ஞாயிறு, 4 மே, 2014


சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவாதியின் புதிய படங்கள் வெளியாகி உள்ளன
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான புதிய படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சென்னை

ஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது. பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முத-ல் விளையாடிய ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.  

இலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் 
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று தன்னை சந்தித்த இலங்கை பேராயர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார். 
சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் 
7–வது ஐ.பி.எல். போட்டித் தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நேற்று முதல் தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு
மூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அமைச்சு 
நடப்பாண்டில் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இவர்கள் தேசிய கல்வியற் கல்லுரிகளில் இருந்து நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்படுவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் புலிக் கொடிக்கு தடை 
 கனடா நாட்டில் உள்ள பாடசாலை ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. 
மீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுகளும் பேச்சு 
இலங்கை இந்திய மீனவர் பேச்சைத் தொடர்ந்து இரு தரப்பு அமைச்சரவை மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாகக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பேச்சாளர் நரேந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!- இருவர் கைது
யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாள் வீச்சு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அழைத்துள்ள ஜனாதிபதி
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை கொழும்பு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவர்களை கொழும்புக்கு அழைத்துள்ளார்.

யாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்றர் தூரம் பயணித்த ரயில் பெட்டிகள்
கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று, சுமார் 300 மீற்றர் வரையில் பயணித்தாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

சனி, 3 மே, 2014

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆயுதங்களை அனுப்ப வேண்டும். வெடிகுண்டுகளை வெடிக்க வேண்டும் - இந்த மூன்றும்தான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்களின் டியூட்டி என்பார்கள்.  
கழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் இருந்து கால்குலேட்டரும் விழுந்தது


சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. "பயணிகளின் கனிவான கவனத்திற்கு... பெங்களூரிலிருந்து வரும் ஹவ்காத்தி எக்ஸ்பிரஸ் ரயில்... ஒன்பதாவது நடைமேடையிலிருந்து  சற்றுநேரத்தில் புறப் படத்தயாராக இருக்கிறது'’’என்ற அறிவிப்புக் குரலையே மிஞ்சியது அந்த குண்டுவெடிப்புச் சத்தமும் அதனை"ஹ
லோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும்  யாருக்கு எவ்வளவு சீட்டு கிடைக்கும்ங்கிற கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும் மட்டும் குறையவே குறையாது.''

குமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் பதிலைத் தேடவேண்டியிருக்கிறது.
வழக்கம்போல ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்திருக்கும் இலங்கை, பாலியல் குற்றங்களில் சொற்பளவிலான
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் கருகி பலி
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பட்னாகரில் ஒரு பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று மாலை

ஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி
 

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.


குண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா முதல்வர் -கருணாநிதி 
சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன், ஜெயலலிதா சென்னை வந்து இருக்க வேண்டாமா? என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக அறிக்கை விடுகிறார்
ஆனந்தசங்கரி கிண்டல்
தங்க முகுந்தன் எமது கட்சியில் அங்கத்தவராக இருந்தால்தானே கட்சியிலிருந்து விலக முடியும். அவர் எமது கட்சி அங்கத்தவரே இல்லை. அப்படியிருக்க, அவரது அறிக்கையை ஒரு கதை என்று என்னிடம் சிலர் விசாரிக்கின்றனர்.

TULFு கட்சிக்குள் மோதல்

சங்கரி இருக்கும்வரை TULF க்குவளர்ச்சியில்லை
பதவி விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு
சமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட்டுத் தலைமைகளை கணக்கெடுக்காமை:அரச ஊடகம் 

பிளவு நிலையில் TNA

ஒதுக்கப்படுவதாக சங்கரி, சித்தா போர்க்கொடி ; சுரேஷ், செல்வம் பொறுமை காப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய உட்கட்சி மோதல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளதாகக் தெரிய வருகிறது. ஐந்து கூட்டுக் கட்சிகளுக்குள் கட்சிகளுக்கிடையிலான பூசலாகவும், அது தவிர ஐந்து கட்சிகளுக்குள்ளும் தனித்தனியாக உட்கட்சிப் பூசலாகவும் முன்னெப்போதும் இல்லாதவாறு மோதல்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
தமிழரசுக் கட்சிக்குள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையே நேரடியாகவும், மறைமுகப் பனிப் போராகவும் மோதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை அக்கட்சியானது கூட்டமைப்பிலுள்ள ஏனைய நான்கு கட்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுச் செயற்பட முனைந்து வருவதால் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து கூட்டுக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து, சம பலாபலன் என உடன்பட்டிருப்பினும் அது பின்பற்றப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் கூட்டமைப்பை பதிவு செய்வதிலும் போலிக் காரணங்களைக் கூறி இழுத்தடிப்பு நிலை காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கூட்டுக் கட்சியிலுள்ள வி. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியையும், த. சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பையும் தற்போது பெயரளவில் மட்டுமே பயன்படுத்திவரும் தமிழ்க் கூட்டமைப்பு அக்கட்சிகள் இரண்டையும் கூட்டமைப்பிலிருந்து முற்றாக நீக்கிவிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும் கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
அதே போன்று வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் மட்டுமல்லாது சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற ஆரம்ப கால கூட்டமைப்புத் தலைவர்களுடனும் மரியாதையின்றி நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சிக் கூட்டத்தில் வாக்குவாதப்பட்ட நிலையில் அனந்தி வெளிநடப்புச் செய்திருந்தார்.
இதேவேளை வெளிநாட்டுப் பயணங் களின் போது தான் திட்டமிட்டுப் புறக் கணிக்கப்படுவதாக சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. கூட்டுக் கட்சியில்லாத சிலர் உள்வாங்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கேட்டால், தொழில்நுட்ப உதவியாளர் எனத் தெரிவிக் கப்படுவதாகவும் சித்தார்த்தன் கவலை வெளியிட்டிருந்தார்.
இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது - பாஜக 
news
இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து சீனர்களும் தமிழக மீனவர்களை தாக்குவதாக கூறினார்.
 
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி அசத்தல் வெற்றி 
ஐபிஎல் சீசன் 7-ல் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 
 
உக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை 
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 7 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் சென்ற 5 உக்ரெய்ன் நாட்டைச் சேர்ந்தவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி 
நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மத்தியமுகாம் 2ல் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டோர் உட்கொண்ட உணவு நஞ்சானத்தில் 60 பேருக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் தமிழர்கள் 5 கி.மீ. நடைப் பயணம்
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு நிதி திரட்ட அமெரிக்க தமிழர்கள் 5 கிலோ மீட்டர் நடைப் பயண நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
ஆளும் கட்சியின் சிலர் உட்பட  கூட்டணி கட்சிகளும் எதிர்கட்சியோடு சேர ஆர்வம் .பேச்சுவார்த்தை 
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தல்களின் போது எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அரசியல் ஒரு சாக்கடை;
அதில் எது வேண்டுமானாலும் இருக்கும் :
அழகிரி அதிரடி பேட்டி
 

ஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... :
அழகிரி கேள்வி - பதில்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இருந்து......
2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை 
சித்ரதுர்கா மாவட்டம் ஹொழல்கெரே தாலுகா குஞ்சிகனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளம்மா (வயது 35). இவர்களுக்கு பிரியா (13), கீர்த்தி (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

வெள்ளி, 2 மே, 2014


 

சென்னை 34 ஓட்டங்களால்  வெற்றி
 மழை காரணமாக சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
 7–வது ஐ.பி.எல். தொடரில் முதற்கட்டமாக 2
மட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர் உல்லாசம்
இவர்களை மட்டக்களுப்பு பொலிஸார் வியாழக்கிழமை(1) காலையில் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.  இதனையடுத்து மாணவியை பொலிஸார் வைத்தியசாலையில்

சமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்

எமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. தாம் இங்கு தொடர்ந்து இருப்பது உள்ளூர் மக்களுக்கு எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது என்பதை வெளியார் உணர்ந்தால் அவர்களை வெளியனுப்புவது இலகுவாகிவிடும். இவ்வாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ஆந்திராவில் குண்டு வெடித்திருக்கும்: சிபிசிஐடி ஐ.ஜி.
 
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னை
னது ஆரவாரமான அதிரடி ட்ரம் பீட்டுகளால் வலம் வந்து உலகப் புகழ்ப் பெற்றவர் நம் ட்ரம்ஸ் சிவமணி. உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்ப்பவர் என்றே சொல்லலாம். 

வியாழன், 1 மே, 2014சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத உளவாளி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் அழித்து, சீர்குலைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நாசகார திட்டங்களை தீட்டி அரங்கேற்றி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
காதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்! கணவரைக் கொன்று கைதான பெண் பரபரப்பு தகவல் (வீடியோ இணைப்பு)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மூச்சு திணறடித்துக் கொலை செய்ததை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வாய் தவறி கூறிய பெண் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க முனைப்பை பாதிக்கும் - கனடா 
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும் என கனடா அறிவித்துள்ளது. 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் 
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலமும், பொதுக்கூட்டமும்   கரவெட்டி ஞானவைரர் ஆலய முன்றலில் தற்போது நடைபெறுகிறது.

இலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்றம் தீர்ப்பு 
அகதி ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக இலங்கைப் பிரஜைகள் மூவருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
2009ம் ஆண்டு கோட்டப்பட்டு அகதி முகாமில் இருந்த போது சக அகதி ஒருவரை படுகொலை செய்தமைக்காக ஜெயரூபன், ராஜகோபல் மற்றும் ரகுநேசன் ஆகியோருக்கே ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
கூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் 
கூகுள் தேடலில் பல்வேறு அமைப்புகள் தேடப்பட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியவில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வவுனியாவில் ஐக்கியப்பட்ட தொழிலாளர்களின் புரட்சிகர மேதின பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் திரு,ந.தேவகிருஷ்ணன் தலைமையில் பல கோரிக்கைகளை முன்வைத்தே இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

சாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆரம்பமான ஊர்வலம் மழையால் தடைப்பட்டிருந்தது எனினும் தற்போது மழைக்கு மத்தியிலும் எழுச்சியுடன் நடை  பெற்றது -படங்கள் 

மட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வினை குழப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி¨-படங்கள் 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் மேதின நிகழ்வுகளை குழப்பும் வகையிலும் நிகழ்வுக்கு வருகை தருவோரை திசை திருப்பும் வகையிலும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

நீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ரணில்
அரசாங்கம் கசினோ சூதாட்டத்தை செயற்படுத்த முனைவது குறித்து கவலையடைவதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
அதிகாரி கோவிந்தசாமி
ரெயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது எப்படி? என்று சென்னை சென்டிரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி கூறியதாவது:–

வெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
கறுப்பு பண வழக்கு
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி தொடர்ந்த பொது நல


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெயிலில் குண்டுகள் வெடித்தன; பெண் பலி 14 பேர் படுகாயம்

தினமும் பல்லாயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை: சென்னை கலெக்டர் 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாந்தி எஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. குண்டு வெடித்ததில் ஒருவர் பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர்.

சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னை வருகை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னை வந்துள்ளனர். 

சென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயரில் முன்பதிவு செய்த நபர் யார்? 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்4 மற்றும் எஸ்5 பெட்டிகளில் குண்டு வெடித்தது. இதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். 

chennai central 02
சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 6 பேர் பலியாகியுள்ளனர்.
குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சம்பவ இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 (7)

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால்  விடுக்கப்படும் அறிவித்தல்

உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் முதலாவது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி சென்ற வருடம் சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இரண்டாவது சுற்றுப்போட்டி 19 / 20.04.2014 ஆகிய இரு தினங்கள் 12 பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டன