செவ்வாய், 29 ஏப்ரல், 2014


வெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு
வெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 26 இந்தியர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 


வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜெர்மன் நாட்டு வங்கி ஒன்றில் பணத்தை பதுக்கி வைத்திருந்த 26 இந்தியர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலையும், அதுதொடர்பான விவரங்களையும் முத்திரையிட்ட கவரில் வைத்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக