திங்கள், 28 ஏப்ரல், 2014


’மருமகன் சிடி’,
‘ஓடி ஒளியும் எலிகள்’
 :
வலுக்கும் பாஜக - காங்கிரஸ் தனிநபர் தாக்குதல்கள்!
 


பாஜகவின் செயல்களைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை.   பாஜகவின் எதிர்மறையான, வெட்கக் கேடான, கேடு விளைவிக்கிற அரசியலுக்கு எதிராக தொடந்து குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கி றேன். ஆனால்,  பாஜகவும் அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் பயத்தில் ஓடி ஒளியும் எலிகள்
என கடுமையாக விமர்சித்துள்ளார் பிரியங்கா காந்தி.


பாரதீய ஜனதா - காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வரும் தேர்தல் பிரச்சாரம் தற்போது தனிநபர் மீதான விமர்சன தாக்குதலாக மாறி வருகிறது. முதலில் காங்கிரஸ் தரப்பில் இருந்து நரேந்திர மோடியின் மனைவி தொடர்பான விமர்சனம் எழுப்பபட்டது. பிறகு மோடியை அழிவுசக்தி என்று மேடை தோறும் காங்கிரசார் பேசினார்கள்.
கடந்த சில தினங்களாக பிரியங்காவும் தன் பிரச்சார கூட்டங்களில் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார். இதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி நேற்று ‘‘மருமகன்’’ என்று பெயரிடப்பட்ட ஒரு சி.டி.யையும், சிறு புத்தகத்தையும் வெளியிட்டது.
அந்த சி.டி.யிலும் புத்தகத்திலும் சோனியாகாந்தி மருமகன் ராபர்ட் வதேரா நில மோசடிகள் விரிவாக கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இந்த சி.டி. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர்,  ‘’பாரதீய ஜனதா கட்சியினர் இப்போது கடுமையான குழப்பத்தில் உள்ளனர். பாஜகவும் அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் பயத்தில் ஓடி ஒளியும் எலிகளாக இருக்கிறார்கள். 
பாஜகவின் செயல்களைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை.   பாஜகவின் எதிர்மறையான, வெட்கக் கேடான, கேடு விளைவிக்கிற அரசியலுக்கு எதிராக தொடந்து குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறேன்.
பா.ஜ.க. தலைவர்கள் எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும் அதற்காக நான் பயந்து விட மாட்டேன். யாருக்கும் பயந்து நான் அரசியலை விட்டு விடமாட்டேன். தேர்தல் நேரத்தில் என் கணவர் செய்யும் தொழில் பற்றி பா.ஜ.க.வினர் இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் என்பது நான் எதிர் பார்த்ததுதான். இதை நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கடுமையான பதிலடி தந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக