80 ஆயிரம் பேர் மதமாற்றம்! 890, 000 சிங்கள பெண்கள் மலடிகள்: ஞானசார தேரர்
கொழும்பு மாவட்டத்திலுள்ள சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒன்றரை இலட்சம் பேரும் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவர்களில் 80 ஆயிரம்
பேரும் ஒட்டுமொத்த இலங்கையர்களில் இலட்சக்கணக்கானோரும் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இலங்கைக்குள் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கடந்த 10 வருட காலப்பகுதிக்குள் சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த 8 இலட்சத்து 90ஆயிரம் பெண்கள் குழந்தைப்பேறற்ற நிலைக்கு (மலடிகள்) தள்ளப்பட்டுள்ளனர் என பொது பல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியது.
உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிய 1973ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ‘தங்கமான சிறிய குடும்பம்’ என்ற வேலைத்திட்டத்தை மையமாகக் கொண்டே மேற்படி அரச சார்பற்ற நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொது பல சேனா குறிப்பிட்டது.
இந்த காலப்பகுதிக்குள், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களில் 1.5 சதவீதமானோர் வேறு மதங்களுக்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக