புங்குடுதீவு மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் பல வருடங்களாக எவ்வித புனரமைப்பு வேலைகளும் செய்யப்படாத நிலையில் பொலிவிழந்து அழிவடையும் நிலையில் காணப்படுகின்றது. ஆலயத்தின் கூரை மரங்கள் பழுதுடைந்து கூரை உள்ளிறங்கி எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக 1990 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம் பெயர்ந்ததிலிருந்து, மீண்டும் 1995 இல் சிறிய தொகை மக்கள் மட்டுமே எம்மண்ணில் மீள குடியமர்ந்து இன்று வருடங்கள் இருபத்தேழு கடந்த நிலையிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது உள்ளமை எமது துர்பாக்கியமே. எனவே பல நாறு வருடங்களாக எம்மூதாதையர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயத்தை அழியவிடாது புனரமைத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குறிப்பாக புலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற மடத்துவெளி, ஊரதீவு மக்களினது கைகளில் தான் தங்கியுள்ளது. இது இப்பிதேச மக்களினது தார்மீகக் கடமையுமாகின்றது.
எனவே இவ்வாலயத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவாக தொடங்கவுள்ள நிலையில் இவ்வறிவித்தலை புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். ”சிறுதுளி பெரு வெள்ளம்” எனும் முதுமொழிக்கு இணங்க மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையாரின் அடியார்களாகிய நாம் அனைவரும் இணைந்து எங்கள் ஆலயத்தின் திருப்பணியை செய்து முடிப்போம். புலம்பெயர் நாடுகளான சுவிற்சர்லாந்து, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா , ஜேர்மனி போன்ற நாடுகளில் வாழும் எம்மக்களிட மிருந்து நிதியுதவியை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக