ஞாயிறு, 4 மே, 2014

ஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அழைத்துள்ள ஜனாதிபதி
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை கொழும்பு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவர்களை கொழும்புக்கு அழைத்துள்ளார்.


ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஆளும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தின் பணிகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.
அத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஊவா மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தை கலைப்பது குறித்து இதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக