திங்கள், 28 ஏப்ரல், 2014

இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை

 இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது.



இந்தியாவில் இருந்து அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு உயர்ரக மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைப்போல கத்தரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளும் வெளிநாடு களுக்கு அனுப்பப்படுகின்றன.


கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கணிசமான அளவு மாம்பழம் மற்றும் காய்கறிகள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் அரித்து அழுகி காணப்பட்டன. இந்த பூச்சிகளால் அந்நாடுகளின் விவசாயம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமை ப்பின் சுகாதாரத்துக்கான தரக்கட்டுப்பாட்டுக்குழு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சேம்புக்கிழங்கு ஆகியவற்றுக்கு ஐரோப்பிய நாடுகள் மே 1ந்தேதி முதல் தற்காலிக தடை விதித்துள்ளன. எனினும் இந்த தடை, அடுத்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதிக்கு முன் மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக