வியாழன், 1 மே, 2014


chennai central 02
சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 6 பேர் பலியாகியுள்ளனர்.
குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சம்பவ இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 7. 40 மணியளவில் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற 22 வயது பெண் ஒருவர் பலியானார். இதுகுறித்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ராகேஷ்மிஸ்ரா கூறியதாவது:- இன்று காலை சென்னை சென்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பாரத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் ரயிலின் 2 பெட்டிகள் சேதமடைந்தன. குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவுகாத்த்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 4- எஸ் 5 பெட்டிகளில் குண்டுவெடித்துள்ளது. இந்த 2 பெட்டிகளிலும் 70 பயணிகள் இந்த குண்டுவெடிப்பில் இரு பெட்டிகளிலும் உள்ளவர்கள் சிக்கியுள்ளனர்.
சென்னையில் சில நாட்களுக்கு முன்புதான் ஐஎஸ்ஐ உளவாளி ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.  முதல் கட்டமாக ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் போலீஸார் முற்றுகையிட்டு அந்த இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. என்ன மாதிரியான குண்டுவெடித்தது என்பது குறித்து அறிய வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். சென்னை காவல் துறை ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பில் பலியானவர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், லேசானா காயம் அடைந்தவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து கொள்ள 044-25357398 என்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக