யாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்றர் தூரம் பயணித்த ரயில் பெட்டிகள்
கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று, சுமார் 300 மீற்றர் வரையில் பயணித்தாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் பெட்டிகள் இருந்த பகுதியை நோக்கி மீண்டும் பயணித்த யாழ்.தேவி, அவ்விரு பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் சேதமேற்படவில்லை என புகையிரதநிலைய அதிகாரிகள் தெரிவித்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக