந்திரன் 076-5203343


ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடு – 2013

இடம்:- சோதியா கலைக் கல்லூரி28பிலாஸ் துலா சப்பில்75018 பரீஸ்,பிரான்ஸ்
காலம்:- 15. 08. 2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி 

யாபுங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள்சங்க பிரான்ஸ் கிளை அங்குரார்ப்பண நிகழ்வோடு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர்  வெளியீடும்நடைபெறவுள்ளது.
கும்பாபிசேக மலர் வெளியீடுவரவு செலவு அறிக்கைகும்பாபிசேகஇறுவெட்டு வெளியீடுகலந்துரையாடல் என்பன இடம்பெறவுள்ளன.அனைத்து ஊரதீவுமடத்துவெளி மக்களையும்ஆதரவாளர்களையும்அன்புடன் அழைகின்றோம்ஒருங்கிணைப்பு குழுவுடன்.சண்முகநாதன் ( தலைவர்ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயபரிபாலன சபை ) 
தொடர்புகளுக்கு0662775086, 0651604942

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடு – 2013

இடம் – பாபா திருமண மண்டபம், ரொறன்ரோ, கனடா
காலம் – 10.08.2014 ஞாயிறு காலை 10 மணி

கும்பாபிசேக மலர் வெளியீடு, வரவு செலவு அறிக்கை, கும்பாபிசேக இறுவெட்டு வெளியீடு, கலந்துரையாடல் என்பன இடம் பெறவுள்ளன. எனவே அனைத்து ஊரதீவு, மடத்துவெளி மக்களையும், ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பவர் – தாயகம் சென்று திரும்பிய அ.சண்முகநாதன்
           (தலைவர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய பரிபாலன சபை)
           தொடர்புகளுக்கு – 647-300-9548       புங்குடுதீவு-மடத்துவெளி (வயலுார்)
அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2014

அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான விஜயவருடம் பங்குனி மாதம் 8ம் நாள் (22.03.2014) சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மகோற்சவ பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்
21.03.2014 வெள்ளிக்கிழமை   சாந்தி வழிபாடுகள்
22.03.2014 சனிக்கிழமை       1ம் திருவிழா (கொடியேற்றம்)
23.03.2014 ஞாயிற்றுக்கிழமை  2ம் திருவிழா
24.03.2014 திங்கட்கிழமை      3ம் திருவிழா
25.03.2014 செவ்வாய்க்கிழமை  4ம் திருவிழா
26.03.2014 புதன்கிழமை        5ம் திருவிழா
27.03.2014 வியாழக்கிழமை     6ம் திருவிழா
28.03.2014 வெள்ளிக்கிழமை    7ம் திருவிழா
29.03.2014 சனிக்கிழமை        8ம் திருவிழா
30.03.2014 ஞாயிற்றுக்கிழமை  09 திருவிழா (தேர் திருவிழா)
31.03.2014 திங்கட்கிழமை      10ம் திருவிழா (தீர்த்தத்திருவிழா)
01.04.2014 செவ்வாய்க்கிழமை  11ம் திருவிழா
02.04.2014 புதன்கிழமை        வைரவர் மடைஆலய பரிபாலன சபையின் வசர வேண்டுகோள்


எதிர்வரும் பங்குனி மாதம் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஆலயத்தில் எஞ்சியுள்ள புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்யவேண்டியுள்ளது. எனவே தயவுசெய்து இதுவரை நிதியுதவி செய்யச் சந்தர்ப்பம் கிடைக்காத புலம் பெயர்ந்து வாழும் அன்புக்குரிய மடத்துவெளி, ஊரதீவு முருகன் அடியார்களிடம் இருந்தும் ஆலய பரிபாலன சபையினர் நிதியுதவியை வேண்டி நிற்கின்றனர்.


ஆலய பரிபாலன சபையின் முக்கிய அறிவித்தல்

மடத்துவெளி ஸ்ரீபாலசுப்பிரமணிய ஆலயத்தின் திருவிழாமாதப்பூசைவிசேடபூசைகளில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை செய்து வந்த ஆலய உபயகாரர்கள் தொடர்ந்தும் செய்ய விரும்புமிடத்து ஆலயத்தொலைபேசியுடன் தங்களின்தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றனர்தவறும் பட்சத்தில்அவ்விடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றனர்எனவே தயவுசெய்து தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுங்கள். 


புலம்பெயர் வாழ் மக்களுக்கு ஆலய பரிபாலன சபை தலைவரின் அன்பான வேண்டுகோள்

தங்களின் உதவியுடன் இவ்வாலய திருப்பணி வேலைகள் 85சதவீதம் செய்து முடித்து கும்பாபிஷேகம் 28.06.2013 இல் நிறைவடைந்துள்ளது. ஆனால் ஆலய திருப்பணி வேலைகளை முழுமையாக பூரணப்படுத்த மேலும் நிதி தேவையாகவுள்ளது. நிதியுதவிசெய்ய விரும்புபவர்கள் ஆலய இலங்கை வங்கி கணக்கு இலக்கம் 74602768 இற்கு அனுப்பி வைத்து ஆலய தொலைபேசியில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள் ளுகின்றேன்.அன்புடன்
அ.சண்முகநாதன்
தலைவா், ஆலய பாிபாலன சபை
தொலைபேசி +940213202582