யாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்!- டக்ளஸ் தேவானந்தா
யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படவுள்ளதாக ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தற்காலிக தொழிலாளர்களாக கடமையாற்றிய 87 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டாலும், அடுத்த ஆட்சி வரும் வரையில் மாநகர சபை செயற்படும். உங்கள் தொழிலுக்கும் தொழில் தருநருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
நேர்மையான, நடைமுறைச் சாத்தியமான அரசியலை நான் பின்பற்றிக் கொண்டு வருகின்றேன்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நானும் ஒரு வகையில் காரணம். ஒரு காலகட்டத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற காரணத்தினால் மக்களின் கருத்துக்களுடன் சேர்ந்து போவதற்கு இணங்கி வருகின்றேன்.
இன்று வழங்கப்படும் நியமனங்கள் எவரின் அழுத்தத்தினாலும் வழங்கப்படவில்லை என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய நிகழ்விற்கு வருகை தர தவறிவிட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் விரைவில் வழங்கப்படுமென்றும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக