செவ்வாய், 29 ஏப்ரல், 2014


உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மரணம்: மருத்துவர்கள் மீது மகள் புகார்
'ஹலோ ஹம் லல்லன் போல் ரஹே ஹெய்ன், ‘பாபர், ‘மனோரஞ்சன் போன்ற படங்களில் நடித்தவரும், ராமாயணம் இந்தி சீரியலில் கும்பகர்ணனாக நடித்தவர் இந்தி நடிகர் ராகேஷ் தீவானா(45). இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
உடல் எடையை குறைத்தால் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு
வரும் என்று நண்பர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் எடையை குறைக்க இரப்பையின் அளவை குறைக்கும் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி இவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பிறகு ராகேஷ் உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் அவர் திடீரென்று இறந்தார்.

தந்தையின் மரணம் குறித்து ராகேஷ் தீவானாவின் மகள் ஷிவானி தீவானா கூறியபோது ‘மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால்தான் என் தந்தை உயிரிழந்தார் என்று தெரிவித்தார். என் அப்பாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக