சனி, 3 மே, 2014

முகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக அறிக்கை விடுகிறார்
ஆனந்தசங்கரி கிண்டல்
தங்க முகுந்தன் எமது கட்சியில் அங்கத்தவராக இருந்தால்தானே கட்சியிலிருந்து விலக முடியும். அவர் எமது கட்சி அங்கத்தவரே இல்லை. அப்படியிருக்க, அவரது அறிக்கையை ஒரு கதை என்று என்னிடம் சிலர் விசாரிக்கின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக சுவிஸிலிருந்து வந்த அவருக்கு தங்க இடமும், சம்பளமும் கொடுத்து பாவம் எனக் கருதி எம்முடன் வைத்திருந்தால், அவர் எமக்கே துரோகம் செய்ய முனைகிறார். அவரது முட்டாள் தனத்தை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். அவர் இதுவரை எம்முடன் இருந்து கொண்டே எமக்குத் துரோகம் இழைத்துள்ளார். இப்போது அது தெரியவந்ததும் எம்மீது வீண் பழி சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறார்.
இதுவரை காலமும் என்னுடன் ஒரு எட்டப்பனை வைத்திருந்தமையையிட்டு நான் வேதனை அடைகின்றேன் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
அவரை நான் விலக்க அவர் கட்சி அங்கத்தவர் இல்லை என்பதால் அவர் விரைவாக எமது அலுவலகத்திலிருந்து தானாக வெளியேறுவது அவருக் குத்தான் நல்லது எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக