திங்கள், 28 ஏப்ரல், 2014

7 பேருக்கு மரண தண்டனை!- நுவரெலியா மேல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
தென்னிலங்கையின் நுவரெலியா மாவட்டம், வலப்பனை, பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

1994 ம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பில் 09 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், வழக்கு விசாரணைகள் மிக நீண்டகாலமாக நடந்து வந்தது.

மேற்படி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வழக்கு விசாரணை நடத்தப்பட்ட காலப் பகுதியில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், எஞ்சிய 7 பேருக்கு எதிராக நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக