ஞாயிறு, 4 மே, 2014


சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவாதியின் புதிய படங்கள் வெளியாகி உள்ளன
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான புதிய படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 14 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குண்டு வெடிப்புக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் உயிரிழந்த சுவாதியின் மார்பில் குண்டு பாய்ந்தது போன்றும், குண்டு வெடித்த ரயில் பெட்டியில் பொருள்கள் சிதறி கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக