செவ்வாய், 29 ஏப்ரல், 2014


மாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில்  ஆஜர்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002–ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு
நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இன்று அந்த கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜரானார்கள். அரசு வக்கீலும் பொன்முடி தரப்பில் வக்கீல் சுப்பிரமணியமும் ஆஜராகி ஒரு மணி நேரம் வாதம் செய்தனர்.
நீதிபதி சுந்தரமூர்த்தி விசாரித்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இதேபோல் 2011–ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
பொன்முடி, அவரதுமனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையையும் ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார்.
வானூர் அருகே பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி அரசு இழப்பீடு செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் பொன்முடி, கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபி, லோகநாதன், சதானந்தம் உள்பட 6 பேர் ஆஜரானார்கள். மீதி 2 பேர் ஆஜராகவில்லை. நீதிபதி வெற்றிச்செல்வி விசாரித்து இந்த வழக்கை ஜூன் 12–ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக