நமது பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் பாடசாலை புனரமைப்பு சம்பந்தமாக கேட்டறிந்து பல உதவித்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் திரு. சந்திரபாலனால் ஆரம்பிக்கப்ப்ட ''கண்மணி கல்விக்கொடை''யின் இந்த மாத பங்களிப்பு நிகழ்வில் சந்திரபாலன் அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு தரம் 6 முதல் தரம் 11 வரை 1 ஆம் 2 ஆம் 3 ஆம் இடத்தை பிடிக்கும் 18 மானவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
இந்திட்டத்தின் மூலம் ஒவ்வொருமாதமும் 18 ஆயிரம் ரூபா திரு. சந்திரபாலன் அவர்களால் கமலாம்பிகை வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதைவிட பள்ளி கூடத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் அவரின் நிதியுதவியுடன் தொடங்கப்படுகிறது.
திரு. சந்திரபாலன்நமது ஊருக்கு பல உதவிகளை செய்துவருகிறார்
அவருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.