வியாழன், 1 மே, 2014


சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னை வருகை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னை வந்துள்ளனர். 


ஹைத்ராபாத்தில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்துள்ளனர். உள்துறை அமைச்சக உத்தரவையடுத்து தேKசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து ரயில்வே காவல்துறையிடம் விவரங்களை கேட்டுப் பெறவும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக