
கடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்கள் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பு தமிழகம் முழுவதும் ஆடித் தீர்த்து விட்டார்கள். அவர்களில் சில அமைச்சர்களை சென்ற இதழில் பார்த்தோம்.
பல அமைச்சர்களை இந்த இதழில் பார்ப்போம்...
திருவண்ணாமலை முக்கூர் சுப்பிரமணி
திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களை கடைசி நேரத்தில் கவனிக்க 3 பெரிய எழுத்துத் தொகை யை, மாஜி மந்திரியான அக்ரி.கிருஷ்ண மூர்த்திக்கு அனுப்பி வைத்தார் முக்கூர். அதை அக்ரி, ஒரு பாலிடெக்னிக்கில் வைத்திருந்துவிட்டு, அதை ஏரியா வாரியாக விநியோகிக்க, ஆட்களை அனுப்பினார். கரன்ஸிக் கட்டுகளுடன் போன டி.என்.25. ஏ.ஏ. 5666 என்ற எண்ணுள்ள ஸ்கார்பியோ காரை, செங்கம் சாலையில் இருக்கும் முறை யாறு பாலத்தில் வைத்து, கலசப்பாக்கம் டெபுடி தாசில்தார் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படை மடக்கியது. அதற்குள் மேலதிகாரிகளிடமிருந்து போன்கள் வர, காரில் இருந்த பணத்தில் 94 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாயை மட்டும் கைப்பற்றிவிட்டு காரிலிருந்தவர்களை விட்டுவிட்டது.
இலைப் புள்ளிகளிடம் நாம் சீக்ரெட்டாக விசாரித்த போது...
""அந்தக் கரன்ஸிக் காரில் எங்க வேட்பாளர் வனரோஜா வின் சம்பந்தி மாணிக்கம், போளூரைச் சேர்ந்த ஒரு லாயர், ஒரு உளவுத்துறை அதிகாரி ஆகியோர் இருந்தாங்க. ரமேஷ் குமார் என்ற டிரைவர்தான் ஓட்டினார். பறக்கும் படை, வண்டி யாருதுன்னு தெரியாம மடக்கிடிச்சி. அந்த கார், கோவிந்தன்ங்கிற எங்கக் கட்சிக்காரருடையது. பண விவகாரத் தில் ஆளும்கட்சிப் பிரமுகர்கள் சிக்கினாங்கன்னு வெளியில தெரிஞ்சா அசிங்கம்னுதான் கார்ல இருந்தவங்களை அதி காரிகள் அனுப்பிட்டாங்க. இன்னொரு விசயம்... கார்ல இருந்த அமௌண்ட் ரொம்ப அதிகம். ஆனா ஒரு கோடி யை மட்டும் கணக்கில் காட் டிட்டு மிச்சமிருந்த அமௌண்டை சத்தமில் லாம கொடுத்துட்டாங்க. எங்க கவர் மெண்ட்ல அரசு அதிகாரிகள் எல்லோரும் எங்களுக்கு தானே சாதகமா இருப் பாங்க''’என்றார்கள் புன்னகை யோடு.
வேலூர் வீரமணி

ரெஜினாமேரி தலைமையிலான பறக்கும் படையினர் பரபரப்பானார்கள். அணைக்கட்டு ஒன்றிய பா.ம.க. தலைவர் குப்புசாமியின் ஊனை பள்ளத்தூர் வீட்டை முற்றுகை யிட்டனர். குப்புசாமி திகைக்க... கிடுகிடுவென வீட்டுக்குள் நுழைந்து பூஜை அறையில் இருந்த 54 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர். வேலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு அந்தப் பணத்தை பார்வையிட்டு வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்து விட்டார்.
அமைச்சரோ, ""‘இந்த அரைகோடியை முடக்கியதன் மூலம், 50 ஆயிரம் ஓட்டை, நாம அந்தப் பக்கம் போகாமத் தடுத்துட்டோம்''’என குஷிப் பட்டுக்கொண்டார். சொந்தத் தொகுதி பறிபோய்விடாமலிருக்க கடைசிவரை போராடிக் கொண்டிருந்தார் அமைச்சர்.
கள்ளக்குறிச்சி மோகன்

கடைசி மூன்று நாட்களில் தனது வீட்டில் இரவுக் கூட்டம் போட்டு கட்சிப் புள்ளிகளுடன் "எங்கெங்கே நமக்கு வீக்?' என விவாதித்த அமைச்சர் மோகன், பகல் பொழுதுகளில் வீக் ஏரியாவாக அறியப் பட்டவைகளில் விசிட் அடித்து, "பணம் வாக் காளர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா?' என விசாரித்த படியே இருந்தார். ஒன்றியச் சேர்மன்களான சின்னசேலம் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி ராஜசேகர், சங்கராபுரம் அரசு, தியாகதுருகம் ஒ.செ. ஐயப்பா ஆகியோர் மூலம் பற்றாக் குறை ஏரியாக்களுக்கு பணத்தை அனுப்பியபடியே இருந்தார். ரிஷிவந்தியம் கட்சிப் பிரமுகர்களை நம்பாமல், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் ஐக்கியமான எக்ஸ். எம்.எல்.ஏ. சிவராஜ் மூலம் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கச் செய்தார் மோகன். இதில் ஏரியா இலைப்புள்ளிகளான கதிர் தண்டபாணியும் விநாயகமூர்த்தியும் ஓ.பி. எஸ்.ஸை தொடர்புகொண்டு புகார் வாசிக்க... தலைமைதான் சிவராஜ் மூலம் கொடுக்கச் சொன்னது என ஒரே போடாய் போட்டார் ஓ.பி.எஸ்.
கன்னியாகுமரி பச்சைமால்

தேனி ஓ.பன்னீர்

போடி தொகுதியில் பன்னீரின் சாதிக்காரர்களான மறவர்கள் தங்களுக்கு எதுவும் செய்யவில்லையென அவர் மீது அதிருப்தியாக உள்ளனர். இதைச் சரிக்கட்ட போடி-மூணாறு போகும் வழியில் உள்ள நண்பர் காட்டேஜில் 22-ஆம் தேதியன்று சாதிக்காரர்களைக் கூப்பிட்டு சமாதானம் பேசியிருக் கிறார் பன்னீர்.

திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட மாதவரம், ஆவடி, பூந்தமல்லி இந்த மூன்று ஏரியாக்களும் மாதவரம் மூர்த்தியின் பொறுப்பில் இருந்ததால் அங்கே பட்டுவாடாவை கனஜோராக கவனித்துக்கொண்டார் அமைச்சர் மாதவரம் மூர்த்தி. போனிலேயே வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதேநேரத்தில் வடசென்னை தொகுதியில் முன்னாள் சபா ஜெயக்குமார் பொறுப்பில் கடைசி 2 நாட்கள் வடசென்னை முழுவதும் செம ஸ்பீடாக விநியோகம் நடந்துகொண்டி ருந்தது. இதில் மாதவரம் மூர்த்தியின் ஆதரவு நிர்வாகிகளும், அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு நிர்வாகிகளும் ஓரங்கட்டப்பட்டு ஜெயக்குமா ருக்கு வேண்டிய ராமஜெயம், பழனி போன்றவர்கள் கையில்தான் பணம் புழங்குவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள். "இது மோதலில்தான் போய் முடியும்' என தகவல் வந்ததால் மாதவரம் மூர்த்தி, மதுசூதனன், ஜெயக்குமார் மூவரும் ஒரேகாரில் வடசென்னை முழுவதும் சுற்றி வந்து அதிருப்தியை அடக்கியபடி இருந்தனர்.
புதுக்கோட்டை விஜயபாஸ்கர்

பறக்கும்படை தரப்பு ஒப்புக்கொள்ளாததால், சமாதானப்படலம் நீடித்தது. மாவட்ட ஆட்சியர் மனோ கரனுக்குத் தகவல் போன நிலையிலும் எதுவும் நடக்கவில்லை.
""எங்க கலெக்டர்தான் மந்திரிக்கு லட்டு ஊட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாரே, அப்புறம் எப்படி நடவடிக்கை இருக்கும்?'' என்று லட்டு ஊட்டும் படத்தைக் காட்டுகிறார்கள் மற்ற கட்சியினர். சிவகங்கை எம்.பி தொகுதிக்குள் வரும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பெயருடன் ரப்பர் ஸ்டாம்ப் போட்ட கவரிலேயே 500 ரூபாய் வைத்து விநியோகம் செய்து அசத்திவிட்டார்.
மத்தியசென்னை அப்துல் ரஹீம்

அதுபற்றி கவலைப்படாமல் சைதை தரப்பே வாக்காளர்களை கவனிப்பதில் புகுந்து விளையாடியது. 22-ந் தேதி இரவு 6 பகுதிச் செயலாளர்கள், 70 வட்டச் செயலாளர்களை அழைத்து விவாதித்தது மூவர் அணி. கடைசி நேர விநியோ கத்திற்காக பகுதிக்கு 10 லட்சத்தை ஒதுக்க, அவர்களால் முஸ்லிம் பகுதிக்குள் நுழையவே முடியவில்லை. ஆயிரம் விளக்கு, திருவல்லிக் கேணி, புதுப்பேட்டை, சேத்பட், துறைமுகம், மண்ணடி பகுதிகளுக்கு அமைச்சரே விசிட் அடித்தும் பணம் வாங் காமல் புறக்கணித்தனர் முஸ்லிம்கள். அமைச்ச ரைத் திட்டியும் தீர்த்தனர். முஸ்லிம் அல்லாத மற்ற பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு முடிந்த அளவுக்கு பட்டுவாடாவை செய்து முடித்தது மேயர் தரப்பு. அதேசமயம், பகுதிச் செயலாளர்களும், வட்டச் செய லாளர்களும் 50 சதவீதத்தை விநியோகித்து விட்டு 50 சதவீதத்தை ஸ்வாஹா செய்து விட்டனர். "ஆடித் தீர்த்த மந்திரிகளில் அமைதியாக இருந்ததும், ஒண்ணுமே செய்ய முடியாமல் தவித்ததும் அப்துல் ரஹீம்தான்' என்கிறார்கள் மத்தியசென்னை ர.ர.க்கள்.
திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதன்

ஐ.பெரியசாமியின் பூர்வீகமான வத்தலக்குண்டு பகுதியில் 18 வார்டுகளிலும் அ.தி.மு.க.வினர் பணம்தர முயன் றும் முடியவில்லை. அதையடுத்து அமைச்சர் விசுவநாதனே மதியம் அங்கு வந்து பொறுப்பாளர்களான ந.செ. பீர்முகமது, ஒ.செ.பாண்டி, ஒன்றியத் தலைவர் மோகன் ஆகியோரைச் சந்தித்து, அவர்களிடம் கோபமாகப் பேசினார். “"பதவியைத் தக்க வைக்கணும்னா எப்படியாவது அதிக ஓட்டுகள் வாங்கி யாகணும்'’என்று மிரட்டாத குறைதான். ஐ.பெரியசாமிக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியில் தி.மு.க.வை விட 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெறுவதாக எடுத்த சபதத்தையும் நிறைவேற்ற வேண்டுமே? இதனால், தன் மைத்துனர் கண்ணனையும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொருளாளர் சீனிவாசனையும் கடைசி நேரத்தில் அங்கு களமிறக்கினார். ரூ.500-700 வரை கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் நகரம், பாறைப்பட்டி, கரிசல்பட்டி போன்ற ஐ.பெரியசாமியின் செல்வாக்குப் பகுதிகளில் இரண்டாவது முறையும் பணம் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் காந்திராஜன் முன்னர் அ.தி.மு.க.வில் இருந்தபோது அவரை ஆதரித்தவர்கள் பழைய பாசத்தைக் காட்ட லாம் என்பதால், அவர் களைக் கண்காணிக்கு மாறு ஆட்களை ஏவினார் விச்சு. பதவிபடுத்தும் பாட் டில், வேட்பாளர் உதயகுமாரை, கடைசி 2 நாள்களில் அவ ருடைய பகுதியான நிலக் கோட்டையிலேயே இருந்து அங்குள்ள வேலைகளைப் பார்க் கச் சொல்லிவிட்டு, முழுக்க களம் இறங்கினார் அமைச்சர் விச்சு.
ஸ்ரீபெரும்புதூர் சின்னையா

திருப்போரூரில் வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கும் நிர்வாகிகளுக்கும் ஆகவில்லை என்பதால் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை ஸ்பாட்டுக்கு அழைத்து பணப்பட்டுவாடா செய்தார் சின்னையா. அவர்களின் கையில் கொடுக்கப்பட்டிருந்த லிஸ்ட்டில் உள்ள மாற்றுக்கட்சிக்காரர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பணப்பட்டுவாடா நடந்தது. "யாருக்காவது பணம் கிடைக்கலைனு புகார் வந்தா அவ்வளவுதான்' என்று எச்சரித்து அனுப்பினார்.
சின்னையாவுக்கு அதிகப் பொறுப்பு ஸ்ரீபெரும்புதூரில்தான். "எக்காரணம் கொண்டும் தி.மு.கவின் ஜெகத்ரட்சகன் ஜெயித்துவிடக் கூடாது என்ற மேலிட இன்ஸ்ட்ரக்ஷனால் படுதீவிரமாக பணப் பட்டுவாடா செய்ய முடிவானது. மொத்தம் 20 லட்சம் வாக்காளர்கள். அதனால் 20சி, ஓ.பி. மூலம் சின்னையாவுக்கு வந்தது' என்கிறார்கள் கட்சிக்காரர்கள். அதில் "அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்க வேண்டியதில் பாதியை மட்டுமே ஒதுக்கினார்' என அதற்குப் பொறுப்பாளரான மாநில இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர், ஓ.பியிடம் புகார் தெரிவிக்க, ஓ.பி. இதுபற்றி கேட்டபோது சின்னையா மறுக்க... டென்ஷனான அலெக்ஸ் நேரடியாகவே சின்னையாவிடம் வந்து பண விவகாரமாக சண்டை போட ஆரம்பித்துவிட்டார். கடைசி நேர பரபரப்பால் கட்சி நிர்வாகிகள் மிரண்டு போய், அடிதடி ஏதும் நடக்காதபடி தடுத்துவிட்டனர். "திட்டமிட்ட அமௌண்ட்டில் பாதிகூட கீழே போகவில்லை' என்ற புலம்பல் பரவலாகக் கேட்கிறது.
இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரன் 35 லட்ச ரூபாய் பணத்துடன் சிக்கிக்கொண்ட தாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட, அவர் விபத்தில் சிக்கிக்கொண்ட தாக இன்னொரு தரப்பில் செய்தி பரவியது. இதுபற்றி வந்த போன்கால் களுக்கு பதில் சொல்வதற்கே சின்னையாவுக்கு கடைசி நேரம் சரியானது. ""எல்லாம் ஜெகத் கிளப்பி விடுற வேலைய்யா'' எனப் புலம்பியபடியே இருந் தார்.
இராமநாதபுரம் சுந்தரராஜன்

தலித்களின் வாக்குகள் அ.தி.மு.க. விற்கு வராது. பரமக்குடி, செல்லூர், மரு தகம், தேரிருவேலி, எட்டிச்சேரி, பொந்தம் புளி, காமன்கோட்டை, போகளூர், பார்த்தி பனூர், சத்திரக்குடி ஆகிய ஊர்களுக்கும் சென்ற அமைச்சர், ""இமானுவேல் சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வுள்ளது. கொஞ்சம் எனக்காக பொறு மையா இருக்கணும்'' என திண்ணை பிரச்சாரம் செய்ததோடு மட்டுமில்லாமல் கும்பிட்டும் விழுந்திருக்கிறார்.
திருப்பூர் தோப்பு வெங்கடாசலம்

நாகை காமராஜ்

அவர்களோ, ""உங் களை ஜெயிக்க வச்சதுக்கு எங்களுக்கு என்ன செஞ்சீங்க? தனியா இருந்த வலங்கைமான் இப்ப உங்க நன்னிலம் தொகுதியிலே இருக்குது. பேருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபீஸ் இருந்தது. அதுக்கும் நீங்க கரண்ட்பில் கட்டாத தால் நாதியத்துக் கிடக்குது. இப்பதான் இந்த ஏரியாவே உங்க கண்ணுக்குத் தெரியுது. நம்ம உறவு மட்டும் எப்போதும் போல இருக்கும். ஓட்டு யாருக்குங்கிறதை நாங்கதான் முடிவு செய்வோம்'' என்று சொல்லி அனுப்பிவிட் டார்கள்.
திருவள்ளூர் ரமணா

தேர்தல் வேலை பார்க்கும் ர.ர.க்களுக்கு ஒரு பக்கம்... இன்னொரு பக்கம் "நாங்க தலைமையிலிருந்து வர்றோம், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர்றோம்'னு சொல்லிக்கிட்டு லெட்டர்பேட் கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் எல்லாம் வந்து அமைச்சரை முற்றுகையிட... அவர்களுக்கு 25 ஆயிரம், 30 ஆயிரம் என ஒவ்வொருத்தருக்கு ஒரு ரேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர் ஆனந்தன்

""சூரியனைவிட, முரசைவிட ஏழெட்டு சதவீதம் லீடிங்ல நம்ம சத்யபாமா ஜெயிப் பாங்கனு நக்கீரன்லயே போட்டிருக்கான். அதுக்காக கருணைக்கிழங்கா நாம இருக்கக்கூடாது. ஏடா கூடமா ஏதாவது ஆனால் வனத்துறை என்னை விட்டுட்டுப் போயிடும்'' என்று வெளிப்படையாகக் கூறி செயல்வீரர் களோடு கலந்து நின்று வீட்டுக்கு வீடு ஓட்டுக்கு மொய் கொடுக்கத் தூண்டிக்கொண்டிருந்தார் அமைச்சர் ஆனந் தன். ""கடைசி ரெண்டு நாளும் மத்த அமைச்சர்கள் எல்லோரும் ஓட்டு பற்றி கவலைப்பட்டாங்க. இவரு 10 லட்சம் கொடு, 20 லட்சம் கொடுனு எங்க மாதிரி தனியார் பள்ளிக்கூட தாளாளர்களின் உசுரை வாங்கிவிட்டார் என்ன செய்வது? பாதிக்கும் மேற்பட்ட ஸ்கூல்ல கொடுத்துட்டாங்க'' அமைச்சரின் கெடுபிடி பற்றி புழுங்கினார்கள் தனியார் பள்ளி முதலாளிகள்.
ஆனாலும் ஓட்டுக்குத் துட்டு என்ற குறிக்கோளில் எந்தக் குறையும் வைக்கவில்லை வனத்துறை.
தருமபுரி பழனியப்பன்

விஷயம் பா.ம.க.வினர் மூலம் அதிகாரிகளுக்குப் போனது. தலித் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துகொண்டிருந்த முருகன், மணிவண்ணன், வேலு உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த லட்சங்களையும் பறிமுதல் செய்தனர்.
""மினிஸ்டர் பழனியப்பன் சொல்லித்தானே எல்லாம் செஞ்சோம். எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன், விடமாட்டேங்கறார். மினிஸ்டரும், மா.செ.யும் செல்போனை ஆஃப் பண்ணிட்டாங்க. இவங்களை நம்பினதுக்கு இது வேணும்யா'' புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆறுமுகமும், அன்பழகனும்.
தன் பி.ஏ. சக்திவேலிடம் பெருந்தொகையை கொடுத்து, பாப்பிரெட்டிப்பட்டிக்கு அனுப்பிய அமைச்சர் பழனியப்பன், "" "தருமபுரியில் அ.தி.மு.க. தோல்விக்கு அமைச்சர் பழனியப்பன்தான் காரணம்'னு நம்ம கட்சிக்காரங்களே பிட் நோட்டீஸ் அடிச்சு பரப்பிட்டானுங்க. அந்த நோட்டீஸை அடிச்சது யார், யார்னு எனக்குத் தெரிஞ்சாகணும்''... 23-4-14 நள்ளிரவில் கட்சியினரை வறுத்தெடுத்த அமைச்சர் பழனியப்பனுக்கு 24-4-14 காலையில் தருமபுரித் தொகுதியின் பல பூத்துகளில் இருந்தும் வந்த செய்தி பதட்டத்தை உண்டாக்கிவிட்டது.
உடனே கலெக்டர் விவேகானந்தனைத் தொடர்புகொண்ட அவர் ""என்னங்க இது பெரிய அநியாயமா இருக்கு? அத்தனை பூத்துகளையும் பா.ம.க.காரங்க கேப்ஸர் பண்ணியிருக்காங்க. உள்ளே அ.தி.மு.க. ஏஜெண்டு உட்காரக்கூடாது என்று பிடரியைப் பிடித்து வெளியே தள்ளிட்டாங்க. தொகுதி முழுக்க இந்த அராஜகம் நடந்துகொண்டிருக்கு'' அலறத் தொடங்கினார் அமைச்சர்.

""கண்ணப்பனுக்கு சீட் கொடுக்காததால் யாதவ சமுதாய வாக்குகளின் அதிருப்தி, இராஜகண்ணப்பனின் ஆதரவாளரும், சிவகங்கை தேர்தல் தொகுதிச் செயலாளர் தமறாக்கி பாஸ்கரன் அம்பலம் ஒத்துழை யாமை ஆகியவற்றால், நொந்துபோன அமைச்சர் உதயகுமார், சிவகங்கை செந்தமிழ் நகரிலுள்ள இராஜகண்ணப்பனின் வீட்டிற்குச் சென்றார். கூச்சம் பார்க்காமல், சபை நாகரிகம் பார்க்காமல் இராஜ கண்ணப்பனின் காலில் பொத்தென விழுந்து... ""நான் என்ன தப்பு பண்ணினாலும் என்னை மன்னிச்சிடுங்க'' என அரற்ற... சம்பவத்தை எதிர்பார்க்காத கண்ணப்பனும் மிரண்டுபோய் ஒத்துழைப்பு தருவதாய்ச் சொன்ன பிறகே எழுந்துள்ளார் அமைச்சர்.
இது இப்படியிருக்க...
""நீங்கதான் அடுத்த மாவட்ட செயலாளர், நீங்கதான் அம்மா பேரவை செயலாளர், நீங்கதான் அடுத்த ஒன்றிய செயலாளர்'' என மாவட்டத்தில் உறுதிமொழி களை வாரி வழங்கி இருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். ஞாயிற்றுக் கிழமை வாக்கில் ஒரு பிரிவினருக்கு, திங்கட்கிழமை வாக்கில் மற்றொரு பிரிவினருக்கு விருந்துகளாக வைத்து உசுப்பிவிட... அதன் பிறகு "நான்தான் மா.செ., நான்தான் ஒ.செ.' என குரல்கள் ஒலிக்க... உதயகுமாரோ ரிலாக்ஸாக வேடிக்கைப் பார்க்கி றார். கல்லல் பகுதி பா.ஜ.க. ஒன்றிய தலைவர் கட்டத் தேவனையும், செயலாளர் வெள்ளைத்துரையை யும் அ.தி.மு.க.விற்கு அழைத்து வந்து காட்டி யிருக்கிறார் உதய குமார்.
நாமக்கல் தங்கமணி

""வசூலையெல்லாம் வெளியில வச்சுக்கிட்டாரு. டொனேஷன் கேட்டு எங்களை வாட்டி வதைக்கலீங்க'' தொழிலதிபர்களின் பாராட்டுக்கு காரணம் இது.
""அமைச்சர் தகதகனு நல்ல செகப்பு. வெய்யில்ல அலையோ அலையினு அலைஞ்சதுல நனைஞ்ச பனை மாதிரி கறுத்துப் போயிட்டாரு. 22-ஆம் தேதி திருச்செங்கோட்ல இருந்து குமாரபாளையம் வரை, 23-ஆம் தேதி ராசிபுரத்தில் இருந்து நாமக்கல்லுக்கு மோட்டார் பைக் பிரச்சாரம், 800 மோட்டார் பைக்குகள், அதுல ஒண்ணுல அமைச்சரும் வந்தார். 15 கோடி வரை செலவு செய்ய முடியும்னு தலைமைக்கு எழுதிக் குடுத்திருந்தாராம். தாராளமா செலவு செஞ்சாருங்க. வேட்பாளர் சுந்தரமும் பசை பார்ட்டிதானுங்க. எழுதிக்கொடுத்ததில் முக்கால் வாசியை கடைசி ரெண்டு நாள்லதான் வாரிக்கொடுத் தார்கள்'' அமைச்சர் கொடுத்ததைவிட தாராளமாகப் பாராட்டுகிறார்கள் நாமக்கல் இலை நிர்வாகிகள்.
விருதுநகர் ராஜேந்திரபாலாஜி

ஈரோடு தாமோதரன்

ஈரோட்டில் அமைச்சர் இல்லாததால் பொள்ளாச்சியில் இருந்து ஈரோட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டார் தாமோ தரன். ""அமௌண்ட்டை முழுசா கொண்டுபோய் சேர்க்க ணும்ப்பா. நீங்க நெனைச்சா ஈஸியா என்னை ஏமாத்திப்பிட லாம். ஆனால் என்னால அம்மாவை ஏமாத்த முடியாது, புரியுதா? 22-ஆம் தேதி காலை 6 மணிக்குள் ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகளில் ரவுண்ட்ஸ் முடித்துவிட்டார்.
23-ஆம் தேதி காலையில் கே.வி.ராமலிங்கத்திடம் 20 எல் கொடுத்து, ""குறை வைக்காதீங்க. பத்தாட்டி சொல்லுங்க. அரேஞ்ச் பண்ணிடலாம்'' சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் பட்டுவாடா கணக்கு வழக்கு லிஸ்ட்டுகளை கலெக்ட் பண்ணுவதற்குக் கிளம்பினார் தாமோதரன்.
புதுக்கோட்டை சுப்ரமணியன்

கந்தர்வக்கோட்டைக்கான கடைசி நேர பட்டுவாடா பொறுப்பும் சுப்ரமணியத்திடமே ஒப்படைக்கப்பட்டது. தொகுதிப்பக்கம் போவ தற்குப் பயந்த சுப்ரமணியம் அதை தனக்குத் தெரிந்த கட்சிக்காரர் களிடம் கொடுத்து, "தலைக்கு 200ன்னு பட்டுவாடா பண்ணிடுங்க' என்று அனுப்பிவைத்தார். மாலையில் திரும்பிய அவர் கள், "கரெக்ட்டா கொடுத்தாச்சு' என்றனர். ஆனாலும், தொகுதியின் பல இடங்களில் பணம் வரலை என்ற குரல் ஒலிக்க ஆரம் பித்ததால் வாக்குப்பதிவு நாளன்று பதட்டமாகவே இருந்தார் அமைச்சர் சுப்ர மணியன்.
தென்காசி செந்தூர்பாண்டியன்

வைகோவின் சொந்த ஏரியாவான குருவிகுளம் ஒன்றியத்தில், ஒப்பந்தக்காரர்களிடம் "பணம் வாங்கி ஓட்டுக்கு கொடுங்க' என கி.செ.க்களுக்கு சொல்லப்பட்டது.
முக்கியமான பணிகளை மேலநீலிதநல்லூர் ஒன்றியத் தலைவர் முருகையா பாண்டியனிடம் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஒப்படைக்க, "கட்சி மேலிடத்தால் கண்டிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டவரிடம் எப்படி தரலாம்?' என அமைச்சர் முகத்திற்கெதிராகவே கேட்டிருக் கிறார் பொறுப்பாளரான சுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக