வெள்ளி, 2 மே, 2014


கவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ஆந்திராவில் குண்டு வெடித்திருக்கும்: சிபிசிஐடி ஐ.ஜி.
 
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
.

செய்தியாளர்களின் சந்திப்பின்போது, குண்டுவெடிப்பு சம்பத்தில் சந்தேகிக்கப்படும் நபர் அடங்கிய வீடியோ பதிவு வெளியிடப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பதிவானது. சந்தேகப்படும் நபர் பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார். இவரை பறறிய தகவல் தெரிந்தால் 770864202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது, 
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூரில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் துப்பு கிடைத்துள்ளது. 5.40க்கு வரவேண்டிய ரெயில் ஒரு மணிநேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது. சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ஆந்திர எல்லையில் அந்த குண்டுவெடித்திருக்கும்.
ரெயிலில் இருந்து இறங்கியதும் ஒரு நபர் வேகமாக ஓடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்தான் குற்றவாளி என்று கூற முடியாது. அந்த நபர் விசாரணைக்கு ஆஜரானால் நல்லது.
உடைந்து கிடந்த கடிகார பகுதியை வைத்து பார்க்கும்போது இந்த குண்டுவெடிப்புக்கு டைமர் பாம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
வெடிகுண்டுகள் தமிழகத்தில் வைக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை. டைமர்களை வைத்து பார்க்கும்போது, தமிழகத்திற்கு வெளியில் உள்ள ரயில் நிலையத்தில் தான் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மோடிக்கு எதிராக வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல் இல்லை.

பாட்னா வெடிகுண்டு போலவே சென்டரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டும் இருந்தது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.,உளவாளி ஜாகிர் உசேனுக்க இதில் தொடர்பில்லை. ரயிலில் இருந்து ஒருநபர் வேகமாக ஓடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் விசாரணைக்கு ஆஜரானால் நல்லது. அவர் தான் குற்றவாளி என கூற முடியாது. பெங்களூரில் சி.பி.சி.டி., போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக