புதன், 2 மார்ச், 2022

எமது பாடசாலையான கமலாம்பிகை வித்யாலயத்துக்கு சுவிஸில் வாழும் திரு. சந்திரபாலன்(புங்-8) அவர்கள் வருகைதந்துபோது...

நமது பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் பாடசாலை புனரமைப்பு சம்பந்தமாக கேட்டறிந்து பல உதவித்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் திரு. சந்திரபாலனால் ஆரம்பிக்கப்ப்ட ''கண்மணி கல்விக்கொடை''யின் இந்த மாத பங்களிப்பு நிகழ்வில் சந்திரபாலன் அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு தரம் 6 முதல் தரம் 11 வரை 1 ஆம் 2 ஆம் 3 ஆம் இடத்தை பிடிக்கும் 18 மானவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
இந்திட்டத்தின் மூலம் ஒவ்வொருமாதமும் 18 ஆயிரம் ரூபா திரு. சந்திரபாலன் அவர்களால் கமலாம்பிகை வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதைவிட பள்ளி கூடத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் அவரின் நிதியுதவியுடன் தொடங்கப்படுகிறது.
திரு. சந்திரபாலன்நமது ஊருக்கு பல உதவிகளை செய்துவருகிறார்
அவருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Du, Arunasalam Kailasanathan, Nimalan Ariyaputhiran und 73 weitere Personen
15 Kommentare
Gefällt mir
Kommentieren
Teilen

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்துக்கு நவீன பேரூந்துநூலகம்

 

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நான்கு தசாப்த சட்டத்துறை வரலாற்றில் சரித்திரம் படைத்த தமிழச்சி தவராசா கௌரிசங்கரி


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கௌரிசங்கரி தவராசா ..இந்தவார செய்திகளில் முன்னிடத்தை பிடித்த இலங்கை தமிழச்சி இவர் . 1955 இல் யாழ் மாவட்டம் அளவெட்டியில் பிறந்து இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று

நான் கண்ட உயிர்நண்பன் துரை .. ரவி (பாகம் 1)


...............................................................................................................
துரைராசா ரவீந்திரன் இன்று எம்மோடு இல்லை .யார் இந்த துரை ரவி .நீண்டகாலம் ஒட்டிப்பழகி உறவாடி செயலாற்றி வாழ்ந்து

நான் கண்ட உயிர்நண்பன் துரை .. ரவி (பாகம் 2)



....................................................................................................................

நான் கண்ட உயிர்நண்பன் துரை .. ரவி (பாகம் 3)

  

..................................................................................................................
தமிழ்நாட்டுக்கு மிக அண்மையில் இருப்பதாலும் பல கடல் குடாக்கள் ஓடைகள் ஆழமான கடல் தொடுப்புக்கள்

நான் கண்ட உயிர்நண்பன் துரை..ரவி (பாகம் 4 )


........................................................................................
பல வரலாற்றுப்பதிவுகளை கொண்ட புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் பாசறையில் புடம்போடப்பட்ட

நான் கண்ட உயிர்நண்பன் துரை -ரவி பாகம் 5

 

.................................................................................................

யாழ் பல்கலைக்கழக நாடகப்பட்டறை 80 களின் ஆரம்பத்தில் தமிழுலகில் கனதியானதும்  நல்ல அங்கீகாரத்தை  வழங்குவதுமாக

நான் கண்ட உயிர்நண்பன் துரை .. ரவி (பாகம் 6)

 

--------------------------------------------------------------------------------

நாடகம் ,கவிதை .சிறுகதை எங்கும் தான் பேனாமுனையை தீட்டி ஒளிபரப்பிக்கொண்டே இருந்த துரை ரவியின்

நான் கண்ட உயிர் நண்பன் துரை .. ரவி (பாகம் 7 )


......................................................................................................

துணிச்சல் . வேகம் . விவேகம் . உறுதி இத்தனையும் ஒருசேர  வாழக்கூடிய  உதாரணமனிதனாக  திகழ்ந்தவன்  எங்கள்  உயிர்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

 


திங்கள், 1 பிப்ரவரி, 2021


புங்குடுதீவு கமலாம்பிகையில் கண்மணி கல்விக்கொடைத்திட்டம் ஆரம்பம்
............................................................................................................
==புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகாவித்தியாலயம் .
==01.02.2021 திங்கட்கிழமை காலை 10.30 மணி
தரம் 6 முதல் தரம் 11 வரை தவனைப்பரீட்சையில் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வுறும் 18 மாணவர்களுக்கு அவர்களின் திறனை மென்மேலும் ஊக்குவிக்குமுகமாக மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாவினை நன்கொடையாக வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவுள்ளது மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
விதிமுறைகள்




------------------------------------------------------------------
நோக்கம் .
.....................
 பாடசாலையின் மாணவர்களின்  கல்வி திறனை  மேம்படுத்துமுகமான  ஊக்குவிப்பு 
அனுசரணை 
.................................
புங்குடுதீவு  8  இல்  வாழ்ந்து மறைந்த  திருமதி  சிவசம்பு கண்மணி  அவர்களின் ஞாபகார்த்தமாக  அவரது  புதல்வன்  சுவிஸ்  வாழ்  சிவ-சந்திரபாலன் அவர்களால்  வழங்கப்படும் 
 விதிமுறைகள்
............................. 
புங்குடுதீவு  மடத்துவெளி  கமலாம்பிகை  மகா வித்தியாலயத்தில்   தரம்  6  முதல்  தரம்  11   வரையிலான வகுப்புகளில் ஒவ்வொரு தரத்திலும் தவணைப்பரீட்சைகளின் முடிவில்  முதல் மூன்று  இடங்களை பெறுகின்ற  மாணவர்களுக்கு  தலா  ஆயிரம்  ரூபாவினை  பணமாக வழங்கவுள்ளோம் .இந்த கொடுப்பனவு 
மாதந்தோறும்  வகுப்பு  ஆசிரியர்களினதும் அதிபரினதும்  முறையான தரவு  படிவத்தில்  பெற உரித்துள்ள  மாணவர்களின் கையொப்பத்துடன்  வழங்கப்படும வகுப்பாசிரியர் அல்லது  அதிபர் முடிந்தவரை  இந்த கொடுப்பனவு  பெற்றோர்  சம்மதத்துடன் அல்லது பெற்றோரினால் உரிய முறையில் செலவு செய்யப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் 
கொடுப்பனவு பெறுகின்ற மாணவர்கள் அதனை  கற்றல் உபகரணங்கள் , மேலதிக புத்தகங்கள் , ஆடை ,காலணி,  காலுறை ,அன்றாட உணவுத்தேவை, பிரத்தியேக  வகுப்புக்கான  பயணச்செலவு போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்   காலக்கிரமத்தில் இந்த கொடுப்பனவு  உரிய முறையில் பயன்படுத்தாமல்  எதாவது  துஸ்பிரயோகம் செய்யப்படுவது அறியப்படடால்   பொருட்களாக  வழங்கும் நிலை  ஏற்படலாம்   மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதிபர்  ஆகியோர்  முறைகேடுகள் பற்றி  நேரடியாக  மின்னஞ்சல்  ,வைபர் , ,தொலைபேசி மூலம் அறியத்தரலாம் , உங்கள் முறைப்பாடுகள்  மிக மிக  ரகசியமாக பேணப்படும் pungudutivu1@gmail.com 0041791200006,
நடைமுறைப்படுத்தல் 
...............................................
வருடத்தின் மூன்று  தவணைப்பரீட்சைகளின்  முடிவில்  ஒவ்வொரு வகுப்பிலும்  எல்லாப்பாடங்களினதும் மொத்த புள்ளிகளின் தரவரிசையில் /பிள்ளை  1 ஆம்  2 ஆம் 3 ஆம் இடங்களை பெறுவோருக்கு ஒவ்வொருமாதமும் அதற்கானபடிவத்தில்  கையொப்பம் பெறப்பட்டு இந்த ஆயிரம் ரூபா  வழங்கப்படும் அதாவது  ஒரு தவணைப்பரீட்சை  முடிய கிடைக்கும் பெறுபேறுகளின் மொத்தபுள்ளிகள்  தரவரிசை   படி  1 ,2 ,3 ஆம் இடங்களை  அடைந்தோருக்கு தொடர்ந்து  மாதம் தோறும் வழங்கப்படும் அடுத்த தவணை பரீட்ச்சை  முடிவு வரும் வரை   இந்த பெயர் பட்டியல் மாறாது .  மீண்டும் அடுத்த தவணை பரீட்சை  முடிவின் படி  தொடரும் அப்போது பெயர்பட்டியல் மாற  வாய்ப்புண்டு 
வழங்குநர் மற்றும்  நெறியாளர்கள்
......................................................
 சுவிஸ்  வாழ்  சிவ.சந்திரபாலன்  தனித்து இந்த  அறக் கடடளைக்கான   நிதியை  வழங்குவார் . இதனை செயல்படுத்திலும் ஆலோசனை வழங்குவதிலு ம்  கொடுப்பனவு விநியோகம்  செய்வதிலும்திரு கிருஸ்ணபிள்ளை பாஸ்கரன்  ஆகியோர் பங்களிப்பார்

 


வெள்ளி, 1 மார்ச், 2019


























சுவிஸ் உறவுகளின் வியத்தகு சேவை -புங்குடுதீவு  வடக்கு வீதிகள் ஒழுங்கைகள்  எங்கணும்  ஒளிவெள்ளம் 
சுவிஸ் சிவ-சந்திரபாலன்  யாருமே நினைத்துக்கூட பார்த்திராத    தீட்டி     கண்டுள்ளார்          மடத்துவெளி  ஊரதீவு  வாரகீவு கேரதீவு  அடங்கிய புங்குடுதீவு வடக்கு  பகுதி முழுவவதும் உள்ள  வீதிகள்  ஒழுங்கைகள்      மக்கள்   உள்ள ஒற்றையடி      பொருத்தி  ஒளிவெள்ளம் பாய்ச்சி உள்ளார்   மொத்தமாக  85   மின்குமிழ்களை வாங்கி   பிரதேசசபையிடம்      பொருத்துவதட்கான  செலுத்தி இந்த மாபெரும் அத்தியாவசியமான   திட் டத்தை  முடித்து    பெற்றுள்ளார் சந்திரபாலனும்     அவருக்கு  தோள்   சில நண்பர்களும் (இ.ரவீந்திரன்.எ.திகிலாலாலக்ன , கு சுரேஷ்  எஸ் சிவா   சு சந்திரன்  க உலகேஸ்வரன் )  செயல்பாடடை  ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளார் பி ச உறுப்பினர்      திருமதி யசோதினி  சந்திரகுமார்  பாராட்டுக்கள்