வியாழன், 1 மே, 2014


குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை: சென்னை கலெக்டர் 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாந்தி எஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. குண்டு வெடித்ததில் ஒருவர் பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களை சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, சுகாதார செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செய்யும்படி டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
 
சம்பவம் குறித்து கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் கூறுகையில்,

குண்டு வெடிப்பில் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள். காயம் அடைந்த வர்களில் ஒருவருக்கு மட்டும் கழுத்தில் பலத்த காயம் உள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர் மற்றவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்ல என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக