சனி, 3 மே, 2014

ஆளும் கட்சியின் சிலர் உட்பட  கூட்டணி கட்சிகளும் எதிர்கட்சியோடு சேர ஆர்வம் .பேச்சுவார்த்தை 
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தல்களின் போது எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்டத்தினருடன் ஆளும் கட்சியின் கூட்டணித் தலைவர்கள் சிலர் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சியில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக