....................................................................................................................
வரதீவில் குலசேகரம்பிள்ளை ஆசிரியர் இல்லத்துக்கு பின்புறமாக சண்முகநாதன் /ராஜேஸ்வரி அக்கா வீட்டுக்கு வடக்கு பக்கமாக இவரது குடும்பத்து பரம்பரை வீடு அதாவது இவரது தாத்தா நல்லதம்பி அம்மம்மா பாக்கியம் (எனக்கு மாமி முறையானவர் ) அவர்கள் கோலோச்சி வாழ்ந்த அந்த பெரிய கல்வீடு அமைந்திருந்தது .தாத்தா 60 அறுபதுகளின் பின்பகுதியில் இறந்துபோக பெரியம்மாவுக்கு அந்த இல்லம் வழங்கப்பட பக்கத்திலேயே தென்பகுதியில் இவரது பெற்றோர் புதிய வீட்டில் குடியேறினர் . அப்படியே இவன் மேல் கொள்ளைப்பாசம் வைத்திருந்த அம்மம்மாவையும் இழுத்து வந்துவிட்டான்.1965 மாதங்களில் மார்கழி என வர்ணிக்கப்படும் அந்த
மாதத்தில் 22 ஆம் நாளில் அன்னை மடியில் தவழ்ந்த ரவீந்திரன் ஆட்டமும் ஓட்டமும் துடிதுடிப்புடனும் மெல்ல வளர்ந்து 1969 களில் இளமுருகன் பாலர் பாடசாலை சென்று 1970 தைத்திங்களில் கமலாம்பிகைத்தாயின் கல்விமடிக்குத்தாவினான் .பாடசாலையில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்கினான் .சகமாணவர்களை நண்பர்களை தன் துடிதுடிப்பான செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு தன்னை ஒரு ஆளுமை மிக்கவனாக உயர்த்தியதன் மூலம் அவர்களை இவனை ஒரு கீரோ போல எண்ணி இவனையே சுற்றி சுற்றி வர வைத்தான் . இந்த ஆளுமை திறன் உயர்கல்விக்கென புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கு சென்றபோது இவனை அந்த மாணவ உலகத்துக்கு உயர்ந்த ஒரு தலைவனாக்கியது.மகாவித்தியாலயத்தில் தமிழ்திறன் கதை கட்டுரை செய்யுள் சமய அறிவு என் அனைத்துத்துறையிலும் முன்னணி வகித்தான் அத்தோடு இவனது மஞ்சள் இல்லத்துக்காக தனது உன்னத விளையாட்டுத்திறன் மூலம் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வரலாறு உண்டு . இவனது விளையாட்டுத்திறன் பற்றி இவனது நட்பு/வகுப்பு மாணவனும் எனது உறவினருமான பாஸ்கரன் நேற்றுகூட என்னோடு அளவளாவினார் சிறப்பாக க.பொ.த சாதாரணதரப்பரீட்சையில் சித்தியெய்திய.துரை..ரவி உயர்தர
வர்த்தகப்பிரிவில் மேல்படிப்பை மேற்கொண்டான்.இந்த மகாவித்தியாலய உயர்தர காலம் அவனுக்குள பெரிய மாற்றங்களை உண்டுபண்ணியது எனலாம் .1980களின் ஆரம்பம் அது. விடுதலைத்தீ கொழுந்து விட்டெரிந்த பொன்னான காலம் அது .படிக்கும் காலத்திலேயே எம் இனத்துக்காக ஏதாவது செய்யவேண்டுமென துடித்தான் மகாவித்தியாலயத்தில் என் நண்பன் எஸ் எம் தனபாலனுக்கு பிறகு மாணவமுதல்வன் விளையாட்டுவீரன்.ஆளுமை மிக்க மாணவன்,முழுமாணவ உலகையும் தன்வசப்படுத்தும் கவர்ச்சி என அத்தனையுமொருசேர அமைநது ஆட்டிப்படைத்தான் . பாடசாலைகளில் விடுதலை அமைப்புக்கள் குறிவைத்து மாணவ சமுதாயத்தை மூளைச்சலவை செய்து அதன்மூலம் முளையில் இருந்தே விடுதலை உணர்வை ஊட்டும் நேரம். அதற்கென பிரசாரக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் .ஜனநாயகப்போராட்டங்களில் ஈடுபடுத்துதல் .முடிந்தவ்ரை விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்களித்தல் என மாணவ்ர்களை பங்களிக்க வைத்து அணிவகுத்து தலைமையேற்று பெரும்புரட்சியை புங்குடுதீவில் மட்டுமல்ல தீவுப்பகுதிக்கும் கொண்டுசென்று ஆக்கிரமித்தான் .இன்றும் எங்கன்முன்னே நிழலாடுகிறது அந்த பாரிய எழுச்சிப்பேரணி .யாழ் பல்க்லைகழகத்தில் நடந்த இரு சம்பவங்கள் ஒரு கைதும் ஒரு மரணமும் . இவற்றுக்கு எதிராக அப்போதைய அரச கெடுபிடிகளுக்கு மத்தியில் புங்குடுதீவின் முழுப்பாடசாலை மாணவர்களை ஒன்று சேர்த்தான் , இவனது சக தோழர்களான இருபிட்டி கிருஷ்ணபாலன் மற்றைய ரவீந்திரன் திருச்செல்வம் போன்றோரோடு இணைந்து எங்களது வெளி ஆதர்வும் கைகோர்க்க கம்லாம்பிகையில் இருந்து குறிச்சுக்காடு கிழக்கூர் ஆலடி ஆஸ்பத்திரி சந்தி வழியாக ஒரு பேரணியும் . இருபிட்டீ அரியநாயகன்புலம் வித்தியாலயத்தில் இருந்து பெருங்காடு ஊடாக மற்றைய பேரணியும் எழுந்துவர உழைத்து முடிவில் புனித சவேரியார் ஆலய முன்றலில் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்தி ஒரு மாணவ்ப்புரட்சியையே நிகழ்த்தினான் .அன்றைய அந்த காலச்சூழலில் மாணவர்கள் அதிபர் ஆசிரியர்களை எதிர்த்து மீறி வெளியே வந்து இப்படி பங்களிக்க பயப்படுவார்கள். இருந்தும் எமக்கு மறைமுகமாக பல ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு கொடுத்து கைகொடுத்தமை மறக்க முடியாது. இருந்தும அப்போது மகாவித்தியாலய உப அதிபராக இருந்தவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார் . மறுநாள் முக்கிய பங்காற்றிய முன்னணி மாணவர்கள் மாணவிகளை ஒழுங்கு நடவடிக்கைக்குள் கொண்டுவந்தார் குறிப்பாக மாணவிகளை கொச்சை வசனங்களால் திட்டி அழவைத்து பெற்றோருக்கும் மன உளைச்சலை தந்தார் . ரவீந்திரன் இந்த பிரச்சினையில் ஊரில் உள்ள பெரிய அறிவுஜீவிகள் பெரியோர் அரசியல்வாதிகளென எல்லோரிடமும் ஓடிசென்று உதவிகோரி அந்த உப அதிபரின் கொட்டத்தை அடக்கி சுமுகநிலைக்கு கொண்டுவந்தான் உயர்தரம் படிக்கும் காலத்திலேயே ரவியும் நானும் வேலணை லிங்கம் ஆசிரியரும் கூட்டாக சேர்ந்து சந்தையடி குளத்துக்கு பக்கத்தில் உள்ளமாமரவீடு மற்றும் அம்மாகடைச்சந்தி பாலர் பாடசாலை மடத்துவெளி வேலணை பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்த பெருமையும் இவனுக்குண்டு கம்லாம்பிக்கையிலும் தனியார் வகுப்புக்களிலும் எனது மாணவனாக இருந்து உயர்ந்த என் நண்பன் என்னோடு சேர்ந்து தனியார் வகுப்புக்களை நடத்த இணைந்த சாதனை என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது . .பலருக்கும் இதுவரை தெரியாத சில சத்திய கட்டுப்பாடுகளுடபட்ட சில விசயங்களையும் இவனது புரட்சிகர காதல் திருமணம் பற்றிய ரகசியங்களையும் போட்டு உடைக்கிறேன்.. இப்போது இல்லாவிடில் எப்போது ஒப்புவித்து அழமுடியும் (தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக