வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நான் கண்ட உயிர் நண்பன் துரை .. ரவி (பாகம் 7 )


......................................................................................................

துணிச்சல் . வேகம் . விவேகம் . உறுதி இத்தனையும் ஒருசேர  வாழக்கூடிய  உதாரணமனிதனாக  திகழ்ந்தவன்  எங்கள்  உயிர்

  நண்பன் ரவி . பல செயல்பாடுகளை  திட்டங்களை  நிறைவேற்றுவதில்  தாயகத்திலும் கனடாவிலும்  பல உதாரணங்களை  கூறமுடியும் .நான்  உயர்கல்வியை  முடித்த  உடனேயே எமது  கிராம  மானவர்களின்  கல்வி மேம்பாட்டுக்கு எதாவ்து செய்யவேண்டும் என்ற  நீண்டகால  எண்ணங்களை  நிறைவேற்ற பாலர் பாடசாலையில் கல்விநிலையம்ஒன்றை உருவாக்கி  க.சாமிநாதசர்மா  ,க,சந்திரசேகரன் ஆகியோரை  இணைத்து இலவச கல்வியை  வழங்கினோம் .  க.பொ.த சா தர மாணவர்கள்  யாழ்  சென்று  பிரத்தியேக கல்வி கற்க முடியாத சூழல்  . எமது  எண்ணம்  நல்ல பலன் கொடுத்தது  . காலப்போக்கில்  ந.தர்மபாலன்  எஸ் எம் தனபாலனும் என்னோடு கைகோர்க்க  கமலாம்பிகை  பாடசாலையிலும் பின்னர்  தனபாலனின்  முயற்சியில்  சரவணமுத்து அவர்களின் வீட்டினை  சிறந்த கல்விநிலையமாக்கி  மாணவர்களுக்கு  உதவினோம் .,இந்த காலகட்டத்தில் பாடசாலைக்கு பின்னரான ஒரு புதிய  கல்வி முறை ஒழுங்கமைப்பை உருவாக்கினோம் . இது ஒருவகை கல்விப்புரட்சி என்றே  கூறவேண்டும் . ஆண்மாணவ்ர்களை இரவினிலும் கல்வி கற்றல்  கூட்டுக்கல்வி குழுப்படிப்பு என அறிமுகமாக்கி  முன்னேற்றும் திட்டம்  திறம்பட  பலன் கொடுத்டகு . இது போன்று  எனக்கு  சற்று  முந்திய  காலத்தில்  கவிஞர்  சு  வில்வரட்ணம் ஈழத்துசிவானந்தன்  ஆகியோர்  பூரணகல்விநிலையம்  பசுபதிபிள்ளை படிப்பகம்  என  நடத்தி வந்தமை  இங்கே சொல்லியாகவேண்டும் . இந்த வேளையில் தான்  நண்பன் ரவி ஒரு  முதன்மை மாணவனாக  அறிமுகமாகி  செயல்பட்டான்  கட்டாந்தரையிலும் வாங்கிலிலும் மேசையிலும் படுத்து உறங்கி எழுந்து கல்வி கற்றார்கள் மடத்துவெளி ஊரதீவு வல்லன் பகுதிகளில் இருந்து சுமார் 60 மாணவர்களை கபொத உத க்கு தகுதியாக்கி பெருமை தந்தது எங்கள் மண்

, எங்கள் முயறசிக்கு கிடைத்த வெற்றி அவர்களில் பெரும்பாலானோர் வேலணை மத்திய கல்லூரியில் உயர்கல்வியை மேல்கொண்டனர்.இது வரலாறு கல்வி தவிர்த்து  சனி ஞாயிறு  தினங்களில் சிரமதானம்  .சமூகசேவைதிட்டமிடல் .சிறந்த  எண்ணங்களை  உருவாக்கல்  என  இரவுகளில் நீண்ட நேரம் செயலபடுவான். அப்போதிலிருந்தே  இவனுள்  இந்த  வேகம்  விரைவு துணிச்சல் நினைவுகள்  எண்ணங்கள்  உருவாகதொடங்கியது  நினைத்தை  விரைவில் செய்து  முடிக்கும் வரை  கண்மூடமாட்டான் இவனது இந்த

வேகக்குணம் கண்டு நான் துடிச்சான் என்று ஒரு செல்லப்பெயரை சூட்டினேன் அதனையே சில நண்பர்கள் அப்போதைய காலத்தில் நகைச்சுவையாக  

அழைப்பாராகள்  அந்த கொள்கை மரபு  இவ்வுலகை விட்டு  நீங்கும் வரை கூடவே  இருந்தது . கனடாவில் வாழ்ந்த காலங்களில்   மானசீக குருவாக  வழிகாட்டியாக  எண்ணி  செயல்பட்ட தனபாலன்,  தர்மபாலன். சண்முகநாதன்  போன்றோரின் வழி நடந்து அவர்களுக்கும் உதவிகரமாக   களமாடினான் .பொதுநலன்  சமூக சேவை  ஒருக்கான  இனதுக்கான  செயல்பாடுகளில் ஊறிப்போனதால்  தனக்கென  பெரிதாக  எதையும் எண்ணி  வாழவில்லை . அந்த  முறைமை  தானோ என்னவோ  இறுதிக்காலங்களில்  ஓரளவு  உடைந்து போனான்  என்றே  கூறலாம் . பல  சமூக பொதுநலன் விஷயங்களில் ஆங்காங்கே எதிர்பாராத  அடிகளை  வாங்கியவனுக்கு பொதுநலன் பலன்கள்  பெரிதாக  திருப்திபடாத  நிலை  உருவானது . இனத்தை ஊரை  எந்த  நேரமும்  எண்ணி  கலங்கி  இனியென்ன  செய்யலாம்  இனியென்ன ஆகுமோ  என்றே  சிந்தித்து   ஏங்கியே உறைந்து போனான் .முக்கியமாக்  அவனது  நெடுநாள் அவா  தாயகம்  சென்றுவரவேண்டும் என்ற ஏக்கம் . என்னைப்போலவே  சில அரசியல் பாதுகாப்பு பிறழ்வுகளினால் தடைப்படுக்கொண்டே  இருந்தது  தாயகம்  திரும்ப  ஒரு நல்ல  சூழ்நிலையை  எதிர்பார்த்திருந்தான் .நானும் கூட  இந்த காரணங்களால்  33  வருடங்களின் பின்னர்  எங்கள்  முருகனின் மேல்  பழியை போட்டுவிட்டு  உன் திருவிழாவுக்கு வருகிறேன்  என்னவானாலும் உன் பொறுப்பு  என்று  கூறிவிட்டு  போய் வந்தபோது அடுத்த முறை  நானும்  வருக்கிறேனடாப்பா என ஆசையோடு  கூறியவன் எண்ணம்  கொரொனா பெரும்துயர் தடை வந்து வீணானது . எங்கும் எதிலும் விரைவாக  இப்போதே  செய்யவேண்டும் என்ற  கொள்கை குன்று  தான் வாழ்வை முடிப்பதிலும்  எங்களை  முந்திக்கொண்டான் . எல்லாவற்றிலும் எங்களையும் கேட்டு சேர்த்து  கூட்டி  செல்லும் எங்கள் இளவல்  அவனுக்காக்க  திறந்திருந்த சொர்க்கவாசலுக்கு மட்டும் தனியாகவா  சென்றான் நம்ப முடியவில்லை . நம்பிதான் ஆகணும் . புங்குடுதீவு மண்ணின் வரலாறு  இருக்கும் வரை  உன் சாதனைப்பதிவுகள்  இருக்குமடா  ரவி  சென்று வா  மகனே  . உனக்கா  ஒரு துளி கண்ணீர்  தான்  சிந்த முடியும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக