.................................................................................................
யாழ் பல்கலைக்கழக நாடகப்பட்டறை 80 களின் ஆரம்பத்தில் தமிழுலகில் கனதியானதும் நல்ல அங்கீகாரத்தை வழங்குவதுமாக
பேசப்படட காலம் .துரை ரவீந்திரனும் நானும் அந்த பட்டறைக்குள்ளும் புகுந்து புடம்போட்டு வெளியேறினோம் .நல்ல அனுபவம் ஆற்றல் வெளிப்பாடு நெறியாள்கை நவீன நாடகவடிவங்களை கற்றுத்தேறினோம். தொடர்ந்து சமூகசேவை கலைத்துறை ஆன்மீகப்பணி விடுதலைக்கான பங்களிப்பு என இனத்துக்காகவும் ஊருக்காகவும் முழுமூச்சாக அர்ப்பணித்திருந்த ரவி இளம்வயதிலேயே எதிர்பாராத நிலையில் இல்லற வாழ்விலும் இணைத்துக்கொண்டதன் நிமித்தம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை . குடும்பத்து மூத்த கோப்புகளின் வேண்டுதலும் அறிவுரையும் காதை துழைக்க வேறுவழியின்றி வெளிநாடு செல்ல முடிவெடுத்தான் .உஜிராக நேசித்த கிராமம் மண் சமூகம் எல்லாவற்றையும் இருக்கியா மனதோடு விருப்பமின்றி துறந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெய ர்ந்தான் .90 களில் ஆரம்பித்த வெளிநாட்டு வாழக்கை சுவிஸ் பாரிஸ் என்று ஊடறுத்து கனடா மண்ணில் நிலை எடுத்தது .நல்ல கனேடிய தங்குமிட கிடைத்ததும் சாதாரண வாழ்வினை வாழ்ந்து தான் தன் குடும்பம் வசதி வாய்ப்பு என்றிருக்காமல் நல்ல சுகபோகவாழ்வை வாழத்தெரியாமல் அங்கும் இன உணர்வை எழுப்பிவிடடான் . தமிழ் வெறியை கொப்பளித்தான் . இந்த நிலை தானோ அவனது இறுதி வாழ்வு இப்படி கக்காரணமாகியதோ என எனக்குள் ஒரு எண்ண அலை விரிகிறது. மடத்துவெளி ஊரதீவு சனசமூகநிலைய உறவுகள் குமிந்து போயுள்ள டோடொன்றொவும் அந்த சூழலும் அவனுக்கு மேலும் கைகொடுக்க முதலில் தன் ஆசானும் அன்பு நண்பனுமாக பழகும் எஸ் எம் தனபாலனின் கலை ப்பசிவலைக்குள் வீழ்ந்தான் . அந்த நல்ல ஆரம்பம்தான் அவனது பிந்தியகால நாடக குறும்பட எழுத்தாற்றல் என உன்னதம்காண வைத்தது எஸ் எம் தனபாலனின் மாண்புறுபடைப்பான முழுநீளத்திரைப்படமான கரைதேடும் அலைகளில் பேசப்படட பாத்திரத்தில் முத்திரை பதித்தான் . தனபாலனும் தன கலைத்துறை விழுதுகளை உருவாக்க ஆழப்பதிக்க தன்கலைவாரிசொன்றை செப்பனிட ரவிக்கு கரம் கொடுத்தான் உரம்போடடான் . இவனது படைப்புக்களில் மனிதம் ,பூவின் நிழல் ,போன்ற படைப்புக்கள் பெரும்பாராடடை பெற்றவை .காலநீரோடடத்தில் ரவி ஒரு பல்துறைக்கலைஞனாக பரிணமிக்க தொடங்கினான் .கதை கவிதை பட்டிமன்றம் நாடகம் நெறியாள்கை பத்திரிகை வானொலி என எதையுமே விட்டுவைக்காத தமிழ் வெறியனாகினான் இதே காலத்திலேயே ஒருதரமான மேல்படிப்பொன்றையும் நோக்கி முன்னேறி முடிவும் கண்டான் . ரவியின் கலைப்பசிக்கு இரண்டு பெரிய அதியுன்னத களங்கள் கைகொடுத்தன .ஒன்று ஊருக்கான புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் மற்றையது ஈழ விடுதலை அமைப்புக்கள் . ஒன்றில் வருடாந்த விழாவான பூவரசம்பொழுது இவனது நாடகங்களாலேயே புகழ் கொண்டது .அத்தனையும் முத்திரை பதித்தவை .மரமாக இருந்த பல கலைஞர்களை உளிகொண்டு செதுக்கி அரங்கில் ஒளிரச்செய் தான்.இங்கே பூவரசம்பொழுது என்றால் அங்கே நாடகப்பட்டறை . சுவிஸில் அமைப்பின் நாட்டியமயில் எவ்வாறு புகழ்பெற்றதுவோ அவ்வாறே கனடாவில் நாடகப்பட்டறை உணர்வூட்டியது மெருகேற்றியது இனவிடுதலைக்கான பங்களிப்பில் உச்சம் கண்டது ரவியின் நாடகங்கள் பட்டறையில் ஒளிவீசின பேசப்படடன. ஈழவர் மனதில் இலகுவாக கவர்ச்சியாக விடுதலை உணர்வை அனையவிடாமல் பார்த்துக்கொண்டன .பல்துறைக்கலைஞன் ரவியை புங்குடுதீவு பழைய மாணவர்சங்கமும் அணைத்துக்கொண்டது (.இன்னும் வரைகிறேன் )