செவ்வாய், 29 ஏப்ரல், 2014


89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு
7 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் புதன்கிழமை 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத் 26, ஆந்திரப்பிரதேசம் 17, உத்திரப்பிதேசம் 14, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9, பீகார் 7 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூவில்
தலா ஒரு தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பாஜக பிரதமர் வேட்பாளர் போட்டியிடும் வதோதராவில் புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. அத்வானி, முரளி மனோகர் ஜோடி போட்டியிடும் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. 
ஏற்கனவே 6 கட்டத் தேர்தலில் 349 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக