சனி, 3 மே, 2014

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி அசத்தல் வெற்றி 
ஐபிஎல் சீசன் 7-ல் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 
 
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. 
 
169 ஒட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த வெற்றியின் மூலம் தொடர்சியாக மும்பை அணி எதிர்கொண்ட 5 போட்டிகளின் போது ஏற்பட்ட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக