ஞாயிறு, 4 மே, 2014


இலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் 
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று தன்னை சந்தித்த இலங்கை பேராயர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார். 


இலங்கையை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயர்கள் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் ஒரு குழுவாக வாடிகன் நகருக்கு சென்று போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தனர். அவர்கள் தங்கள் மறை மாநில நடவடிக்கைகள் பற்றி அவரிடம் கூறினார்கள். அப்போது அவர்களிடம் போப் பிரான்சிஸ், 
இலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும். இலங்கையில் நிலவும் மத, இன ரீதியான பிரிவினைகள் வேதனை தருகின்றன. இலங்கையில் ஒரு மதத்தின் அடையாளத்தைக் கொண்டு தேசத்தின் ஒருமைப்பாட்டினை அடையாளப்படுத்தி வருகிறார்கள். இது மத அடிப்படைவாதிகளின் தவறான போக்கு. இதனால் பயமுறுத்துதல், கலவரம் போன்றவை நடக்கின்றன. இலங்கையில் இனப்பிரச்சினையை தீர்த்து அமைதியை ஏற்படுத்த அதிக வேலை தேவைப்படுகிறது. அனைத்து மக்களின் மனித உரிமைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக