இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது - பாஜக
இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து சீனர்களும் தமிழக மீனவர்களை தாக்குவதாக கூறினார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக