பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் கருகி பலி
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பட்னாகரில் ஒரு பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று மாலை
தொழிற்சாலைக்குள் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் 15 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக