வியாழன், 1 மே, 2014


சென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயரில் முன்பதிவு செய்த நபர் யார்? 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்4 மற்றும் எஸ்5 பெட்டிகளில் குண்டு வெடித்தது. இதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். 


இந்த ரயிலில் வந்தவர்களின் பெயர் பட்டியலையும், அவர்களின் செல்போன் நம்பர்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் எஸ்5 பெட்டியில் வந்த ஒரு நபரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த நபர் வடநாட்டு பெயரை ரயில் முன்பதிவில் கொடுத்துள்ளார். இதையடுத்து பெங்களூரு ரயில் நிலையத்தில் ரயில் புறப்படுவதற்கு முன்பு சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகளின் உதவியோடு அந்த நபரை அடையாளம் கண்டு, அந்த நபர் ரயிலில் ஏறுவதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து பெங்களூரு போலீசார் சென்னை விரைந்துள்ளனர். 
அவர்கள் சென்னை வந்து விசாரணையில் ஈடுபடுவார்கள் என்றும், இந்த விசாரணை குற்றவாளியை பிடிக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே 
குண்டுவெடிப்பு நடந்த ரயிலின் பக்கத்து பெட்டியில் இரண்டு ஒளிந்திருந்த ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக