சனி, 3 மே, 2014

உக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை 
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 7 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் சென்ற 5 உக்ரெய்ன் நாட்டைச் சேர்ந்தவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
கிழக்கு உக்ரெய்னின் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு படியாக, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ரஷ்யா மீது கடுமையான மேற்குலக நாடுகள் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதுடன் ரஷ்ய தூதுவரான விளாடிமீர் லுக்கின் அவர்களில் தலையீடுமே இந்த விடுதலைக்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இதேவேளை, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதத் தலைவர் வியாச்சஸ்லாவ் போனோமர்யோவ் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
 
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் இந்த கண்காணிப்பாளர்களை தமது விருந்தினர்கள் என்றும் அவர்களை தாம் நிபந்தனையின்றி விடுதலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக