சனி, 3 மே, 2014

சமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட்டுத் தலைமைகளை கணக்கெடுக்காமை:அரச ஊடகம் 

பிளவு நிலையில் TNA

ஒதுக்கப்படுவதாக சங்கரி, சித்தா போர்க்கொடி ; சுரேஷ், செல்வம் பொறுமை காப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய உட்கட்சி மோதல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளதாகக் தெரிய வருகிறது. ஐந்து கூட்டுக் கட்சிகளுக்குள் கட்சிகளுக்கிடையிலான பூசலாகவும், அது தவிர ஐந்து கட்சிகளுக்குள்ளும் தனித்தனியாக உட்கட்சிப் பூசலாகவும் முன்னெப்போதும் இல்லாதவாறு மோதல்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
தமிழரசுக் கட்சிக்குள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையே நேரடியாகவும், மறைமுகப் பனிப் போராகவும் மோதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை அக்கட்சியானது கூட்டமைப்பிலுள்ள ஏனைய நான்கு கட்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுச் செயற்பட முனைந்து வருவதால் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து கூட்டுக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து, சம பலாபலன் என உடன்பட்டிருப்பினும் அது பின்பற்றப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் கூட்டமைப்பை பதிவு செய்வதிலும் போலிக் காரணங்களைக் கூறி இழுத்தடிப்பு நிலை காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கூட்டுக் கட்சியிலுள்ள வி. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியையும், த. சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பையும் தற்போது பெயரளவில் மட்டுமே பயன்படுத்திவரும் தமிழ்க் கூட்டமைப்பு அக்கட்சிகள் இரண்டையும் கூட்டமைப்பிலிருந்து முற்றாக நீக்கிவிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும் கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
அதே போன்று வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் மட்டுமல்லாது சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற ஆரம்ப கால கூட்டமைப்புத் தலைவர்களுடனும் மரியாதையின்றி நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சிக் கூட்டத்தில் வாக்குவாதப்பட்ட நிலையில் அனந்தி வெளிநடப்புச் செய்திருந்தார்.
இதேவேளை வெளிநாட்டுப் பயணங் களின் போது தான் திட்டமிட்டுப் புறக் கணிக்கப்படுவதாக சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. கூட்டுக் கட்சியில்லாத சிலர் உள்வாங்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கேட்டால், தொழில்நுட்ப உதவியாளர் எனத் தெரிவிக் கப்படுவதாகவும் சித்தார்த்தன் கவலை வெளியிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக