புதன், 30 ஏப்ரல், 2014

சுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம்: கூட்டத்திலிருந்து அனந்தி வெளிநடப்பு
த.தே. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சபையிலிருந்து அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றய தினம் நடைபெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமான மேற்படிக் கூட்டத்தில் திருமதி அனந்தி சசிதரன், ஜெனீவா சென்றிருந்தமை தொடர்பாகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாகவும் சுமந்திரன் மற்றும் அனந்தி ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் நடந்துள்ளது.
இதனையடுத்து அனந்தி சசிதரன் 12மணிக்கு சபையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விடயம் தொடர்பாக திருமதி அனந்தி சசிதரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, என்னுடைய ஜெனீவா பயணம் குறித்து விமர்சிப்பதற்கான கூட்டம்போன்றே இன்றைய கூட்டம் நடைபெற்றது.
நான் கட்சியின் ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றேன்.
மேலும் இன்றைய தினம் சபையில் நடைபெற்ற விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றேன். ஆனால் மிக விரைவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி வெளிப்படுத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக