சென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி சென்னையில் பாகிஸ்தான் உளவாளி கைது
செ ன்னையில் சதிதிட்டத்துடன் தீவிர வாதிகள் சிலர் பகி இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசார் தகவல் கொடுத்ததை தொடர்ந்து மாநில உளவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது பாகிஸ்தான் உளவாளியான ஜாகீர் உசேன் என்பவன் மண்ணடி பகுதியில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது
இதையடுத்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாயில் ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜாகீர் உசேனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவம் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களின் வரைபடம், சேட்டிலைட் போன்கள், கள்ள நோட்டுகள் ஆகியவை கைபற்றபட்டன.
அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் :-
இலங்கையை சேர்ந்த ஜாகீர் உசேனை அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சிலர் மூளைச் சலவை செய்து, இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங் களை நிகழ்த்துவதற்கு தயார் படுத்தி உள்ளனர். குறிப்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப் பெரிய நாசவேலையில் ஈடுபடுவதற்கு ஜாகீர் உசேனுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சதிச் செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன், மாதத்துக்கு 3 முறை அவன் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளான். சென்னை மாநகரை தகர்க்க இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து மனதை மாற்றுவதற் கும் ஜாகீர் உசேன் திட்ட மிட்டிருந்தான். இதற்கு சென்னையில் மறைமுகமாக முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜாகீர் உசேனுக்கு உதவிகள் செய்திருக்கலாம் என்றும் கியூ பிரிவு போலீசார் கருது கிறார்கள். இது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.போலீசார் அவனை புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடத்த ஜாகீர் உசேனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7 நாட்கள் அவனை காவலில் வைத்து விசாரிக்க கியூ பிரிவு அதிகாரிகள் திட்டமிட் டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக