...............................................................................................................
துரைராசா ரவீந்திரன் இன்று எம்மோடு இல்லை .யார் இந்த துரை ரவி .நீண்டகாலம் ஒட்டிப்பழகி உறவாடி செயலாற்றி வாழ்ந்து சொற்ப அகவையில் இறைவன் பாதம் அடிபணிந்த ஒரு பொதுநலவாதி .ஒருவரது (தனது )இறப்பில் என்னை துவண்டு போகவைத்த மனிதன் இவன் .இவ்வளவு தான் வாழ்க்கை என்ற நினைப்பில்
போகும்போது எதுவுமே கொண்டு செல்லப்போவதில்லை என்ற தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாகவே இவன் முடிவு உள்ளது . எல்லோரும் இந்தவரிசையில் காத்து நிக்கிறோம் யார்
முந்தி யார் பிந்தி என்பது கூட எமக்கு தெரிவதில்லை . தனது வாழ்க்கையே இவ்வளவு குறுகியது தான்
அறிந்து தானோ இயவ்வளவு வேகமாக இயங்கினான் போல. இவனும் நண்பன் பகீயும் நானுமாக ஒரு
குறிப்பிட்ட காலத்தில் படுவேகமாக சுழன்று திரிந்தபோதும் கூட வாழ்வில் முடிவின் விளிம்பில் நின்று தப்பி வந்திருக்கிறோம் எமனின் பக்கத்தில் கூட எட்டிபார்த்துள்ளோம் அப்போதெல்லாம் போராடி வென்று வந்த ரவி இப்போது ஏமாந்துவிட்டான் போல. இவனை என் ஆண்டவன் இப்படி அற்ப ஆயுளில் எடுத்துக்கொண்டான் இவன் செய்த தவறு என்ன. இவன் செய்தது எல்லாம் இவை தான் .அதுவா _இவன் தனக்காக வாழவில்லை தன் குடும்பத்துக்காக
வாழவில்லை தன்சுயநலத்தை பேணவில்லை தன் உடல் நலத்தைக்கூட எண்ணவில்லை ஊருக்காக
வாழ்ந்தான் இனத்துக்காக்க அலைந்தான் தமிழுக்காக கண் விழித்தான் .கொண்ட கொள்கைக்காக ஒறுத்து நின்றான் இயவ்ற்றுக்காகவே என்ன செய்யலாம் எப்போது செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற நினைவிலேயே இவன் வாழ்வு முடிந்துவிட்டது , முடிந்தவ்ரை இவன் வாழ்வை அலசி அறிந்து நினைந்து உருகி கண்ணீர் வடித்து வழி அனுப்பி வைப்பதுவே இந்த எண்ண எழுத்துக்களின் உச்சபலன் நான் கண்ட அந்த அன்புநண்பனை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் .புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் மடத்துவெளி வரதீவு பகுதியில் (வயலூர் முருகன் ஆலயத்தின் பின்பகுதி ) வாழ்ந்து வந்த நல்லதம்பி பாக்கியம் அவர்களின் மகள் கண்ணம்மா என்ற அன்புத்தாய்க்கும் துரைராசா அண்ணாவுக்கும் மூத்த புத்திரனாக பிறந்த அருந்தவப்புதல்வன் ரவீந்திரன் . இவன் தவழ்ந்து எழுந்து நடை பயின்ற காலத்திலேயே சுட்டிப்பையனாக வேகமும் சுறுசுறுப்ப்ம் மிக்கவனகாவும் எதிலும் கேள்வி கேட்பதும் ஆராய்ச்சி செய்வதுமாகவே காணப்ட்டவனாகவே அறிந்தேன் . இந்த குணம் இவனுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது பின்னர் எங்களுக்கும் தெரியவந்தது .அத்தோடு இவனது தாய்மாமன்களான நாகரத்தினம் சொர்ணபாலன் போன்றோரும் பொதுநல சமூக சேவையில் ஈடுபாடு காட்டி பல வரலாற்றுப்பதிவுகளை கொண்டவர்கள் .அந்த பின்னணி பரம்பரைகுணம் என்பார்களே அதுவாக கூட இருக்கலாம் (தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக