பேருந்தில் இருந்து எதிர்காலத்திற்கு’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு பேருந்து நூலகம் வழங்கப்பட்டு இன்று 25,02,2022 வெள்ளிக்கிழமை காலை வேளையில் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் நூலகப்பேரூந்து சேவை தொடங்கப்படுகிறது .
அதற்கான பேரூந்து இன்றைய தினம் நமது பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேரூந்து நூலககத்தின் உள்ளே நவீன வடிவிலான பிள்ளைகளை மகிழ்விக்கும் முறையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் , படிக்கும் வசதிகள், களஞ்சிய அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்ட்டிருப்பது விசேட அம்சமாகும்.
இந்த சேவை இங்கே வர உழைத்த அன்புள்ளங்களுக்கும், இந்த பேரூந்திணை
நிறுத்தி வைக்க அழகான தரிப்பிடத்தை அமைத்துக்கொடுப்பதற்கு நிதியுதவி வழங்கிய பின்வரும் கனடா வாழ் பாடசாலை பழைய மாணவர்களிற்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் என்றென்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.
திரு.சின்னதம்பி கனகலிங்கம் (புங்-8) 200.00 $
திரு.சுப்பிரமணியம் பத்மநாதன்(புங்-7) 200.00 $
திரு.திருநாவுக்கரசு கருணாகரன்(புங்-8) 250.00 $
திரு.மார்க்கண்டு தனபாலன் (ஆசிரியர்) (புங்-8) 250.00 $
திரு.மார்க்கண்டு மோகனபாலன் (புங்-8) 250.00
திரு.நல்லையா தர்மபாலன் (முன்னாள் புங்/மத்திய மகாவித்தியால அதிபர்) (புங்-8) 250.00
SLT மொபிடெல் நிறவனம் ஈ – நூலக வசதிகளை வழங்கியுள்ளதுடன், அதன் மூலம் மாணவர்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளவும் ஈ – நூல்களை கற்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கை போக்குவரத்து சபை, SLT மொபிடெல், மனுசத் தெரண மற்றும் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை ஆகியன இந்த நூலக திட்டத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளன.
போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாது என ஒதுக்கப்பட்ட பழைய பேருந்து வண்டிகளை புதுப்பித்து பிள்ளைகளை கவரும் வகையில் நூலகம் இல்லாத பாடசாலைகளுக்கு நூலகங்கள் வழங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக , புதுப்பிக்கபட்ட 20 பேருந்துகள் 20 பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நூலக பேருந்துகள் வழங்கப்பட்ட பாடசாலைகளுள் 5 தமிழ் பாடசாலைகளும் உள்ளடங்குவதுடன் அவையாவன,
துணுக்காய் – ஐயன்கன் குளம் மகா வித்தியாலயம்
மன்னார் – அல் மனார் மகா வித்தியாலயம்
மட்டக்களப்பு – அம்பிலான்துறை மகா வித்தியாலயம்
யட்டியாந்தோட்டை – கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயம்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவி கமலாம்பிகை வித்தியாலயம்
வவுனியா – சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம்
யாழ் மாவட்டத்தில் நமது பாடசாலைக்கு மாத்திரமே நூலகப் பேருந்து வழங்கப்பட்டுள்ள்மை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக