வியாழன், 10 மே, 2012சுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு  நடைபெறவுள்ளது கனடா புங்குடுதீவு பழைய  மாணவர் சங்கத்தினால் நூலுருவாக்கப் பட்ட "புங்uகுடுதீவு  -மான்மியம் " என்னும் மாபெரும் நூல் ஒன்று எதிர்வரும் 13 . 05 .  2012.     ஞாயிற்றுக்கிழமை   பி.ப. 3 .00 மணியளவில் பெர்னில்   Schulanlage ,Worbstr 13 ,3113 Rubigen என்னும் aமுகவரியில் சிறப்பான முறையில் வெளியிட ஏற்பாடாகி lஉளது .
விழாவைச் சிறப்பிக்க தாயகத்தில் hஇருந்து வன்னி நாடாளூமன்ற த.தே .கூட்டமைப்பு உறுப்பினர்  திரு செல்வம் அடைக்கலநாதன் சுவிசுக்கு  வருகை தந்துள்ளார்.     நூலை வெளியிட்டு வைக்க கனடாவிலிருந்து .திரு ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர் புங்குடுதீவு மகா வித்தியாலயம்).திரு .தி .கருணாகரன் (தலைவர் ,புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -கனடா ).திரு .குணா செல்லையா (முன்னாள் தலைவர் .புங்.பழைய மாணவர் சங்கம் .கனடா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .நூல் ஆய்வுரை யை  திரு சண்.தவராசா (ஊடகவியலாளர்.சுவிட்சர்லாந்த் ) அவர்கள் நிகழ்த்தவுள்ளார் 

புங்குடுதீவு மண்ணுக்காக பல வருடங்களாக சேவை செய்து வரும் கனேடிய புங்குடுதீவு  பழைய மாணவர் சங்கம் எமது ஊரின் பெருமை மிகு வரலாறு ,மற்றும் ஆலயங்கள் ,கிராமங்கள் .பெரியோர்கள் ,துறை சார் விற்பன்னர்கள் ,சமூக சேவை அமைப்புகள் .புலம்பெயர் மக்கள் இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கி சுமார் எழுநூறு பக்கங்களுடன் பாரிய ஆவணத்  தொகுப்பாக வெளிவரும் இந்த நூலின் மகிமை காண உங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம் . நாம்  பிறந்த மண்ணை நேசிக்கும் ஊரின் உறவுகளே .எமது ஊருக்கென்று ஒரு பெருமை உண்டு.எமக்கென்று ஒரு வரலாற்றுப் பதிவு உண்டு .எமத்ழு வரும் காலச் சந்ததிகளுக்கு நாம் எழுதி வைப்போம் .என்றென்றும் அழியாத சொத்தாக இந்த நூலினை பாதுகாப்போம் . இந்த பாரிய கடமையை  நிறைவேற்ற ஒன்று கூடுவோம் உறவுகளே .பலத்த சிரமங்களின் மத்தியில் இந்த iநூலினவெளிக்  கொண்டு வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் மேம்பட்ட செயலை வரவேற்போம் ,வாழ்த்துவோம் .வருக வருக என் அன்போடு அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள் .

பதினோராம்  திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக