சனி, 3 மே, 2014

TULFு கட்சிக்குள் மோதல்

சங்கரி இருக்கும்வரை TULF க்குவளர்ச்சியில்லை
பதவி விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு

ஆனந்தசங்கரி இருக்கும் வரை தமிழர் விடுமலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் அவர் கட்சியைவிட்டுப் போகும்வரை அல்லது அவரது இறுதிக்காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்து கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறியத்தருகிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரிக்கு அக்கட் சியின் முக்கியஸ்தரும். நிர்வாக உத்தியோகத்தருமான தங்க. முகுந்தன் நீண்ட கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
உங்களுடன் வாக்குப்வாதப்பட்ட பின் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன் என்பதையும் அறியத் தருகிறேன்.மேலும் சில விடயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பத்துப் பாரிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு உங்களுக்கு விளக்கமான கடிதமொன்றினை அனுப்பி வைக்கின்றேன்.
உங்களுடைய முட்டாள்தனமான அறிக்கைகள் நீங்கள் தமிழருக்காக அரசியல் செய்கிaர்களா அல்லது பெரும்பான்மையினத்துக்கு சாதகமான அரசியல் செய்கிaர்களா என சாதாரண பொதுமகனுக்கு மாத்திரமல்ல எங்களுக்கே புரியாமல் பெரும் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருக்கும்வரை கடிதம் எழுதும் பணியை மாத்திரமெ செய்வீர்கள். மக்களயுக்கு எந்தவிதமான உருப்படியான பணியை கூட்டமைப்பில் எவருமே செய்வதாக இல்லை. இதில் நீங்களும் அடங்குவீர்கள்.
நாம் ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கியிருப்பது மேல் எனக் கருதி இம்முடிவை எடுத்துள்ளேன் என்று தங்க முகுந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக