வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நான் கண்ட உயிர்நண்பன் துரை .. ரவி (பாகம் 6)

 

--------------------------------------------------------------------------------

நாடகம் ,கவிதை .சிறுகதை எங்கும் தான் பேனாமுனையை தீட்டி ஒளிபரப்பிக்கொண்டே இருந்த துரை ரவியின்

பரப்பில் உதயன் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற உயர்ச்சியை தொடர்ந்து ஈழநாட்டோடு நெருங்கவைத்தது.கைகோர்த்தது . யாழ் ஈழநாட்டின் உதவி ஆசிரியராக இருந்த எஸ் எஸ் குகநாதன் பாரிசில் மீண்டும் ஈழநாட்டை புதுப்பித்து ஜெர்மனி சுவிஸ் பிரிதானியா கனடா எங்கும் கிளை பரப்பி பதிப்பாசிரிசியர்கள் கொண்டு ஈழநாடு அகல கால் விரிக்க மறைந்த எழுச்சிவேந்தன் எஸ் கே மகேந்திரன் கநடப்பதிப்பின் பொறுப்பை கவனித்த சிலவருடங்களிலேயே துரதிருஷ்டமாக் உயிர் துறக்க கிடைத்த வெற்றிடம் நயினை கே பரமேஸ்வரன் மூலம் சிறப்பித்தது . நான் சுவிசுக்கு பொறுப்பான சமகாலத்தில் பரமேஸ்வரனின் ஈழநாடு கனடா வெற்றிப்பாதையில் வலம் வந்தது .அந்த எழுச்கியான காலத்தில் எலுதூதுறையில் இருந்த பெரிய வெற்றிடத்துக்குள் துரை ரவி ஈழநாடு நுழைவாசலுக்குள் உள்வாங்கபட்டான் பரமேசவரனோடு ஒட்டி உறவாடி விமர்சித்து ஆலோசனை கொடுத்து நட்புவ்வட்டதுக்குள் பலவற்றை சாதித்தான் .குறிப்பாக தேசியத்தலைவரின் 50 வது அகவை நிறைவின் போது ஈழநாடு பிரசவித்த மலருக்கு புறநானூற்றுப்பரணி என நாமம் சூட்டி பாராட்டுக்களை குவித்தான் .எம் கண்முன்னே நடக்கும் வீரம் செறிந்த ஈழப்போராட்டதை புறநானூற்றினதும் கலிங்கத்துப்பரணியினதும் கலப்பு வாரிசாகாவே நோக்கி பெயரிட்டான்ரவீந்திரன் .இத்தனை படிகளை தாண்டி வீக்கம் கொண்ட இந்த புரட்சியானை எம் தாய்நிலப்பேர் சொல்லும்புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் விட்டுவைக்குமா ..புகுந்தனன் புங்குடுதீவு பழையமாணவர்சங்கம் . . தலைமை கண்டனன் . சேவையில் மிளிர்ந்தனன் . செப்பனே செய்து நிறை.வுற்றவன் கருணாகரனின் தலைமைக்குள் ஒரு வரலாற்று முத்திரை பொறித்தான் அந்த காலம் அந்த தீச்சுவாலைக்குள் துணிந்து தீக்குளித்து வெளியே வந்த வேகமும் விவேகமும் பக்கம் பக்கமாக எழுத வைக்கும் . கருணாகரன் தலைமையின் கீழ் அந்த புங்குடுதீவுக்கே பெருமை சேர்த்த ஒப்பற்ற தீர்மானம் நிறைவேறிய கையோடு புங்குடுதீவின் ஒரு முக்கிய போதிய ஆவணங்களின் தொகுப்பை உருவாக்கும் பாரிய பொறுப்புக்கு சிரம்கொடுத்தான் துரைரவி. தலைவராக இருந்த திரு. தி.கருணாகரனையும் திரு ந.தர்மபாலனையும் சுவிஸில் என்னையும் இணைத்துக்கொண்டான் . நூல் ஆசிரியர் குழு இரவுபகலாக புங்குடுதீவென்னும் சமுத்திரத்தில் மூழ்கி மூழ்கி முத்தெடுத்தார்கள் .தோண்ட தோண்ட புதையல் தான் . முன்பின் அறிந்திராத நம்பமுடியாத மறைந்துபோன ஆவணங்கள் வரலாறுகள் வாழ்க்கைபாதைகளின் சுவடுகள் என எம்மை திக்குமுக்காடவைத்தன. சுமார் ஒருமாதகாலத்துக்குள் கண்விழித்து பசியின்றி கையாளும் கணனியாலும் எழுதிக்கொண்டே வாழ்ந்தான் . வெறுமனே சொல்லி விளங்க வைக்கமுடியாத உழைப்பின் வெற்றி அது . அந்த நூலின் ஒரு பக்கத்தை நீங்கள் சொந்தமாக கணனியில் விசைதட்டி எழுதிப்பருங்கள் புரியும் . இது ஒருபக்கமல்ல நூறுபக்கமல்ல எலுநூறுக்கும் மேலாக .எப்படி செய்து முடித்தான் .எமது புங்குடுதீவு தாய் அவனுக்கு அந்த மகாபலத்தை அருளாக கொடுத்திருந்தாளபோலும் . இந்த புங்குடுதீவு மான்மியம் அவனுக்கு சொல்லில் அடங்காத சோதனைகளை கொடுத்து அவனை புடம்போட்டது . பிரச்சினைகள் விமர்சனங்கள் ஒன்று முடிய ஒன்றாக தொடுத்து தொடுத்து தொடராக் வந்து நெஞ்சில் பாய்ந்தபோதும் தனிஒருவனாக அபிமன்யுவாக நின்று களமாடினான் இறுதியில் வெற்றியே கண்டான் . வளர்த்தகடாக்களே மார்பில் பாய்ந்தன ,நம்பிய நட்புக்கள் கூட கழுத்தறுத்தன .நிலைகுலைந்தானில்லை .எழுத எழுதக் குவிந்தன பக்கங்கள் . 500 .600 .700 . என நீண்டன. அச்சுப்பதிப்புக்கே சவால் விட்டன இனி முடியாது என்னும் எல்லையில் நின்றான் . என்ன செய்வது எப்படி மாற்றுவது என்னும் எண்ணத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக் தணிக்கை அல்ல அல்ல . சுருக்கினான் . முடித்தன நூலை . தாங்களும் செய்யமாட்டார்கள் மற்றவர் செய்யவும் விடமாட்டார்கள் இது ஒரு ரகம் . செய்யவே மாட்டோம் மற்றவன் செய்தாலும் விமர்சிப்போம் மறுரகம்.என்னால் முடியாததியா மற்றவ்ன் செய்து பெயர் வாங்குவதா இதுவும் ஒருரகம் .அக்கினிப்பிரவேசம் செய்து அழகாக பிரசவித்தான் மான்மிய குழந்தையை . இருந்தாலும் இன்னும் இன்னும் தீப்பொறிகள் பறந்தன அல்ல நாப்பொறிகளே அவை.எல்லாம் ஓயும் நாவடங்கும் என்று சொல்லிக்கொண்டே ஒரே நோக்கில் பயணித்தான் .தர்மபாலன் கருணாகரனை அழைத்து ஐரோப்பா தாயகம் எங்கும் நூல் வெளியீட்டை செய்ய அன்புக்கட்டளை கொடுத்தான் .வெற்றிகரமாக அந்த அந்த நாடுகளின் ஊர் அமைப்புக்கள் . ஊர்ப்பற்றுமிக்கவர்களை அணுகி ஒருங்கிணைத்து கனடா சுவிட்சர்லாந்து பிரித்தானியா பிரான்ஸ் யாழ்ப்பாணம் எங்கும் வெளியீட்டு விழாக்கள் அரங்கேறின . ஒவ்வொரு ஊறவன் கரங்களிலும் புங்குடுதீவின் பொக்கிஷம் தவழ்ந்தது . தொடரும் சோககாண்டத்துக்குள் அழைத்துச்செல்லும் வரை விடைபெறுகிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக