வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நான் கண்ட உயிர்நண்பன் துரை..ரவி (பாகம் 4 )


........................................................................................
பல வரலாற்றுப்பதிவுகளை கொண்ட புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் பாசறையில் புடம்போடப்பட்ட இளைஞர்களில் இரண்டாம் வரிசையில் முன்னணி வகித்தவன் துரைரவி.சனசமூக நிலையத்தின் எல்லா செயல்பாடுகளிலும் மூத்த வழிகாட்டிகளை பின்பற்றி அவர்களோடு ஒட்டி உறவாடி அனுபவரீதியில் தன்னை நன்கு பக்குவப்படுத்திக்கொண்டவன் சமூகநலப்பணிகளில் மிகசிறுவயதிலேயே ஈடுபாடு காட்டி துணிச்சல் உறுதி விவேகம் தன்னம்பிக்கை கொண்டவனாக தன்னை பலப்படுத்திக்கொண்டான் . விளையாட்டு நாடகம் சிரமதானம் சமூகசீர்கேடுகளை களைதல் ஆலய நிர்வாகம் விவசாயப்புரட்சி என எங்கும் பங்களித்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டவன் . பின்னாளில் முன்னணி இளைஞர்கள் பலர் வெளிநாடு செல்ல இவனது பங்குதான் அபரிதமான வளர்ச்சியை தந்தது சனசமூகநிலையம் பாலசுப்பிரமணியர் ஆலயம் வல்லான் கிராம முன்னேற்ற சங்கம் மலர்விழி நாடக கலாமன்றம் என அத்தனையிலும் கோலோச்சினான்.வயலூர் முருகன்ஆலயத்தின் செயலாளராக உயன்ர்து நின்றான். அந்த காலங்களில் இளைஞர்களின் பற்றாக்குறையினால் மகளிர் அணியை திரட்டி ஆலய கூட்டுப்பிரார்த்தனை .அன்னதானப்பணி சனசமூக நிலய செயல்பாடுகள் .சிரமதானப்பணிகள் எங்கும் ஈடுபாடவைத்து புரட்சி செய்தான் .அத்தோடு மடத்துவெளி பிள்ளையார் ஆலயத்தை சீரமைத்தலிலும் நிர்வாகத்திலும் எஸ் கே மகேந்திரன் . ப.கனகலிங்கம் .தர்மபாலன் .கருணாகரன் போன்றோருடன் ஒருங்கிணைது ஆற்றுகைப்படுத்தினான் .பாணவிடை சிவன் ஆலய தொண்டுகளிலும் எஸ் கே மகேந்திரன் மாமனார் நாகரத்தினம் வழி நின்று உதவினான் . 1983 களில் நான் சிவலைபிட்டி சனசமூக நிலைய செயலாளராக இருந்தபோது விளையாட்டுதுறையில் அந்த நிலயத்தின் சார்பில் தீவுப்பகுதி எங்கும் சனசமூக நிலயங்களோடு தொடர்புகள் கிடைக்கப்பெற அவற்றை ஒருங்கிணைத்து புதிய தீவக சனசமூகநிலையங்களின் சமாச அமைப்பை உருவாக்கினோம் ,அந்த சூழலுக்குள் ரவீந்திரனை உள்வாங்கி அந்த மாபெரும் அமைப்பின் செயலாளராக நிறுத்தி அழகு பார்த்தேன் .ரவியின் வேகமான ஒற்றுமையான செயல்பாடுகளில் தீவக முன்னேற்றம் சீரானது .அந்த காலத்தில் தான் கரப்பந்தாட்டம் ,உதைபந்தாட்டம் என ஈடுபாடு காட்டி வந்த மடத்துவெளி சனசமூக நிலையத்துக்கு மிகதிறமையான ஒரு ஒரு உதைபந்தாட்ட அணி உருவாகி இருந்தது . ரவியின் முன்னெடுப்பில் எமது உதைபந்தாட்ட அணி தீவகரீதியில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதல் முறையாக ஒரு அதியுயர் சாதனையை படைத்தது .ஆம் அந்த சுற்றுப்போடியில் சாம்பியன் கோப்பையை வென்றுவந்தது .ரவீந்திரனின் கலையுலக பயணத்தின் ஆரம்பமே சண்முகநாதனின் எழுச்சிநாடகமான செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா என்ற சிவாராத்திரி வெளியீட்டில் வேலுப்பிள்ளை ந.ரவி போன்றோரின் சடங்கு முப்பத்தொன்றில் பந்திக்கு முந்தும் நகைச்சுவை குழுவில் இடம்பெற்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்லதொரு அத்திவாரத்தை நாட்டினான் .இந்த அத்திவார முகூர்த்தம் டான் அவனை ஒரு மகாநடிகனாக கனடா வரை கொண்டு சென்று பெயர் வாங்க வைத்தது எனலாம் .மடத்துவெளி வல்லன் சனசமூக நிலையங்களை திறம்பட ஆரம்பித்து வழிநடத்திய மதிப்புக்குரிய க. ஐயாத்துரை ஆசிரியர் மறைவைத்தொடர்ந்து வல்லன் சனசமூக நிலையத்தையும் கிராம முன்னேற்ற சங்கத்தையும் கவனிக்க யாருமின்றி இருப்பது கண்டு எஸ்.எம். தனபாலன் த.திருச்செல்வம் இணையோடு அங்கே சென்று செயல்பட ஆரம்பித்தான் . அதன் சிறப்பாக அங்கேயும் சிவராத்திரி விழாவினை நடத்தி பல நாடகங்களை மக்கள் பாராட்டும்படி மேடையேற்றினான் . ..இன்னும் வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக