வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நான் கண்ட உயிர்நண்பன் துரை .. ரவி (பாகம் 3)

  

..................................................................................................................
தமிழ்நாட்டுக்கு மிக அண்மையில் இருப்பதாலும் பல கடல் குடாக்கள் ஓடைகள் ஆழமான கடல் தொடுப்புக்கள் தீவுகள் கடல்கரை காடுகளை கொண்டிருப்பதாலும் மிக வேகமாக வளர்ந்து வந்த விடுதலை இயக்கங்கள் தீவுப்பகுதியை தமிழ்நாட்டுடனான போக்குவரத்துக்கு கண்வைத்து வந்திருந்தன . முக்கியமாக டெலோ புங்குடுதீவின் கோரியாவடி துறையினை பிரதான இறங்குகளமாக இறக்குகளமாக பாவிக்க தெரிவு செய்து வெற்றியும் கண்டது . சதீஷ் தலைமையில் ஒட்டி சூட்டியும் அங்கே நிலை எடுதிருந்தார்கள் அத்தோடு தீவுப்பகுதி முழுவதுக்குமான பிரசாரபீரங்கயான மனோ மாஸ்டர் மூலை மூடுக்கெங்கும் பணியாற்றினான் . மற்றொருபக்கம் பிரபலமான புலிகள் தளபதி நிலாந்தான் புங்குடுதீவில் களமிறங்கி செயல்பட்டான்.பிரசாரம் ஆட்சேர்ப்பு ஊடறுத்த பயணம் கடல் போக்குவரத்து என பல்வைகளிலும் ரவி இவர்களோடு சேர்ந்து கல்வி கற்றுக்கொண்டே செயல்பட்டான் .பாடசாலை கல்வி காலமென்பதால் வெளியில் இருந்தே உரம் சேர்த்தான் . கடல்படையின் கட்டுப்பாடில் இருந்த நெடுந்தீவு நயினாதீவு பகுதிகளில் பிரசாரத்துக்கு ஒழுங்கு பண்ணல் பிரசுரங்களை கடல்படை கண்களில் மண்ணை தூவி எடுத்துசெல்லல் யுக்தி கூட்டங்களிய ஒழுங்கு செய்தல் என வேகமெடுத்தான் . அப்போதுதான் 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து பொதுவான அமைப்பின் பேரில் செயல்பட்டன . இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறை நிர்வாகம் முடங்க மக்களின் அன்றாட பிரச்சினைகள் சட்டவிரோத மது விட்பனை , கசிப்பு கடத்தல் சமூகங்களில் புரையோடிபோன பிரச்சினைகள் எனவளரத் தொடங்க நிலாந்தன் சதீஷின் ஆலோசனையில்படி நேரடியாக விடுதலை அமைப்புக்கள் இந்தான் பிரச்சினைகளை தீர்க்க முகம் கொடுத்தால் வீண் வெறுப்பு நிலை உருவாகும் நேரகாலமும் வீணாகும் என்ற எண்ணத்தில் ஒரு விழிப்புணர்வு அமைப்பை உருவாக்கினார்கள் அதனை ரவியிடமும் அவனோடு இணைந்த நண்பர்களிடமும் கொடுத்து இயங்க வைத்தார்கள். தமிழீழசமூகவிடுதலை இயக்கமென (TESLO)பெயரிட்டு தீவுப்பகுதி முழுவதும் செய்யபட்ட அந்த அமைப்பினால் குடும்ப பிணக்குகள் . மதுபாவனைக்குறைப்பு கசிப்பு வியாபார ஒழிப்பு . காதல் விவகாரஙகளில் ஏமாந்த யுவதிகளுக்கான் தீர்வு என தீர்வு காணப்பட்டது . புங்குடுதீவு 12. மண்கும்பான் சாட்டி காவலூர் என கசிப்பு வியாபாரம் பெரும் தாதாக்களினால் கொடிகட்டிப்பரந்த பொது கச்சிதமாக கையாண்டு வெற்றிகண்டவன் ரவி. காதல் விவகாரத்தால் ஏமாற்றப்பட்டு இருந்த பல பெண்களின் வாழ்வில் விளக்கேற்றி பாராட்டுகளை பெற்றான்இவனதும் இந்த அமைப்பினதும் வழிகாட்டலில் தான் ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள் .பழையதுறையில் சில எல்லை செக்கிங்க் நடந்த போதெல்லாம் பலர் இவர்களது நண்பர்கள் உறவினர்கள் என்று சொல்லி தப்பித்துக்கொண்ட கதைகளும் உண்டு கல்வி சமூகப்பணி விடுதலைப்பணி தனியார் கல்வி நிலையம் என ஒட்டித்திருந்தவன் தனது பள்ளிதோழியான மிதிலாராணியின் உள்ளத்திலும் குடிகொண்டிருந்தான் . இருந்தாலும் அந்தக்கால காதல் கலாசாரத்தின்படி வெறும் பார்வைக்காதலோடு வளர்ந்திருந்த போதும் அதுவும் ஒரு தலையிடியை கொடுக்க ஆரம்பித்தது மிதிலாவின் வீட்டில் இந்த இளவயதுக்காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப நல்ல முடிவொன்றை எடுக்கும் பொறுப்பு ரவிக்கு வந்தது .பெரும் மன அழுத்தத்தில் இருந்த மிதிலா ஒருநாள் தான் வீட்டில் இனி இருக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் வீட்டை விட்டு வெளியே வரப்போவதாகவும் தன் உறவுக்கார தோழிகள மூலம்தகவல் அன்று காலை பாடசாலையில் இருந்த ரவிக்கு காதல்வேகத்திலேயே பறந்தது . செய்தி கேட்ட கதாநாயகன் வெண்புரவியில் புறப்பட்டான் அல்ல அல்ல மிதிவண்டியில் வேகம் கொண்டான் வந்தனன் மிதிலாவைகிகண்டனன் . மீட்டவன் என் செய்வான். ..மறுநாள் என் அன்புத்தாய் கண்மணி ஆச்சியை நாடினான் அடைக்கல்ம் கொடுத்தாள என் அன்னை . என் வீடுதான் பாதுகாப்பானது போல தோன்றியது இவ்வாறே 1 வாரம் தங்கி இருந்த நிலை கண்டு ரவியின் பாசமிகுதாயார் ^^கூட்டிக்கொண்டு வந்தனி ஏன் அங்க இங்க வச்சுக்கொண்டிருக்கிறாய் வீடடுக்கு கூட்டி வா ^^என்ற வேதமந்திரம் பொழிய இதுதான் தருணம் என்று மிதிலாவை தான் வீட்டுக்கு அழைத்து சென்று தங்கவிட்டு படிப்பை தொடர்ந்தான் .ரவியின் அன்னையும் பிதாவும் அதிகாரத்தோரணையற்ற செல்லம் கொடுத்து வளர்க்கும் எதிலும் முழுசுதந்திரத்தை கொடுத்து பார்க்கும் வித்தியாசமான தெய்வங்கள் என்றே கூறலாம் .ரவி எது செய்தாலும் என்ன முடிவு எடுத்தாலும் நியாயமான உறுதியான பக்குவமானதாகதானிருக்கும் என்று ஊகித்து அறிந்து வைத்துக்கொண்டாவரகள் இது என் அனுபவத்தில் நேரில் கண்ட உண்மை . இந்த பாகத்தில் பல சொல்ல முடியாத உண்மைகளை விட்டு செல்கிறேன் அல்லது சுருக்கி போகிறேன் பலரின் நன்மைக்காக.. அவனது வரலாற்றுப்பதிவுகளில் முத்திரை பதித்த களைப்பயணம் நாடக உலகம் சமூக சேவை தொடரென அடுத்து தொடர்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக